Tag Archive: பனிமனிதன்

பனிமனிதன்

பனிமனிதனை நான் 1999 ல் தினமணி நாளிதழின் சிறுவர் மணியில் எழுதினேன். பதினொன்று வருடங்களுக்கு முன்பு. அப்போது இந்தக்கதைக்கு இளம் வாசகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அனேகமாக எல்லா வாரமும் இரு வாசகர் கடிதங்களாவது அச்சாகும். நம்முடைய சிறுவர் சிறுமியர் தமிழில் நல்ல கதைகளை வாசிக்க ஆசைப்படுகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு அது கிடைப்பதில்லை. காரணம் நம்முடைய பெற்றோர் குழந்தைகளுக்குத் தமிழ் நூல்களை வாங்கி அளிப்பதில்லை. பாடப்புத்தகங்களையே கஷ்டப்பட்டு வாங்கக்கூடிய பெற்றோர் நூல்களை வாங்கிக் கொடுக்காதது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6220

பனிமனிதன் ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, சங்க சித்திரங்கள் என்ற தங்களின் புத்தகத்தை படித்த பிறகு உங்களின் மற்ற புத்தகங்களை தேடித்தேடி வாங்கி உங்களின் எழுத்துகளுக்கு பரம இரசிகனாகிவிட்டேன்.  பின்தொடரும் நிழலின் கதை மற்றும் கன்னியாக்குமரி போன்ற புத்தகங்கள் மட்டுமே பாக்கி.  அதையும் 2010 புத்தக கண்காட்சியில் வாங்கிவிடுவேன். ஆனால் உங்கள் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது என சொன்னால் பனி மனிதன் என்ற நூல்தான்.  விஷ்ணுபுரம் படித்துவிட்டு இப்படி சொல்ல ஒருமாதிரியாக இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5974

கேள்வி பதில் – 22

தமிழில் சிறுவர் இலக்கியம் திருப்திபடக்கூடிய அளவிற்கு உள்ளதா? — ஹரன்பிரசன்னா. பொதுவாக இம்மாதிரிக் கேள்விகள் கேட்கப்படுகையில் அறிவுஜீவிகள், இல்லை என்ற பதிலை சோகமாகவோ வேகமாகவோ சொல்வதுதான் வழக்கம். அவர்களுக்கு உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட நுட்பமான ஆள் என்ற படிமம் கிடைக்கிறதே. ஆனால், “சரி, இதுவரை வெளிவந்தவற்றைப்பற்றிய ஒரு முழு மதிப்பீட்டை சரியான தகவல்களுடன் கொடு பார்ப்போம்” என்றுகேட்டால் பதில் இருக்காது. நாடகம், திறனாய்வு, கல்வித்துறைஆய்வு எதைப்பற்றியானாலும் இதுதான் நிலை. இங்கே எதையும் கூர்ந்து படிக்க, குறைந்தபட்சம் கவனிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72

ஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா

ஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்காக எழுதவேண்டும் என்று கூறப்படுவதுண்டு . தமிழில் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே குழந்தைகளுக்காக எழுதியதில்லை. அதற்கு அவர்களுடைய எழுத்து முறை ஒத்துவந்ததில்லை. இங்கு பெரியவர்களுக்காக எழுதி தோற்றுப்போன எழுத்தாளர்களும் துணுக்கெழுத்தாளர்களும்தான் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்கள். இத்தகைய எழுத்தில் ஏற்கனவே குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட கதைகளே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருப்பதை காணலாம் .ராஜாராணி கதைகள், மந்திரஜாலக் கதைகள், சாகசக்கதைகள் போன்றவை. குழந்தைகளுக்காக எழுதும்போது அவர்களுக்கு நற்செய்திகள், நீதிகள் சொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/431

» Newer posts