Tag Archive: பண்பாடு

இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்

காற்றூளிக்கும் ஒவ்வாத கணக்கன் ராமலிங்கன் பாடலா அருட்பாவாகும்? பளா பளா நன்று நன்று. ஒரு மகிமையுமில்லா வடலூர் கணக்கன் பாடலா அருட்பாவாகும்? போலிச் சைவர்களே புகண்மின் புகண்மின்… ‘   [இராமலிங்கம் பாடலாபாச தர்ப்பணம்]   *** ‘ ‘எனையார் கெலிப்பார்கள் என்றிரையு மூடா நினையோர் பொருட்டாய் நினையோம் – பனையேறும் பாம்பொத்த பாபிப்பயலே குரக்கிறைவா நாம்பொத்த நின்னாலென்னாகுமடா – வேம்பொத்த பாதகனாம் ராமலிங்கன் பட்டியன் அன்றோதான் வாதுசெல்லும் சண்டியே வாய்மூடாய் ‘ ‘   [திரிகோணமலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2362

நிறம்

அன்புள்ள ஜெ, நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது! http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html உங்கள் கருத்து? விஜயசங்கர் *** அன்புள்ள விஜயசங்கர், ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள். ”எதுக்குடி ஐம்பது ரூபாய்?” என்றேன். ”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்” வழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5971

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும் மதிப்பிடத்தெரியாது. ஆகவே அங்கே நுண்மையான அவமதிப்புகளுக்கு நாம் ஆளாகவேண்டியிருக்கும். இங்கு என்னை அழைத்த நண்பருக்காக ஒத்துக்கொண்டேன். அவருக்காகவும் என் பேச்சை சிலராவது எதிர்பார்க்கக் கூடும் என்பதற்காகவும் வந்தேன். என் மனநிலை சரியாக இல்லை என்பதனால் உரை சிறப்பாக அமையாவிட்டால் மன்னிக்கவும் * பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29

மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

தமிழகத்தின் மதமாற்ற தடைச் சட்டம் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இக்கருத்தரங்கில் கூறப் பட்ட காரணங்களை நான் வழி மொழிகிறேன். இந்தச் சட்டம், சமூகங்களுக்கு இடையே மனக் கசப்பையும் அவநம்பிக்கையையும் வளர்க்கக் கூடியதாக உள்ளது. நம்முடைய தேசத்தில் மதம் சில தளங்களை தவிர்த்துப் பார்த்தால் தனிப்பட்ட நம்பிக்கை என்ற தளத்தில் இயங்கவில்லை. தனிப்பட்ட நிலைபாடு என்ற தளம் அதற்கு முற்றிலும் இல்லை.இங்கே மதம் என்பது மத அடிப்படையிலான சமூகங்கள் என்றே பொருள் படுகிறது. ஆகவே மத விஷயங்களில் கூட்டாகச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/601

மூதாதையர் குரல்

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர் ‘சார் என் குரலை தெரியுதா?’ என்றார். நான் தெரியவில்லையே என்றேன். ‘நான் எம் ஜி ஆர் ரசிகன் சார்…உங்களை போன வருஷம் கூப்பிட்டு திட்டியிருக்கேன்” என்றார் சென்ற வருடம் நான் எழுதிய சாதாரணமான நகைச்சுவைக் கட்டுரைகளை ஆனந்த விகடன் பெரிதுபடுத்தியமையால் ஒரு விவாதம் எழுந்தது நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் மனம் புண்பட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் என்னை போனில் கூப்பிட்டு கடுமையாக வசை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3891

பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்

ஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி. எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன். முடிவாக உங்களிடம் கேட்கலாம் என்று எழுதுகிறேன். பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? ராஜ்குமார் அன்புள்ள இரண்டு வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான் அவை. கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாச்சாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56792

சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…

(17-2-2007ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைக்கலூரியில் ஜனநாயக மையம் சார்பில் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன், துகாராம் கோபால்ராவ் மொழியாக்கம் செய்த மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ என்ற நூலை முன்வைத்து ஒரு உரையாற்றினார். அதன் பின் அந்நூலைச் சார்ந்து மாணவ்ர்கள் கேட்ட வினாக்களுக்கு ஜெயமோகன் விடையளித்தார். மைய அமைப்பாளர் பர்னாட் சந்திரா நன்றி கூறினார். ) நண்பர்களே சில வருடங்களுக்கு முன்னர் ஈராக் அதிபர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21

ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு – நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி. உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்கவில்லை. அனால் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட ஒரு கேள்வி… நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைபோல பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36561

ஐரோப்பாவும் விடுதலைமனநிலையும்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? சுயபலி குறித்த தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்களை ஏற்கனவே நான் யூகித்திருந்தாலும், அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை என்னால் அவதானிக்க முடியவில்லை. உங்கள் பதிலில் முக்கியமாக “எந்த சுயபலி போர்வெறி மனநிலையின் உச்சமாகக் கருதப்பட்டதோ அந்த சுயபலி போருக்கு எதிரான ஆயுதமாக ஆகிவிடுகிறது ” என்ற வரி அதைத் தெளிவுபடுத்தியது. இதற்காகவே உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். மிக்க நன்றி. சமீப காலமாக என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு விஷயத்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31169

பெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்

ஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி. எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன். முடிவாக உங்களிடம் கேட்கலாம் என்று எழுதுகிறேன். பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? ராஜ்குமார் அன்புள்ள இரண்டு வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான் அவை. கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாச்சாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/753

Older posts «