Tag Archive: நேர்காணல்

அ.முத்துலிங்கம் நேர்காணல்

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am   “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார். அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78

வெண்முரசு – இந்தியா டுடே பேட்டி

உங்களுடைய இருபத்தைந்து ஆண்டு காலக் கனவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் வெண் முரசை.மிக நீண்ட கால உழைப்பும் அதை ஆரம்பிக்க தேவைப் பட்டிருக்கிறது.முழுமையாக அதை முடிக்க இன்னமும் தேவைப் படும்.இவ்வளவு நீண்ட உழைப்பு ஒரு இதிகாசத்தை செவ்விலக்கியமாக மறு ஆக்கம் செய்யும் முயற்சியாக அமைவது,தமிழ் இலக்கியத்தை பின்னோக்கி நகர்த்தும் செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு அல்லது இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பக் கூடிய மனநிலைக்கு எதிராகத்தான் இந்த நாவல் எழுத பட்டிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66259

வெண்முரசு குங்குமம் பேட்டி

முதல்பக்கம் [பெரிதாக்க பக்கம் மீது சொடுக்கவும்] இரண்டாம் பக்கம் மூன்றாம் பக்கம் நன்றி குங்குமம் ஆசிரியர் குழு. குங்குமம் வார இதழ்

Permanent link to this article: https://www.jeyamohan.in/65667

இந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்

[தமிழ் ஹிந்து தீபாவளி மலருக்காக ஷங்கர்ராமசுப்ரமணியன் எடுத்த பேட்டி] படைப்பாளுமையும் செயலூக்கமும் இணைந்திருக்கும் அரிதான ஆளிமைகளில் ஒருவர் ஜெயமோகன். சிறுகதை, நாவல், விமர்சனம், தத்துவம், கேள்வி பதில், திரைக்கதை என அயராமல் எழுதிக் குவிக்கும் ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு விஷயத்திலும் தன் ஆளுமையை அழுத்தமாகப் பதிப்பவர். எழுத்துலகில் பலரும் நுழையத் தயங்கும் பிரதேசங்களுக்குள் இயல்பாகவும் அனாயாசமாகவும் நுழைந்து சஞ்சரிக்கும் இந்தக் கதைசொல்லி உலகின் மாபெரும் காவியமான மகாபாரதத்தைத் தன் பார்வையில் திருப்பி எழுதும் சாகசத்தில் இறங்கியுள்ளார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64722

அசோகமித்திரன் பேட்டி -ஒருவிளக்கம்

அன்புள்ள ஜெயமோகன், “அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள் வரை அவரை எடுத்த மிகச்சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பியிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதிவடிவை எனக்கு அனுப்பி நான் அதைச் செப்பனிடவும் செய்தேன்.” என்று உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள். சுபமங்களாவில் வெளியான முதல் அசோகமித்திரன் நேர்காணலைச் செய்தது நான். கேள்விகள் என்னுடையவை. அதை கோமல் உங்களுக்கு அனுப்பவில்லை. இந்த நேர்காணல்தான் இளையபாரதி பதிப்பித்த சுபமங்களா நேர்காணல்கள் – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63674

அசோகமித்திரனை அவமதித்தல்

அசோகமித்திரனின் காலச்சுவடு பேட்டி பற்றி பலர் என்னிடம் சொன்னார்கள். அதில் அவர் வெண்முரசுவை ‘கிழித்துவிட்டார்’ என ஃபேஸ்புக்கில் பலர் மகிழ்ந்தார்கள் என்றார்கள். அவர் தமிழில் என்னை புகழ்ந்ததுபோல எவரையும் புகழ்ந்ததில்லை. ஆகவே ஒரு படைப்பை முற்றிலும் நிராகரித்தாலும் அதுவும் நியாயமே. ஆனால் அதில் அவர் தன் மனைவிக்கு அது புரியவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார். நற்றிணை யுகனைச் சந்தித்தபோது குமுறினார். நற்றிணை அசோகமித்திரனுக்கு அனுப்பிய பதிப்புரிமைத் தொகைக்கான காசோலைகளின் ரசீதுகளைக் காட்டி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்திருக்கிறேன், நான் பணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63610

அசோகமித்திரன் என்னைப்பற்றி…

அசோகமித்திரனின் பேட்டி சூரியக்கதிரில்.  வழக்கம்போலக் கருத்துக்கள் எனப் பெரிதாக எதையும் சொல்லிவிடக்கூடாதென்ற கவனத்துடன் இருந்திருக்கிறார். இந்த வயதில் அவருக்கு விமர்சனங்களும், கருத்துக்களும் தேவையற்றவை என்றோ அதிகப்பிரசங்கித்தனம் என்றோ தோன்றுகின்றன. நான் எடுத்த பேட்டியிலும் அதைச் சொல்லியிருக்கிறார். என்னைப்பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அது அவர் எப்போதும் சொல்வது. குறைவாகச் சொல்வதையே கலையாகக் கொண்ட மேதையிடமிருந்து வரும் அச்சொற்கள் இச்சூழலில் நான் பெற்ற பெரும் அங்கீகாரம் என்றே நினைக்கிறேன். கடைசிப்பத்திதான் அசல். அமி சீரியஸாகச் சொல்கிறாரா வேடிக்கையாகச் சொல்கிறாரா எனப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19596

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3

திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம் இன்று ஒரு முக்கியமான அமைப்பு. அதன் பணிகளில் நீங்கள் முக்கியப்பங்கு ஆற்றியிருக்கிறீர்கள் இல்லையா? தமிழ் இலக்கிய வாழ்வில், நான் பெற்ற பயன் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க தொடர்பு. 1963ஆம் ஆண்டில் ஒரு சிமிண்டு கிட்டங்கியின் மாடியறையில் ஆரம்பித்து இன்றைக்கெல்லாம் நாற்பத்திநான்கு ஆண்டு கடந்து விட்ட நிலையில் மூன்று மாடி உயர்கட்டிடமாக வளர்ந்துநிற்கிறது. பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூற்களைக் கொண்டு நகரின் பெரியதோர் நூலகமாகவும் கலாச்சார அரங்கமாகவும் சிறந்து விளங்குகிறது. சங்கவெளியீடாக 1978ல் “கேரளத்தமிழ்” தொடங்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9389

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி

உங்கள் குடும்பப் பின்புலம் என்ன? அம்மா அப்பாவின் சொந்தஊர், பூர்வீகம்? ஏனென்றால் நீங்கள் திருவனந்தபுரத்தைப்பற்றி மட்டுமே எழுதும் எழுத்தாளர்… என் அப்பா ஆவுடைநாயகம் பிள்ளை. செங்கோட்டைக்காரர். அவரது அப்பா சோமசுந்தரம் பிள்ளை காலத்திலேயே திருவனந்தபுரம் வந்துவிட்டார்கள். சோமசுந்தரம்பிள்ளை கலால் காண்டிராக்டராக நிறைய சம்பாத்தியமெல்லாம் பண்ணி தோட்டம் துரவுகளோடு இங்கே ஜகதி என்ற இடத்தில் பெருந்தனக்காரராக வாழ்ந்தவராம். அவருக்கும் அந்தக்கால மரபுப் படி இரண்டு மனைவியர். மூத்ததாரத்தின் மூத்தமகன் ஆவுடை நாயகம். இளைய தாரத்திலும், இரண்டோ மூன்றோ சந்ததிகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9383

தினமலர்,நேர்காணல்

நவீன படைப்பிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் நீங்கள். சினிமாவில் கதை வசனம் எழுதி வருவது பற்றி….

Permanent link to this article: https://www.jeyamohan.in/7301

Older posts «