குறிச்சொற்கள் பரீக்ஷித்
குறிச்சொல்: பரீக்ஷித்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11
அஸ்தினபுரியின் அவைக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்கள் பொறுமையிழந்தவர்களாக உடலை அசைத்துக்கொண்டிருந்தனர். ஏவலர்களிடமும் அந்தப் பொறுமையின்மை இருந்தது. சம்வகை அவையை நோக்கியபடி நின்றாள். யுயுத்ஸு அங்கிலாதவன் போலிருந்தான். இளையோர் நால்வரும் நிலம்நோக்கி உடல் அசைவிலாது உறைந்திருக்க அமர்ந்திருந்தனர்.
யுதிஷ்டிரன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6
அன்று முன்விடியலில்தான் இளவரசரை பலிநகருக்கு கொண்டுவந்தார்கள். அவரை கொண்டு வருவதற்கென்று விந்தையானதோர் தேர் அமைக்கப்பட்டிருந்தது. அகன்ற தேர்பீடத்தில் வெண்கலத்தாலான தொட்டி ஒன்றில் நீர் நிறைக்கப்பட்டு அதற்குள் மிதந்து கிடந்த பிறிதொரு கலம்மீது அவர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4
அஸ்தினபுரியின் பேரங்காடியை ஒட்டி உத்கலத்திலிருந்து வரும் வணிகர்களுக்காக அவர்களால் பணம் சேர்த்து கட்டப்பட்ட அந்நான்கடுக்கு மரமாளிகை ‘ரிஷபம்’ அமைந்திருந்தது. அதன் மேல் உத்கலத்தின் வணிகக் கூட்டமைப்பின் எருதுக்கொடி பறந்தது. மாளிகை முகப்பில் குபேரனின்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3
பகுதி ஒன்று : வேள்விமுகம்
குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2
பகுதி ஒன்று : வேள்விமுகம்
வேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில்...