Tag Archive: பரப்பியம்

வெகுஜனக் கலை என்பதைப் பற்றி…

  அன்புள்ள ஜெயமோகன், தங்கள் வலைத்தளத்தில் வெகுஜனவியம் (பரப்பியம் என்றும் குறிப்பிடப்படுவது) தொடர்பாக நான் எழுதியவற்றையும் உங்கள் மறுமொழிகளையும் பதிப்பித்து விவாதத்தை பலர் கவனத்திற்கும் கொண்டு சென்றதற்கு நன்றி. அதன்பிறகு, பேராசிரியர் அ.ராமசாமி அவர் வலைப்பூவில் அதைப்பற்றி எழுதியதை நீங்கள் வெளியிட்டிருந்ததை இன்றுதான் கண்ணுற்றேன். உங்களுக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலோ என்னவோ நீங்கள் அவரது குறிப்பைப் பற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. பேராசிரியர் அ.ராமசாமிக்கும் போதிய அவகாசம் இல்லாததால்தான் அவரால் என்னுடைய கருத்துக்களை விவாதிக்க முடியாமல் போயிருக்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8668

பரப்பியம் அல்லது வெகு ஜன வாதம் குறித்து ..

பரப்பியம் அல்லது வெகுஜனவாதம் குறித்து இந்த இணையதளத்தில் நடந்த விவாதங்களை ஒட்டி ஊடக ஆய்வாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தமிழ்த்துறை தலைவருமான அ.ராமசாமி இந்த கட்டுரையை அவரது இணையதளத்தில் பதித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் இந்த தளத்தில் எழுதியவற்றை நினைவுகூர்ந்து பரப்பியத்தின் இயல்பு மற்றும் அச்சொல்லை பற்றிய அவரது தரப்பை பதிவுசெய்திருக்கிறா http://www.ramasamywritings.blogspot.com/

Permanent link to this article: https://www.jeyamohan.in/8491

பரப்பியம் மீண்டும்

அன்புள்ள ஜெயமோகன், விரிவான பதிலுக்கு நன்றி. உங்கள் உழைப்பும், மொழியின் மீதான அக்கறையும் நம் தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்கத்தக்கது. உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்வது பற்றிய குற்றவுணர்விருந்தாலும், மேலும் சில வார்த்தைகளைச் சொல்ல அனுமதியுங்கள். தமிழில் கலைச்சொற்கள் சிறுபத்திரிகைக்களம், கல்வித்துறை மற்றும் சோவியத் மொழியாக்க நூல்கள் ஆகியவற்றில் நடைபெறுவதை சுட்டியிருந்தீர்கள். நான் சிறுபத்திரிகைக் களத்தை மட்டுமே இதுவரை அறிந்திருக்கிறேன். ஒரு சில காரணங்களால் எனக்கு அதன் மீதே அதிக நம்பிக்கையும்கூட இருக்கிறது. அது தவறாக இருக்கலாம். உதாரணமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8382

பரப்பியம்

அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாள் யோசித்த பிறகு இன்று ஓர் அவசர உணர்வுடன் எழுதுகிறேன். இன்று ஃபேஸ் புக்கிலும்கூட பெருந்தேவி இதைக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். நீங்களும் உங்கள் வலைத்தளத்தில் மீண்டும் “பரப்பிலக்கியம்” குறித்து ஒரு கட்டுரையை தரவேற்றியுள்ளீர்கள். நீங்கள் பாபுலர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக “பரப்பு” என்ற வேர்ச்சொல்லை பயன்படுத்தி எழுதுவதை மிகுந்த மனச்சங்கடத்துடன் வெகுநாட்களாக கவனித்து வந்தேன். அதை நீங்களாக உருவாக்கினீர்களா, வேறெதும் சொல்லாடல் களத்திலிருந்து எடுத்தாள்கிறீர்களா என்று தெரியவில்லை. இப்போது அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8361