Tag Archive: பத்மவியூகம்

பத்மவியூகம் – கடிதங்கள்

பத்மவியூகம் – சிறுகதை அன்பு ஜெயமோகன் சமீபத்தில் தங்களின் “பத்ம வியூகம் “ குறுநாவல் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. நீண்ட நாட்களுக்கு முன்பு வாங்கிய “ஜெயமோகன் குறுநாவல்கள் “ புத்தகம் பாதி படிக்கப்பட்டு மீதத்தை என்றாவது படிப்பதற்காக காரில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு குளிர்கால நள்ளிரவு மருத்துவ மனையின் பார்க்கிங் லாட்டில் காருக்குள் இருந்து வாசித்த அனுபவம்.குழந்தைக்கு திடீரென வந்த காய்ச்சலைப் பார்த்த தாய் பயந்து அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்கு விரைந்த நள்ளிரவு அது. மனைவியும் குழந்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117312/

பத்மவியூகம்: கடிதம்

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு, “பத்மவியூகம்” என்னைப் பதறவைத்தபடியே என் மனதைப் புரட்டிப்போட்டுவிட்டது. கடக்க முடியா புத்திரசோகத்தையும் கடந்து ஏதோ ஒரு இறுக்கமான அமைதி குடிகொண்டதை பத்மவியூகம் சிறுகதையைப் படித்துமுடிக்கையில் உணர்ந்தேன்.       “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே….” என்று சுபத்ரை குமுற, அதற்கு அவள் அண்ணன் கிருஷ்ணன், “யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?” என்று பதிலுரைக்கையில் நானும் உறைந்து நின்றேன். ஏனெனில் எனக்குள் குடைந்துகொண்டிருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88301/

பத்மவியூகம் – சிறுகதை

1 தூண்டு விளக்கேந்திய தாதி கதவை ஓசையின்றித் திறந்து, உள்ளே வந்தாள். அவளிடம் தீபமிருந்ததனால் அறையின் இருட்டு மேலும் அழுத்தமானதாகப் பட்டிருக்கக்கூடும். படுக்கையைக் கூர்ந்து பார்த்தாள். சற்றுப் புரண்டு அசைவு காட்டினேன். அணைந்து விட்டிருந்த கன்யா தீபத்தை ஏற்றிவிட்டு, கைவிளக்குடன் என்னை நெருங்கினாள். குனிந்து மெல்லிய குரலில், “நேரமாகி விட்டது மகாராணி” என்றாள். “என்ன?” என்றேன். தொண்டைக்கும் நாவுக்கும் பேச்சே பழக்கமில்லாதது போலிருந்தது. என் மனமோ பெரும் கூக்குரல்களினாலும் அலறல்களினாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அப்பிரவாகத்திலிருந்து ஒரு துளியை மொண்டு உதடுகளுக்குக் கொண்டுவரப் பெருமுயற்சி தேவைப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43970/

கதைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கருத்துக்களாக விளக்க முடிபவற்றைக் கட்டுரையாக எழுதிவிடலாம். ஆனால் அனுபவங்களை, வாழ்க்கையை அவ்வாறு எழுதிவிட முடியாது.அதற்குக் கலை மட்டுமே உதவும் என நினைக்கிறேன். ‘மடம்’ குறுநாவலைப் படித்த பிறகு இதுதான் தோன்றியது. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் விதவிதமான அனுபவங்கள் வருகின்றன. நாவல் முழுக்க இழையோடும் அங்கதம் ஒரு புதுவித சுவையைத் தருகிறது. கனபாடிகளின் கூர்ந்த அறிவு அவருக்கு ஞானத்தைத் தரவில்லை. மாறாக அவர் படித்தது எதையுமே படிக்காத சாமியும் பண்டாரமும் ஞானமடைந்தவர்கள். இம்மூவரைத் தவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26448/