Tag Archive: பரதன்

கலைஞனின் தொடுகை

மலையாள இயக்குநர் பரதனுக்கும் அவருடைய திரைக்கதையாசிரியர் ஜான் பால் அவர்களுக்கும் இடையேயான உறவு முழு வாழ்நாளும் நீண்ட ஒன்று. பூசல்களும் பேரன்புமாக. மிக அபூர்வமாகவே அத்தகைய உறவுகள் அமைகின்றன. பரதன் ஜான் பால் மாஸ்டரைவிட நான்கு வயது மூத்தவர். ஜான் பால் அவர்களை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். நாங்கள் இணைந்து ஒரு படம் எழுதுவதாக இருந்தது. நான் சினிமாவில் மட்டுமல்ல இதுவரையிலான தனிவாழ்க்கையில்கூட நேரில் சந்திக்கநேர்ந்த மனிதர்களில் ஜான் பால் மாஸ்டர் மிக மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97626

ஆதல்- கடிதங்கள்

ஜெ சமீபத்தில் நீங்கள் எழுதிய முக்கியமான கட்டுரை ஆதல். ஒரு மனிதர் எதை ஆக நினைக்கிறார் எதை ஆகாமலிருக்க நினைக்கிறார் என்பதற்கான காரணங்களை எங்கே தேடமுடியும்? லோகிததாஸ் எம்டி ஆகாமலிருக்க முயன்றார். ஆனால் பரதன் ஆக முயன்றார். இரண்டுமே அவருக்கு இரண்டுவகையான பயணங்கள் எம்.டி. வாசுதேவன் நாயர் லோகிததாஸ் போன்றவர்களுக்கு அப்பா போல. அப்பாவாக இல்லாமலிருக்கத்தான் நாமனைவருமே முயற்சிசெய்கிறோம். பரதன் அவருக்கு ஒரு மூத்தவழிகாட்டி. அதைப்போல ஆக நினைக்கிறோம். குருவாக ஆக முயலாதவர் எவரும் இல்லை பரதனுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87835

ஆதல்

  2003 டிசம்பர் மாதம்  பாஷாபோஷணி மலையாள இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு லோகி தொலைபேசியில் பேசினார். ஆழ்ந்த குரல்.  “நான் லோகிததாஸ் பேசுகிறேன்” என்றபோது அது மலையாளத்தின் நட்சத்திர திரைக்கதை ஆசிரியர் என்று நினைத்துப்பார்க்க என்னால் இயலவில்லை. அதற்கு முன்பு கமல்ஹாசன் என்னை தொலைபேசியில் அழைத்தபோது நாலைந்துமுறை வரைக்கும் யாரோ குரல்போலி செய்து ஏமாற்றுகிறார்களோ என்னும் ஐயம்  இருந்தது எனக்கு. “யார்?” என்று கேட்டேன்.  “நான் சில திரைக்கதைகளை எழுதியிருக்கிறேன்” என்றார். ”நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87687

காமத்தின் கலை, பரதனின் நினைவில்…

      இன்று நண்பர் சுகா வந்திருந்தார். மதியம் வரை உரையாடிக்கொண்டிருந்தோம். நாங்கள் எப்போது சந்தித்தாலும் பரதனைப்பற்றிப் பேசாமலிருப்பதில்லை. இன்றும் இருவருமே ஒருவகையான உணர்வெழுச்சியுடன் அவர் படங்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தோம். பரதனின் படங்கள் அனைத்துமே பிறரால் கதை -திரைக்கதை எழுதப்பட்டவை. கணிசமானவை ஜான்பால், பத்மராஜன் எழுதியவை. சில வலுவான படங்களை லோகிததாஸ். பி.ஆர்.நாதன் சில சிறந்தபடங்களுக்கு எழுதியிருக்கிறார். ஆனால் அத்தனை படங்களும் பரதன் படங்கள்தான். ”பரதன் திரைக்கதையை வாசிக்கமாட்டார், பார்ப்பார். அதன்பின் அதன் மேல் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86796

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7

பகுதி இரண்டு : கானல்வெள்ளி [ 3 ] அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக மகனைத் தொடாமல் விலகி நின்றாள். அவள் கண்கள் விதுரனை நோக்கின. “விதுரா, நீ என்னிடம் என்ன சொன்னாய்?” என்றாள். “அரசி, பீஷ்மர் அரசரை  இத்தனை எளிதாக வெல்வாரென நான் நினைக்கவில்லை. நம் அரசரின் தோள்வல்லமை…” எனத் தொடங்கியதும் அம்பிகை சீறும்குரலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45701

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27

பகுதி ஆறு : தீச்சாரல் [ 1 ] அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர். நள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44540

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6

பகுதி இரண்டு : பொற்கதவம் [ 1 ] இருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்தங்களின் செம்புள்ளிகளின் வரிசையாகத் தெரிந்த மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே மூடப்பட்டிருந்த கதவுக்குப் பின்புறம் அணிவகுத்தனர். கோட்டைமீதிருந்த காவலன் புலரியின் முதற்சங்கை ஒலித்ததும் கீழே நின்றிருந்த யானை வடத்தைப் பிடித்திழுத்து முகவளைவு மீது தொங்கிய சுருதகர்ணம் என்னும் கண்டாமணியை அடித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43926

கம்பன் நிகழாத களங்கள்

அன்புள்ள ஜெ, வணக்கம்! கவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ,ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை. இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது, “இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி தன்னைத்தானே எழுதிக்கொள்ள யாரவது ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். அவர் மூலமாக அது தன்னை எழுதிக்கொள்ளும்.இது இலக்கியத்திற்கு மாத்திரமல்ல ,அறிவியல் ,தொழில், விளையாட்டு ,கலைகள்……என சகல துறைகளுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35003