Tag Archive: நோபல் பரிசு

நோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோ

மோடியானோ ஃப்ரென்ச் எழுத்தாளர். 2014-இல் நோபல் பரிசை வென்றவர். நானும் ஒரு வருஷமாக அவரது புத்தகம் எதையாவது படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன், இப்போதுதான் முடிந்திருக்கிறது.   ஆர்வி அவரது சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் எழுதிய கட்டுரை    

Permanent link to this article: https://www.jeyamohan.in/86450

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

இலக்கியமும் நோபலும்

ஜெ சார் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற மோதியானோ பற்றி உங்கள் எண்ணம் என்ன? கருத்துக்களை எதிர்பார்த்தேன் சாமி அன்புள்ள சாமி நான் அவரை நோபல் பரிசுக்குப்பிறகுதான் கேள்விப்படுகிறேன். உடனே பாய்ந்து போய் படித்துப்பார்க்கவும் போவதில்லை. ஏனென்றால் அப்படிப் படித்த ஆசிரியர்களெல்லாம் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். இலக்கியப்பித்து ஓங்கியிருந்த காலகட்டத்தில் நோபல் ஆசிரியர்களை அப்போதே வாசித்துவிடுவேன். 1983ல் நோபல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் என் முதல் ஏமாற்றம். அடுத்து பரிசு பெற்ற கிளாட் சீமோங் அடுத்த ஏமாற்றம். அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63684

நோபல் பரிசு இந்தியருக்கு

அன்புள்ள ஜெ, அடுத்த சில ஆண்டுகளில் யாராவது இந்தியருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள்? மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது உண்மையா? சரவணன் [கெ.சச்சிதானந்தன்] அன்புள்ள சரவணன் சச்சிதானந்தன் இந்தவருடம் சிபாரிசுசெய்யப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். அவர் நெடுங்காலம் சாகித்ய அக்காதமி செயலர், தலைவர் பொறுப்பில் இருந்தார். உலக அளவில் நூற்றுக்கணக்கான இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்தவர். அத்துடன் சுயமுன்னேற்றத்துக்காக ஓயாது உழைப்பவர். ஆகவே அவருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21891

டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் கவிதைகள்

  2011 ஆம் வருடத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் கவிஞர் டோமஸ் ட்ரான்ஸ்ட்ருமர் எழுதிய சில கவிதைகளின் மொழியாக்கம். நண்பர் கார்த்திக் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார். இக்கவிஞரையோ கவிதைகளையோ நான் கேள்விப்பட்டதே இல்லை. கார்த்திக் மொழியாக்கம்செய்த கவிதைகளை மட்டுமே வாசித்தேன். வேண்டுமென்றேதான் ஆங்கிலத்தில் வாசிக்கவில்லை. மொழியாக்கத்தின் மொழியாக்கத்தில் இக்கவிதைகள் கவிதைகளாக நிற்கின்றனவா என்று பார்க்க ஆசைப்பட்டேன். உண்மையில் இவ்வடிவிலேயே இக்கவிதைகள் அளிக்கும் பரவசம் ஒரு மாபெரும் கவிஞனை அடையாளம் காட்டுகிறது. பெட்டியில் எடுத்துச்செல்லபப்டும் வயலின்போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21764

காந்தி,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், தங்களுடைய “காந்தியும் நோபல் பரிசும்” கட்டுரை படித்தேன். அதென்ன சார் காந்தி என்றாலே இந்த நாட்டில் எல்லோருக்கும் புல்லரிக்கிறது?! காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காத வரைக்கும் நோபல் பரிசு தப்பித்தது. மூன்றாம்தர அரசியல்வாதி!. தான் ஒருவரே இந்தியாவை காக்க வந்த கடவுள் என்றும், மற்ற போராளிகள் எல்லாம் இவர் சொல்வதையே வேதமாக கருத வேண்டும் என்ற பிடிவாதம் கொண்ட மனிதர்தானே அவர்?! அதற்கு அவர் மொழியில் அஹிம்சை என்ற ஏமாற்று பேர் வேறு! …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8698

காந்தியும் நோபல் பரிசும்

ஜெயமோகன் ஐயா, “காந்திக்கு வழங்கப்படாத நோபல் பரிசு” -குறித்த எனது கேள்விகளை எனது பதிவில் இட்டுள்ளேன். காந்தி குறித்த உங்களது பரந்த அறிவை உலகமறியும். இந்த பதிவு குறித்த உங்கள் விமர்சனங்களை எதிர் நோக்கியிருக்கிறேன். என்றும் அன்புடன், பா.கார்த்திக். http://kanakkadalan.blogspot.com/2010/10/blog-post_09.html அன்புள்ள கார்த்திக், காந்தி 1937, 1938, 1939, 1947, 1948 ஆகிய வருடங்களில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டிருக்கிறார். 1989ல் காந்தியவாதியான தலாய் லாமாவுக்கு பரிசளிக்கப்பட்ட தருணத்தில் காந்திக்கு நோபல் பரிசளிக்காமைக்காக நோபல் குழு பொது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8660