Tag Archive: ந.பிச்சமூர்த்தி

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79847

ந.பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்

சிறந்த எழுத்தாளர்கள் இருவகை. மானுடத்தின் அடிப்படை, நன்மையே என்ற நம்பிக்கை உடையவர்கள் முதல் வகையினர். மானுடத்தின் தீமையினால் இவர்கள் சீண்டப்படுகிறார்கள், சமநிலை குலைகிறார்கள். நன்மை மீதான தங்கள் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அதன் போக்கில் ஒரு விடையை, நிலைப்பாட்டை அடைகிறார்கள். அல்லது நம்பிக்கை இழந்து வெறுமையில் முட்டி நின்றுவிடுகிறார்கள். இரண்டாம் வகையினர் மானுடத்தின் அடிப்படை இயல்பு, தீமையே என்ற நம்பிக்கை உடையவர்கள். மானுடத்தின் விரிவில் இருந்து நன்மையைத் தேடித் திரட்டி எடுக்க, நம்பிக்கையை நிறுவிக் கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23796

நேற்றைய புதுவெள்ளம்

நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம் அவை வங்க இலக்கியத்தின் நேரடியான பாதிப்பினால் விளைந்தவை என்பதில் உள்ளது. இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவானதில் வங்க நவீன இலக்கிய அலையின் பாதிப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது. தமிழில் பாரதி, வ.வே.சுப்ரமணிய அய்யர் முதலிய முன்னோடிகள் வங்கக்கதைகளை மொழியாக்கம் செய்தும் தழுவியும்தான் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார்கள். அதன்பின்னர் மணிக்கொடி காலகட்டத்தில் வங்க இலக்கியம் தமிழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54010

எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

அன்புள்ள எம்.டி.எம், உங்கள் குறிப்பு காட்சிப்பிழை புரிதல்பிழை போன்ற பகடிகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நான் விவாதிக்கும்தளம், கேட்கும் வினாக்கள் அப்படியே பல படிகளாக விரிந்து நீடித்துக்கொண்டே செல்கின்றன. எனக்கு அவற்றின் மறுதரப்பு பற்றி மட்டுமே அக்கறை. ஆக, கடைசியில் நாம் இன்னொரு பொதுவான புரிதலை அடைந்துவிட்டோம். உங்கள் அணுகுமுறை பின்நவீனத்துவ விமர்சனம் என்பதால் நீங்கள் பாரதியைத் தர அடிப்படையில் மகாகவி என வகைப்படுத்தவில்லை. என் விமர்சனம் முழுக்க அதைச் சார்ந்ததாகவே இருந்தது. எலியட்டை பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22048

பாரதி விவாதம் 4 – தாகூர்

ஜெ, குவெம்புவையும், ஆசானையும் கன்னட,மலையாள சூழலில் மகாகவி அல்ல என்றுவிமர்சன நோக்கில் மதிப்பிட்டுக் கூறும் பள்ளிகள் உண்டா? எனக்கு இது பற்றிஅவ்வளவாக பரிச்சயம் இல்லை. இதற்கு ஒரு காரணம் தாகூர்,தனது வங்கக் கவிதைகளைத் தானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தது; பிறகு ஆங்கிலத்தில் இருந்து அவை மற்ற மொழிகளுக்குச் சென்றன. தாகூரின் ஆன்மிகப் பாடல்கள் எல்லாவற்றிலும் ஒருவித நெகிழ்ச்சி அம்சம் தூக்கலாக இருக்கிறது – அது வைணவ பக்தி இலக்கிய இயல்பு. ஆனால் பாரதிஅடிப்படையில் சாக்தன், எனவே அவனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21515

கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்

சார், ந.பிச்சமூர்த்தியின் கொக்கு, சாகுருவி கவிதைகளை இன்று அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்தபோது, உங்களது கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு கட்டுரையை மீண்டும் படித்தேன். மிகவும் நிறைவாக இருந்தது. அதில் கீழ்வருமாறு சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு உண்மை அது! வருடத்தில் நூறு தொகுப்புக்குமேல் தமிழில் வருகின்றன. பெரும்பாலான தொகைகளில் ஒருசில நல்ல கவிதைகளாவது உள்ளன. ஆனால் கவிஞன் என்பவன் அப்படி கவிதை எழுதும் ஒருவனல்ல. கவிஞன் தனகே உரிய மொழி கொண்டவன். தனக்கான வாழ்க்கை நோக்கு கொண்டவன். வாழ்க்கையை கவிதைமூலமே அறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20655

கடிதங்கள்

மகாமகோகிருமி பற்றி… அன்புள்ள ஜெ! நானும் மருத்துவன்தான் .எனினும் மகாமகோ கிருமி (மகாமகக் குளத்தில் இருந்து வந்திருக்குமோ?)-யை ரசித்துச் சிரித்தேன்.பொதுவாக டாக்டர்கள் டாக்டர் சம்பந்தமான ஜோக்குகளை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் தன் நோயாளி விளக்கம் கேட்டால் தான் பலருக்குக் கோபம் வருகிறது.இங்குள்ள மருத்துவர்கள் மிகத் திறமை சாலிகள் தான். ஆனால் நுகர்வு கலாச்சாரத்தில் மருத்துவமும் சிக்கி வணிகமயமானது பெரும் சோகம்.நம் அரசுகள் தானியஙளை அழுக விடும்.தன் மக்களை அழவிடும்.சுகாதாரத்தை அரசு கிட்டத்தட்ட கை கழுவிய சூழலில் ஒரு சாதாரண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8815