Tag Archive: ந.முத்துசாமி

நாடகங்கள்

நண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73750

ந.முத்துசாமிக்கு பத்மஸ்ரீ

தமிழின் நவீனநாடகத்தை உருவாக்கியவர்கள் என இருவரைச் சொல்வது மரபு. ந.முத்துசாமி, செ.ராமானுஜம். முத்துசாமி தமிழின் சிறந்த சிறுகதைகள் சிலவற்றை எழுதியவர். தமிழின் சிறந்த சிறுகதைகளின் சிறிய பட்டியலில் கூட அவரது நீர்மை கதை இடம்பெற்றிருக்கும். பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.தொடர்ந்து தெருக்கூத்தை மீட்டு எடுப்பதில் ஆர்வம் காட்டினார். நாடகங்களுக்காகவும் கூத்துக்காகவும் கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி நடத்திவருகிறார். ந.முத்துசாமிக்கு இவ்வருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. முத்துசாமிக்கு வாழ்த்துக்கள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/24390