Tag Archive: நேரு

எம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3

வரலாற்றின் விடுபடல்கள்   எழுதப்பட்ட வரலாற்றை ஒரு நிழல் போலத்தொடர்ந்து செல்லும் மத்தாயியின் கிசுகிசு வரலாற்றை நம் சமூகம் அறச்சீற்றத்துடன் எதிர்கொண்டது. என்னென்ன வகையான எதிர்வினைகள் அன்று வந்தன என்று தெரியவில்லை, வெளிவந்த காலத்தில் நான் சிறுவன். ஆனால் இப்போது பேசும்போது விதிவிலக்கில்லாமல் அனைவருமே அந்நூலை ஒரு ‘கீழ்த்தரமான’ நூல் என்றே சொன்னார்கள். மத்தாயி நன்றி மறந்தவர் என்றார்கள். எனக்கு அப்படித்தோன்றவில்லை.   மத்தாயி எழுதிய நூலை விடவும் கிசுகிசுத்தன்மை மிக்க நூல்கள் பல வந்திருக்கின்றன. வெறும் மனக்கசப்புகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4715

காந்தி நேரு-கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, ”காந்தியின் சீடர்களின் செல்வம்” படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நேருவைப் பற்றி நிறைய எதிர்மறைக் கருத்துக்களை மட்டுமே கொண்டிருந்த எனக்கு தங்களின் இந்தப் பதிவு, “மூதாதையரின் குரல்” மற்றும் http://www.gandhitoday.in இணைய தளத்தில் இருந்த “அப்போது காந்தி வந்தார்” பதிவுத் தொடர் ஆகியவற்றின் மூலம் ஒரு நல்ல தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி. நேருவைப் பற்றி நடுநிலையாக எழுதப்பட்ட நூல்களை எனக்கு தயவு செய்து பரிந்துரைக்க முடியுமா? மேலும் நேருவின் “Discovery of …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31504

கடிதங்கள்

ஜெ, நான் உங்கள் எழுத்துக்களை விரும்பும் ஒரு வாசகன். எனக்குத் தமிழிலக்கியங்களை (சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பிறகு சங்க இலக்கியம்) உரைகளின் உதவியின்றி சொந்தமாகப் படித்தறிய விருப்பம். இதைச் செய்ய எந்தத் தமிழ் அகராதி சரியாக இருக்கும் என்று தெரிவித்தால் உதவியாக இருக்கும். என்னிடம் கதிரைவேற்பிள்ளையின் அகராதியும், சந்தியா பதிப்பகத்தின் தமிழிலக்கிய அகராதியும் உள்ளது. இவையிரண்டும் போதவில்லை. (பல சொற்களுக்கு இவற்றில் இடமில்லை). இந்த விஷயத்தை உங்களிடம் கேட்பது அசட்டுத்தனமாக இருந்தால் மன்னிக்கவும். அன்புடன் சந்திரசேகர் அன்புள்ள சந்திரசேகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21391

நம் அறிவியல்- கடிதம்

அன்புள்ள ஜெ, நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது. வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு  உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது,  ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத்  தெரிய வந்தது. சூடுபட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20555

இந்திய அறிவியல் எங்கே?

அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் எனும் முதற்சிந்தனையாளர்  கட்டுரை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அயோத்திதாசர் ஒரு தலித் சிந்தனையாளர் என்று தான் கேள்விப்பட்டிருந்தேன். அவரின் அறிவாளுமை இவ்வளவு பெரியது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். மரபிலிருந்து விலகிய நாம் மீண்டும் அதனுடன் தொடர்பு கொள்ளத் தங்களின் கட்டுரை ஒரு தெளிவான முன்வரைவை அளித்தது. மரபான ஞானத்தில் இருந்து நாம் துண்டிக்கப்பட்டது, துரதிஷ்டவசமாக   அதை உணராமலேயே இருப்பது ஒரு பெரும் சாபக்கேடு. நம்முடைய கோயில்களில் உள்ள கட்டிட நுட்பத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19636

சிலைகள்

அன்புள்ள ஜே, உங்கள் இணைய எழுத்துக்களைக் கூர்ந்து வாசித்துவருகிறேன். நீங்கள் காந்தியின் படுக்கையறை விஷயங்களை எழுதுகிறீர்கள். நேருவின் தொடர்புகளை எழுதுகிறீர்கள். உடனே எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி எழுதுகிறீர்கள். பெரியாரின் வைக்கம் மித் பற்றி எழுதுகிறீர்கள். சூடாகவெ பாரதியைப்பற்றி எழுதுகிறீர்கள். காந்தி நேருவைப்பற்றிச் சொல்லும்போது ரசிப்பவர்கள் பெரியாரைப்பற்றி சொன்னால் எகிறுகிறார்கள். பெரியாரைப்பற்றிச் சொல்லும்போது சிரிப்பவர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமியைப்பற்றிச் சொன்னால் சீறுகிறார்கள். பாரதிக்குக் கூட ஆளிருக்கிறது,பாவம் காந்தி. சிலசமயம் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று நான் நினைப்பதுண்டு. நீங்கள் உங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6334

» Newer posts