Tag Archive: பருவ மழைப் பயணம்

பச்சைக்கனவு

என் வலக்கையின் மணிக்கட்டு ஓரமாக ஒரு சிவந்தபுள்ளி. அது அரித்துக்கொண்டே இருக்கிறது. இனியதோர் இருப்புணர்த்தல். அதுதான் மழைப்பயணம் முடிந்து வந்த நினைவு. அட்டை கடித்த தடங்கள் சில அரித்து சிவந்து தடித்து புள்ளியாகி கொஞ்சநாள் நீடிக்கும். ஆனால் இம்முறை அட்டைக்கடி மிகக்குறைவு. ஏன் என்று தெரியவில்லை. அட்டைகள் பெருகிக்கிடக்கவேண்டிய ஈரச்சதுப்புகள் பலவற்றை தாண்டிக்கடந்தோம்,. சென்றமுறை கால்களெல்லாம் ஒட்டிக்கொண்டு நெளிந்த மேற்குமலையின் உரிமையாளர்களை பெரும்பாலும் காணமுடியவில்லை. இத்தனைக்கும் சென்றமுறை போல உப்புக்கரைசலுடன் நாங்கள் செல்லவுமில்லை. உப்பு வாங்கி காரிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100070

பருவமழை- கடிதங்கள்

திரு. ஜெயமோகன் அவர்களின் வாசகர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் அவர் எழுத்துக்களில் கவரப்பட்டு – தத்துவம், ஆன்மீகம், கீதை, மதம், வரலாறு, புனைவு, பகடி, சங்க இலக்கியம்- அவரைத் தொடர்பவர்கள். எனக்கு அவர் எழுத்துக்களில் எங்கும் நீக்கமறக் காணப்படும் உவமைகள்தான் முதலில் கவருபவன, உவப்பளிப்பன. அதுவும் இயற்கை பற்றி என்றால் சொல்லவே வேண்டாம். இந்தப் பருவ மழைப் பயணம் மற்றொரு உதாரணம். கட்டுரையில் ஆரம்பத்தில் // புல்வெளியின் பச்சைக்கு நடுவே மரக்கூட்டங்கள் நீலம்கலந்த பச்சையுடன். புல்வெளியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29173