Tag Archive: படுகை

குமரி உலா – 5

டிலனாய் [De Lennoy] கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரி கோட்டை.  தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின் காமிராவை சரிபார்த்தோம். மின்னேற்றம் குறைவுபட்டிருந்தது. அதை சரிசெய்தோம். உதயகிரி கோட்டைக்குள் நான்கு சுற்றுத்தெருக்கள் உண்டு. அவை இன்று நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளாக உள்ளன. கோட்டைக்குள்ளேயே கிழக்குப்பக்கம் இப்போதும் காடாகவே உள்ளது. வனத்துறை பாதுகாப்பில் இருக்கும் அப்பகுதியில் அவர்கள் சிறு வனப்பூங்கா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37945

படுகை – சிறுகதை

வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோற்சிற்பம் போல உடம்பு அவருக்கு. எண்பதிலும் முறுக்கம் தளராமைக்குக் காரணம் கள்ளே என்பார். பனை ஓலைகள் உரசும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் இரவுகளில், இலை நிழல்கள் நிலவொளிமீது விரிந்து அசையும் களத்து மே ட்டில், அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22518