Tag Archive: பயணம்

பச்சைக்கனவு -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, பருவ மழைப்பயணம். நினைவில் அகலாத மலைகள், தழுவிச் செல்லும் முகில்கள், பச்சைப் படாம் போர்த்த வெளிகள், அடர்ந்த பல்வகைத் தாவரங்கள், மலர்கள், பெருமரங்கள், நீரோடைகள், ஓயாது ஓசையிடும் அருவி, தொடர்ந்து வரும் மழை, மனதில் இன்னும் உலராத ஈரம். இரவு வீடு திரும்பினேன் உடல் சோர்வடையவில்லை அதனால் உறக்கம் உடனடித் தேவையாக இல்லை. மனம் உவகையில் இருந்தது. நீர்க்கோலத்தின் விடுபட்ட நான்கு அத்தியாயங்களைப் படித்து முடித்தேன். “மூன்றுநாள் மழை அனைவருக்கும் உடலோய்ந்த உள்வாழ்க்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100175/

பயணக்கட்டுரை

[நகைச்சுவை]   பயணம்சென்ற அல்லது செல்லாத ஒருவர் அப்பயணத்தில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்ததாக அவர் எண்ணுகிற அல்லது அப்படி சொல்ல விரும்புகிற அனுபவங்களை எழுதுவது பயணக்கட்டுரை என்று சொல்லப்படுகிறது.பயணக்கதை என்றும் சொல்லப்படுவதுண்டு. இரண்டுக்கும் அதிக வேறுபாடு இல்லை. பயணக்கதைகள் தமிழகத்தில் ராணுவ வீரர்களினால் உருவாக்கப்பட்டவை என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழர்கள் அதிகமாக ஊர்விட்டு ஊர் சென்றது பட்டாளத்துக்குத்தான். போன இடத்தில் என்ன செய்தாலும் வந்த இடத்தில் அனுபவங்கள் பெருகுவதென்பாது  மானுட இயல்பே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3709/

ஒரு மலைக்கிராமம்

டிசம்பர்  [2008] ஐந்தாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பி ராசிபுரம் நோக்கி பயணம். ஒரு மாருதிவேனில் நான் விஜயராகவன், கிருஷ்ணன், சிவா, தங்கமணி, பிரபு ஆகியோர் நண்பர் அசோக்குடன் அவரது சித்தப்பா வாழ்ந்த கிராமத்துக்குக் கிளம்பினோம். ராசிபுரத்திலேயே லட்சுமி கபேயில் சாப்பிட்டுவிட்டு ராசிபுரத்தை தாண்டி பட்டணம் என்ற ஊருக்கு வந்து அங்கிருந்தும் சென்று மதியம்தாண்டி அந்தக்கிராமத்துக்குச் சென்றோம். போதமலை என்று கிராமத்துக்குப் பெயர். போதமலை கிராமத்தை ஒட்டி செங்குத்தாக உயர்ந்து நிற்கும் மலை. மலையின் உடலெங்கும் பச்சை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/923/

கடிதங்கள்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம் , நலம் தங்களின் நலம் விழைகிறேன் . ஒருவர் தன்னிலைப்பாட்டில் உறுதியுடன் இருப்பது என்பது ஓர் தவம் என அறிகிறேன் . அது புத்தியில் ,மனத்தில் நிலைகொண்டுள்ளதாக இருக்கிறது . பல விவகாரங்களில் தங்களின் கருத்தாக சொல்லிவருவதை ஆழ்ந்து படித்து வருகிறேன் . பல சமயம் அது என் கருத்தாகவும் ஆகிவிடுகிறது .அதற்கு ஆதாரம் தாங்கள் கூறியிருப்பது , ஆம் எப்பேற்பட்ட  உண்மை , தான் ஜெயித்தே ஆகவேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85620/

விளையாடல்

இந்தியப்பயணம் முடிந்து திரும்பியபின் கொஞ்சநாள் நினைவுகளை மீட்டுவதுதான் இன்பமாக இருந்தது. என்னசெய்திருக்கலாம் என்ன செய்திருக்கக் கூடாது என்ற கருத்துக்கள், போன இடங்களில் பிறர் கவனிக்கத்தவறி தாங்கள் கவனித்த விஷயங்கள் பற்றிய வருணனைகள் என்று அதற்கு பல தளங்கள். தொலைபேசியில் பேசும்போது சிவா சொன்னார் ”ஒரு மனக்கொறைதான் கெடந்து உறுத்துது. அந்த பூசாரிப்பையனுக்கு ஒரு அம்பதுரூபா கையிலே கொடுத்திருக்கலாம்” சிவா சொன்னது பன்னஹல்க அஜய்குமாரைப் பற்றி. நல்கொண்டா அருகே பன்னகல் என்ற ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே ஆந்திர தொல்பொருள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/783/

தேசம்

1988ல் நான் வாரங்கல் ரயில்நிலையத்தை அடைந்தபோது எனக்கு வயது 26. இந்தியாவை தானும் கண்டடையத் துடித்து கிளம்பிய தனித்த பயணி. கடலில் சம்பிரதாயமாக குளித்தபிறகு என் பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினேன். காளஹஸ்தியின் உடைந்த கோயில்களையும் திருப்பதியின் நெரிசலிடும் கூட்டத்தையும் கண்டபிறகு வடக்குநோக்கி செல்ல ரயில் பிடிக்கும்பொருட்டு வாரங்கல் வந்தேன் .என்னிடம் பணம் குறைவாகவே இருந்தது. ஜவகர்லால் நேருவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி அரசு சலுகைக் கட்டணத்தில் அளித்த நேருயாத்ரி என்ற பயணச்சீட்டும் வாரங்கல் ஒப்புநோக்க சின்ன ஊர்.ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/386/

பயணம்- கடிதம்

அன்புள்ள ஜெ, தலைப்பைப் படித்த உடனேயே மனம் ஒரு துள்ளு துள்ளியது. நீங்கள் சென்று வந்த இப்பகுதி இலையுதிர்கால வண்ணங்களுக்கு மிகவும் புகழ்பெற்றது. இலையுதிர்காலத்திற்காகக் காத்திருக்கும்ஓர் ஓவியப் பலகை. கண்ணுக்குத் தெரியாத அந்த அன்னையின் கரம் வண்ணங்களை அள்ளித் தூவக் காத்திருக்கும் ரங்கோலி களம். மொத்த மரங்களும் நாம் எதிர்பாரக்கக் கூடச் செய்யாத வண்ணத் தொகையாக, அவ்வருட வாழ்வின் உச்ச பட்ச மகிழ்வு தருணத்தில் தோகை விரித்த மயிலென வண்ணம் பூசி நிற்பதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76515/

கனடா – அமெரிக்கா பயணம்

இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா. அங்கிருந்து சிக்காகோவில் சிவா சக்திவேல் அவர்களின் வீடு. [எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாளின் மகள்] அங்கிருந்து பாஸ்டன் பாலாவின் இல்லம். அங்கிருந்து வாஷிங்டன் டிசி. கடைசியாக ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா. ஜூலை 25 அன்று திரும்புகிறேன். அருண்மொழியும் உடன்வருகிறாள்.இரு நாடுகளுக்கும் விசா வாங்கிவிட்டோம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/75074/

இமயச்சாரல் – 21

பில்லாவரிலிருந்து மாலையிலேயே கிளம்பி நேராக பாசோலி என்ற சிற்றூரை அடைந்தோம. உண்மையில் அது ஒரு நகரம். ஆனால் அங்கே பயணிகளின் வருகை அறவே இல்லாத காரணத்தால் தங்கும் வசதிகள் இல்லை. செய்திகளில் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று செய்தி வந்துகொண்டிருப்பதனால் பெரிதும் பாதிக்கப்படுவது அமைதிப்பகுதியான ஜம்முதான். பாசோலியில் ஒரு அரசு விருந்தினர் மாளிகையை தேடிப்பிடித்து கெஞ்சி இடம்பெற்று தங்கினோம். மெத்தையில் இருந்து வந்த மட்கும் நெடியையும் கழிப்பறை வாடையையும் தாங்கிக்கொண்டு தூங்க வைத்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60484/

இமயச்சாரல் – 20

ஜம்மு பகுதியை ஆலயங்களின் மாபெரும் இடுகாடு என்று ‘அலங்காரமாக’ சொல்லிவிடலாம். இந்தியக் கட்டிடக்கலையின் பிறப்பிடங்களில் ஒன்று இது. ஏனென்றால் காஷ்மீர சைவமும் பௌத்தமும் ஓங்கியமண். நேரடியாக காந்தாரக் கட்டிடக்கலையின் செல்வாக்கு இங்கே வந்தது. ஆகவே குறிப்பிடத்தக்க இரு கட்டடக்கலைகள் இங்கே உருவாயின. ஒரு முறையின் உச்சம் மார்த்தாண்ட் ஆலயம். ஜம்மு முழுக்க இன்னொரு வகையான கட்டடக்கலை உருவாகி வளர்ந்ததன் தடயங்கள் உள்ளன. அத்தனை கோயில்களும் இடிக்கப்பட்டன. பெரும்பாலானவை அடித்தளங்களாக எஞ்சுகின்றன. பாதிப்பங்கு இடிக்கப்பட்டு எஞ்சும் ஆலயங்களே நூற்றுக்கணக்கானவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60459/

Older posts «