Tag Archive: படிமம்

வெண்முரசு படிமங்கள்

அன்புள்ள ஜெமோ வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன். கவிதையின் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. அம்புகளை பறவைகளுடனும் மழைத்தாரைகளுடனும் ஒளிக்கதிர்களுடனும்தான் வியாசர் ஒப்புமைப்படுத்துகிறார். இந்த அத்தியாயங்களில் அம்புகளை பறவைகளுடன் ஒப்புமைப்படுத்தி நீங்கள் அதை மிக விரிவான அளவில் எடுத்துச்சென்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ‘சுகோண சுபக்ஷ சுதேஹ ’ என்று அம்பின் இலக்கணத்தை சொல்லுமிடமே சிறப்பாக உள்ளது. அந்த வரியே உங்களுடையதுதான் என நினைக்கிறேன். ஒரு சில குறிப்புகள் மகாபாரதத்தில் இருக்கின்றன. அதிலிருந்து இத்தனை தூரம் கற்பனையால் செல்லமுடிவது பிரமிப்பூட்டுகிறது. பறவைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57999

சிறுகதைகளும் படிமங்களும்

அன்புள்ள ஜெயமோகன், பூமணியின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரையில் ஜானகிராமன், வண்ணதாசன் , புதுமைப்பித்தன் கதைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் படிமங்கள் அபாரம். ஒவ்வொருவருக்கும் இதே மாதிரி படிமங்கள் என் மனசிலும் உண்டு. எனக்கு ஜானகிராமன் கதைகள் என்றாலே காவேரியில் இருந்து ஏறிவரக்கூடிய கல்படிகள்தான் ஞாபகத்துக்கு வரும். அதேபோல வண்ணதாசன் கதைகள் என்றாலே சின்னஞ்சிறிய சிமிண்ட் திண்ணைகள். அப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம். பூமணிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் படிமம் அபாரமானது. கவிதை மாதிரி. இலக்கிய விமர்சனமே எப்படிக் கவிதையாகிறது என்பதை இந்தக் கட்டுரையிலேதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23278