Tag Archive: பசும்பொன்

பசும்பொன் – கடிதம்

உங்களின் பசும்பொன் பயணம் பற்றிய நிகழ்வுகளை கட்டுரையாய் படித்தேன். ஒரு இலக்கியவாதியாக, ஒரு பயணாளியாக தங்கள் கருத்துக்கள் மிகவும் சரியாகத் தோன்றியது

Permanent link to this article: https://www.jeyamohan.in/6470

பசும்பொன்,கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம், தங்களின் பசும்பொன் தொடர்பான கட்டுரைகளையும், கடிதங்களையும் வாசித்தேன். உங்களின் தெளிவான அணுகுமுறை பிடித்திருந்தது, சாதிய விசயங்களில் கருத்து சொல்வதென்பது தமிழகத்தில் மிகச் சவாலான விசயம். எளிதில் பற்றிக் கொள்ளக்கூடிய ஒரு வஸ்து அது. அதனாலேயே தமிழகத்தில் பல ஆளுமைகளும் சாதியை தொடுவதில்லை, அரைகுறைகள் சிலர் அதை தொட்டு மேலும் கேலிகூத்தாகவோ வன்முறை விளையாட்டாகவோ ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி வெளிப்படையாக பேச, விவாதிக்க பயந்தோ அல்லது நாணி விலகியோ என்னைப் போன்றவர்கள் சாதிய அசட்டுத்தனங்களையும் அநாகரிகங்களையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5296

பசும்பொன்: கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு   ”தேவர் அவர் தேசத்துக்குச் செய்த தியாகங்களுக்காக அத்தனை சாதியினராலும் இந்தியாவில் உள்ள அத்தனை மக்களாலும் மதிப்புடனும், அவர் தங்களுக்கும் தலைவர் என்னும் பிரியத்துடனும் நினைவுகூரப்படுவதே அவருக்குச் செய்யும் நியாயம் ஆகும்.”   நான் படித்த வரையில் அவர் அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக்கில் இயங்கினாலும் ஒட்டு மொத்த இந்தியாவுக்காக என்ன தியாகம் செய்தார் என்பது விளங்கவில்லை. தொழிற்சங்க வேலை நிறுத்தம், காங்கிரஸ் விரோதம் மற்றும் இமானுவல் கொலை போன்ற பிரச்சனைகளுக்காக சிறை சென்றிருக்கிறார். காந்தியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4779

பசும்பொன்

ஒரு தொன்மம் அல்லது ஆசாரம் அல்லது திருவிழா எப்படி உருவாகி வலுப்பெறுகிறது என்பதற்கான சமீபகால உதாரணம் பசும்பொன் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30 அன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா. நானும் வசந்தகுமாரும் தேவதேவனும் இவ்வருடம் பசும்பொன் போயிருந்தோம் தற்செயலாகத்தான் அந்த பயணத்திட்டம் அமைந்தது. அக்டோபர் 30 அன்று நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கு திருமணம். உயிர்மையில் ஆக்ரோஷமான அரசியல் கட்டுரைகளை எழுதுபவர். ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’ அவரது சமீபத்திய நூல். அதற்கு நான் சென்றிருந்தேன். வசந்தகுமார் சென்னையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4737