Tag Archive: நோயல் நடேசன்

நோயல் நடேசன்

ஜானகிராமனின் கதைகளை படித்துவிட்டு சரஸ்வதி தேவிக்கு காதல் கடிதம் எழுதக்கூடிய விடலைப்பையன் என்ற தீர்மானத்துக்கு வந்த அந்த அம்மாவுக்கு மகனாகப் பிறந்தவருக்கோ, ஜானகிராமனின் புத்திசாலித்தனமான பெண்பாத்திரங்களில் வரும் ஒருத்தியைப்போல ஒரு பெண் மனைவியாகக் கிடைக்கவேண்டியிருந்தது தவம். நோயல் நடேசன் கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/77204

அசோகனின் வைத்தியசாலை

அன்புள்ள ஜெ , நீங்கள் போன முறை மெல்போர்ன் வந்த போது திரு.நோயல் நடேசன் அவர்களைப் பற்றியும் அவர் வளர்ப்பு நாயையும் பற்றி எழுதியது ஞாபகம் இருக்கிறது.ஆனால் அவர் படைப்புகளை தேடிப்பிடித்து படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. நேற்றைய பதிவு கண்டபின் தேடிப்பார்த்தேன் , நோயல் தனது வலைதளத்தில் “அசோகனின் வைத்தியசாலை” நாவலைஒரு தொடராகவே எழுதியிருக்கிறார். http://noelnadesan.com/2013/02/ நோயல் அவர்களின் எழுத்துக்கு ஒரு அறிமுகமாக‌வும் , படிக்க நினைக்கும் நண்பர்களுக்கு உதவியாகவும் இருக்கும் அன்புடன். கார்த்திக்

Permanent link to this article: https://www.jeyamohan.in/44456

தலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்

தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் செறிந்து வாழும் தமிழ்பேசும் தமிழ்பேசாத, தமிழர்கள் வரலாறு எப்படி தொடங்குகிறது என்பதை விளக்கும் ஒரு வரலாற்றுப் புனைவு.என்னை மலையில் இருந்து வரும் புதுப்புனலாக நெஞ்சில் தாக்கியது. தமிழகத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் வெளியேறிய தலித் மக்களே இன்று இலங்கையின் மலையகம், மலேசியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் வாழும் பெரும்பான்மைத் தமிழர்கள். இவர்களது வரலாற்றின் தொடக்கப்புள்ளிதான் வெள்ளையானை. ஒருவிதத்தில் பபிலோனியாவிற்கு கடத்தப்பட்டு சென்ற யூதமக்களே தங்கள் வரலாற்றை பழைய ஏற்பாடாக எழுதியதாக தற்போதைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45015

பெரிய உயிர்களின் தேசம்

[ 1 ] ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சூழலில் ஒரு கூற்று மிக அதிகமாக விவாதிக்கப்பட்டது. எஸ்.பொன்னுத்துரை அதைச்சொன்னார் என்று நம்பப்பட்டது.’அடுத்த நூற்றாண்டு தமிழிலக்கியத்தை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எழுதுவார்கள்’. அந்தவரி அன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தவர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தியாவில் பலர் அது ஈழத்தவர்களை மகிழ்விக்குமென்பதனாலேயே திரும்பச் சொன்னார்கள். இன்னும்சிலர் இலக்கியமென்பது அனுபவப்பதிவு என்ற எளிய சமவாக்கியத்தின் மீதான நம்பிக்கை காரணமாக அதைச் சொன்னார்கள். அதற்கேற்ப அன்று புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் நடத்திய இதழ்கள் வந்து குவிந்தன. 1990ல் சுந்தர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40786

வாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்

தமிழில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் படைப்புகளே சர்வதேசத்தன்மையானவை. இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலில் அவ்வகையான எழுத்தாளர்களில் ஒருவர் தெளிவத்தை ஜோசப். இலங்கை மலைநாட்டு தமிழர் பற்றிய ஆக்க இலக்கியப்படைப்புகளை எழுதும்போது அவர்களின் வட்டார மொழியை ஆடம்பரமற்ற எளிமையான மொழியில் சொல்வதுதான் அவரது வழக்கம். ஆனால் அவரது படைப்பின் அடிநாதமாக இருப்பது எந்த நாட்டு மனிதர்களுக்கும் பொருந்தும் சாதாரண மனிதர்களின் யதார்த்தம். மனிதவாழ்வின் யதார்த்தம் இல்லாத இலக்கியப்படைப்பை என்னைப் பொறுத்தவரையில் மனமொன்றி கிரகிக்க முடியாது போகிறது. இந்த யதார்த்தம் புறவாழ்வுகளின் செயல்பாடுகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42000