Tag Archive: பத்மபாரதி

பத்மபாரதியும் அச்சிதழ்களும்

ஜெயமோகன் சார் இன்று நீங்கள் கரசூர் பத்மபாரதி பற்றி எழுதிய கட்டுரை வாசித்தேன். அச்சிதழ்கள் பற்றிய கட்டுரையில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீகள், என்ன சொல்லவருகிறீர்கள் என்று இந்தக்கட்டுரை மிகாச்சிறப்பாகச் சொல்கிறது. பத்மபாரதியின் சாதனை வியப்பளிக்கிறது. அவரது தைரியமும் அர்ப்பணிப்பும் ஆச்சரியமளிப்பவை. அத்தகைய அறிவார்ந்த சாதனைகளைத்தான் ஒரு சமூகம் கொண்டாடவேண்டும்.ஆனால் அவரைப்போன்றவர்களை நம் இதழ்கள் பொருட்டாகவே நினைப்பதில்லை. பெண் அறிவார்ந்த சாதனைகள் செய்வது அவர்களுக்கு முக்கியமே இல்லை. அவள் ஓர் அழகுப்பொம்மையாக இருக்கவேண்டும். டிவிட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ ஓயாமல் அர்த்தமில்லாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78602

பத்மபாரதியின் ‘திருநங்கையர் சமூகவரைவியல்’

இந்தியாவை பல்லினக்குழுக்களின் அருங்காட்சியகம் என்று சொல்வார்கள். மிகச்சிறிய நிலப்பகுதிக்குள்ள்ளேயே முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைப்பரப்புகள் பண்பாட்டுவெளிகள் காணக்கிடைக்கின்றன. எழுபதுகளில் நாட்டாரியல் முறையாக இங்கே அறிமுகமாகும்வரை அவ்வாழ்க்கைத் தளங்களை இலக்கியம் மட்டுமே அவ்வப்போது எடுத்து முன்வைத்துக் கொண்டிருந்தது. விதிவிலக்காகவே பிலோ இருதயநாத், நா.வானமாமலை போன்றவர்களைச் சொல்லவேண்டும் நாட்டாரியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் நம் கல்விநிறுவனங்களில் அறிமுகமானபோது அவற்றை ஆராய்வதற்குரிய ஆய்வுமுறைமைகள் உருவாகிவந்தன. ஆய்வுக்குரிய நிதியும் பல்கலைகளால் வழங்கப்பட்டது. ஏராளமான மாணவர்கள் நாட்டாரியலை தங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள். ஆனால் நம்முடைய நாட்டாரியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78586