Tag Archive: பத்ரர்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76

75. காகத்தின் நகர் அரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை மேலும் பதறச் செய்தது. “செண்டுவெளிக்கு கொண்டுசெல்ல வேண்டுமா என்ன?” என்றார். அவன் மறுமொழி சொல்லாமல் தன் அறைக்கு சென்றான். ஏவலன் அவன் ஆடையைக் களைந்து இரவுக்குரிய மெல்லிய ஆடையை அணிவித்தான். மஞ்சத்தில் அமர்ந்தபடி அவன் சேடியிடம் மது கொண்டுவரச் சொன்னான். மூன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101128

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 75

74. நச்சாடல் ஆபர் அறைக்குள் நுழைந்ததும் விராடர் பணிவுடன் எழுந்து வணங்கி “வருக அமைச்சரே, அமர்க!” என்றார். ஆபர் தலைவணங்கி முகமன் உரைத்து பீடத்தில் அமர்ந்தார். பின்னர் “அரசே, நீங்கள் இந்நாட்டின் அரசர். நான் உங்கள் ஊழியன். நான் உங்களை பணியவேண்டும். உங்களை வாழ்த்தவேண்டும். அதுவே இந்நாடகத்தின் நெறி. இனி இது மீறப்பட்டால் நான் துறவுகொண்டு கிளம்பிச்செல்வேன்” என்றார். “இல்லை…” என்றார் விராடர் பதற்றத்துடன். “என் தந்தை எனக்களித்த பொறுப்பு இது. இதை முழுமையாக ஆக்கிவிட்டே நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101114

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49

எட்டாம் காடு : மைத்ராயனியம் [ 1 ] சாந்தீபனி குருநிலையில் இளைய யாதவர் நான்குமாதங்கள் தங்கியிருந்தார். முதல்சிலநாட்களுக்குப்பின் அக்குருகுலத்தின் பெரும்பாலான மாணவர்கள் அவருக்கு அணுக்கமானார்கள். புலர்காலையிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு கால்நடைகளுடன் அவர் காட்டுக்குள் சென்றார். பசுக்களை அணிநிரைத்துக் கொண்டுசெல்லவும், தனிக்குழுக்களாகப் பிரித்து புற்பரப்புகளில் மேயவைக்கவும், மாலையில் மீண்டும் ஒருங்குதிரட்டவும் அவர்களுக்கு கற்பித்தார். பசுக்களின் கழுத்துமணி ஓசையிலிருந்தே அவை நன்கு மேய்கின்றனவா என்று அறியவும் அவை நின்றிருக்கும் தொலைவை கணிக்கவும் பயிற்றுவித்தார். அவருடன் பலநாள் பாண்டவர்களும் சென்றார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90239

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42

[ 11 ] சாந்தீபனிக் கல்விநிலையின் முகப்பில் நின்றிருந்த சுஹஸ்தம் என்னும் அரசமரத்தின் அடியில் தருமன் இளைய யாதவரை எதிர்கொள்ளக் காத்திருந்த மாணவர்களுடன் நின்றிருந்தார். பீமனும் நகுலனும் சகதேவனும் அவருக்கு இருபக்கமும் நின்றிருந்தனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் இருக்கலாகாது என்று சொல்லப்பட்டிருந்தமையால் ஒரு இளம் மாணவன் கையில் வைத்திருந்த பெரிய நீள்வட்ட மரத்தாலத்திலிருந்த எட்டுகான்மங்கலங்கள் அன்றி வேறு வரவேற்புமுறைமைகள் ஏதுமிருக்கவில்லை. தொலைவில் பறவைகள் எழுந்து ஓசையிடுவதைக் கேட்டதும் தருமன் அவர்கள் அணுகிவிட்டதை உணர்ந்தார். அதற்குள் அங்கிருந்த வீரன் ஒருவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90094

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41

[ 9 ] அர்ஜுனன் குடிலுக்குள் வந்து வணங்கி கைகட்டி நின்றான். அவர் சுவடிக்கட்டை கட்டி பேழைக்குள் வைத்தபின் நிமிர்ந்து பார்த்தார். அருகே தெரியும் எழுத்துக்களுக்காக கூர்கொண்ட விழிகள் சூழலை நோக்கி தகவமைய சற்று நேரம் ஆகியது. அவன் உருவம் நீருக்கு அப்பாலெனத் தெரிந்து மெல்ல தெளிவடைந்தது. அவனைச் சூழ்ந்திருந்த குடிலின் தூண்களும் மரப்பட்டைச் சுவர்களும் சாளரங்களுக்கு அப்பால் மரங்களும் உருக்கொண்டன. அர்ஜுனன் அவர் நோக்கு மீள்வதற்காகக் காத்து நின்றிருந்தான். சுவடிகளை வாசிக்கையில் அவர் விழிகள் பிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90086

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 3 பாண்டவர்கள் ஒவ்வொருவராக எழுந்து விலகிச் செல்வதை கேட்டபடி அனல்துண்டுகளாக எஞ்சிய எரிகுளத்தை நோக்கியவண்ணம் தருமன் தனித்து அமர்ந்திருந்தான். பாணன் தன் முழவை தோலுறைக்குள் போட்டுக் கட்ட விறலி நந்துனியின் கம்பிகளை புரியிளக்கி அஃகினாள். அதை தோல்மடிப்பில் சுற்றி தோளில் மாட்டும் வார் வைத்துக்கட்டினாள். பாணனின் மாணவர்கள் அவ்வாத்தியங்களை எடுத்துக்கொண்டனர். இரவுக்காற்று கங்கையிலிருந்து எழுந்து வீச கனல் புலிக்குருளை போல உறுமியபடி சிவந்தது. காலடியோசை கேட்டு தருமன் திரும்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70269

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 4 பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட சிறிய சோலைக்குள் அமைந்திருந்த துர்வாசரின் கானில்லத்தை அடைந்தார். மரப்பட்டைகளாலும் கங்கைக்கரைக் களிமண்ணாலும் கட்டப்பட்டு ஈச்சஓலையாலும் புல்லாலும் கூரையிடப்பட்ட பன்னிரண்டு சிறிய குடில்கள் பிறைவடிவில் அங்கே அமைந்திருந்தன. காலைக்காற்றில் அவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பறவைச்சிறகடிப்பு போல படபடத்தன. குடில்களின் நடுவே இருந்த முற்றத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69979

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22

பகுதி நான்கு : அனல்விதை – 6 உள்ளே குரல்கள் ஒலிப்பதை பத்ரர் கேட்டார். சற்று நேரம் கழித்து சிவந்த பட்டாடையும், காதுகளில் ரத்தினகுண்டலங்களும், கழுத்தில் மகரகண்டியும் அணிந்த தடித்த குள்ளமான சிவந்த மனிதர் வெளியே வந்தார். அவரது உருண்ட முகத்தில் சிவந்த மெல்லியதாடி சுருண்டு பரவியிருந்தது. துருபதன் எழுந்து வணங்க, இடக்கையைத்தூக்கி ஆசியளித்தபடி ” நான் உபயாஜன். பாஞ்சால மன்னர் எங்களைத் தேடிவந்ததில் மகிழ்கிறேன்” என்றார். துருபதன் வியப்பை வெளிக்காட்டவில்லை. பத்ரர் ஏதோகூற வாயெடுத்ததும் உபயாஜர் கையை அசைத்தபடி ”எங்களைத்தேடி நிறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65016

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21

பகுதி நான்கு : அனல்விதை – 5 கங்கைக்கரையில் இருந்த சிறு நகரான கல்மாஷபுரிக்கு மழைமூட்டம் கனத்திருந்த பின்மதியத்தில் பத்ரர் துணையுடன் வணிகர்களாக மாறுவேடமிட்டு பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் வந்து சேர்ந்தார். அங்கநாட்டைக் கடந்ததும் கங்கை மேலும் மேலும் அகன்று மறுகரை தெரியாத விரிவாக ஆகியது. அதன் நீல அலைவிரிவில் பாய் விரித்துச்சென்ற வணிகப்படகின் அமரமுனையில் நின்று துருபதன் கரையை நோக்கிக்கொண்டிருந்தார். பத்ரர் அருகே வந்து “இன்னும் நான்குநாழிகைநேரத்தில் கல்மாஷபுரி வந்துவிடும் என்றனர் அரசே” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64985

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20

பகுதி நான்கு : அனல்விதை – 4 எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல” என்றார். உருளைப்பாறைப்பரப்பின் சரிவில் கங்கை பெருகி ஓடும் ஒலி இருளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. “ஆயிரம் கைநீட்டி அன்னமிட்டுச்செல்லும் இக்கங்கையும் தன்னில் முற்றிலும் தனித்திருக்கிறாள்.” நெருப்பைச் சுற்றி அவரது மாணவர்கள் சற்று விலகி அமர்ந்திருந்தனர். புலித்தோலிருக்கையில் துருபதன் அமர்ந்திருக்க அருகே சற்று பின்னால் பத்ரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64983

Older posts «