Tag Archive: நேரு

அரசியலும் மேற்கோள்திரிபுகளும்

அன்புள்ள ஜெமோ, முதலில் கீழ்க்காணும் செய்திக்கட்டுரையை ஒருமுறை படித்துவிடவும் (இதுவரை உங்கள் கண்ணிற்பட்டிராவிட்டால்). https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed Annihilation of Caste என்ற சிறுநூலை வாசித்துள்ள எளிய ஒருவராலேயே சட்டென அடையாளங்கண்டுகொள்ளப்பட்டுவிடமுடியும் என்ற அளவுக்கான ஒரு புளுகுமூட்டைக் கட்டுரையை எப்படி அரவிந்தன் நீலகண்டன் இத்தனைத் துணிவாக எழுதியிருக்கிறார்! சொல்லப்போனால் அவரது எழுத்தை நம்பிப் படிப்பவர்களுக்கு இழைத்துள்ள துரோகம். தன் பிற கட்டுரைகள், ஆய்வுகள்மீதும் ஐயத்தையும் நம்பிக்கையின்மையையும் கொள்ளச்செய்யும் என்ற அளவில், அவர் தனக்குத்தானே  செய்துகொண்ட துரோகமுங்கூட எனலாம். இத்தனைத் தில்லாலங்கடிகள்செய்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100107/

அரசின்மைவாதம் -ஐரோப்பாவும் இந்தியாவும்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபமாக இணையதளங்கள் மூலம் அரசழிவு கோட்பாடு (Anarchism) பற்றி ஏராளமாக வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த சொல் கூட சரி தானா என்ற குழப்பத்தோடு எழுதுகிறேன். Anarchism என்பதை இங்கே அராஜகவாதம் என்று தான் பலருக்கும் தெரிந்திருக்கிறது. அது ஏற்கனவே எனக்கிருந்த அரசாங்கம் ஏன் தேவை என்ற கேள்வியை மேலும் உறுதியாக்க செய்திருக்கிறது. George Woodcock என்பவர் Anarchism: a History of Libertarian Ideas and Movements எனும் நூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/97120/

நேருவின் பொருளியல்கொள்கை பற்றி…

  இந்திய ஜனநாயகத்திற்கும் ஒரு நவீனப்பொருளியலாக இத்தேசம் எழுந்து வந்தமைக்கும் நேருவின் பங்களிப்பு எத்தனை பெரியது என்று இந்தியர்கள் அனைவரும் உணர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை இங்குள்ள அடிப்படைவாதிகள் உருவாக்கிக்கொண்டிருக்கும் காலம் இது. அரவிந்தன் கண்ணையனின் இந்த நீளமான கட்டுரை பலகோணங்களில் நேருவின் முன்னோடிப் பங்களிப்பை அலசுகிறது.   இருவகையில் நேருவின் பங்களிப்பை மதிப்பிடவேண்டுமென இக்கட்டுரை சொல்கிறது. ஒன்று நேரு என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல., அவர் ஒரு காலகட்டத்தின் முகம், ஒரு கருத்தியலின் மையம். இந்தியா நவீன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81826/

பௌத்தம்,நேரு -கடிதங்கள்

அன்பு ஜெமோ, நலம்தானே? அருண்மொழி அவர்கள், அஜிதன், சைதன்யா அனைவரும் நலமா? சில நாட்களுக்கு முன்பு டாக்டர். வின்பீல்ட் அவர்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம் ( பௌத்தத்தின் படிமங்கள், உருவங்கள் பற்றி உயராய்வு செய்து புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பேராசிரியர். நீங்கள் வந்திருந்தபோது பேரார்வத்துடன் வந்து சந்தித்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தவர்). அவர் வீட்டு வரவேற்பறையில் தாய்லாந்து ஓவியங்களை மாட்டியிருந்தார். நான் திருவாரூரில் கோயில்களில் பார்த்த சிற்பங்களைப்போன்ற ஓவியம்! அப்போது அவர் 20 வருடங்களுக்கும் முன்னர் பரம்பனான், போராப்புதூர் ஆலயங்களுக்கு நேரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81416/

இந்தியசிந்தனை- ஒரு கடிதம்,விளக்கம்

ஆசிரியருக்கு, வணக்கம். நேருவும் அவரது அணுக்கர்களான மகாலானோபிஸ் பி.என்.ஹக்ஸர் போன்றவர்களும் இணைந்து இங்கே உருவாக்கிய கல்விமுறை என்பது இந்திய மரபு சார்ந்த அனைத்தையுமே மதம்சார்ந்தது என விலக்கிவைப்பதாக இருந்தது. ஒரு தேசம் அதன் தத்துவப்பாரம்பரியத்தை – உலகின் மிகப்பெரிய தத்துவப்பாரம்பரியங்களில் ஒன்றை- ஒரு சொல்கூட தன் மாணவர்களுக்கு கற்பிக்காத கல்விமுறை ஒன்றை உருவாக்கியிருக்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டும்தான். உலகவரலாற்றிலேயே முன்னும் பின்னும் அதற்கு உதாரணம் இல்லை. முழுமையான ஐரோப்பியக்கல்வி இங்கே பொதுக்கல்வியாக ஆகியது. சோறிடும் கல்வியே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75744/

சூரியதிசைப் பயணம் – 11

ஷிவ்சாகரிலிருந்து காலையிலேயே கிளம்பிவிட்டோம். அருணாச்சலப்பிரதேசத்திற்கு ஒரு குறுகிய பயணம் போய் மீண்டோமென்றாலும் அதுதான் நாங்கள் அசாமிலிருந்து வடகிழக்கு பழங்குடி மாகாணங்களுக்குச் செல்லும் பயணம். மேகாலயா நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் திரிபுரா அருணாச்சலப்பிரதேஷ் சிக்கிம் ஆகிய ஏழு வடகிழக்கு மாகாணங்கள் ஏழுசகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மாகாணங்கள் அனைத்திற்கும் உள்ள பொது அம்சம் என்பது இவை அனைத்துமே பழங்குடிகளுக்குரியவை என்பது. மகாபாரதகாலம் முதல் அறியப்பட்ட ஒரே பழங்குடிப்பகுதி மணிப்பூர்தான். பிற நிலப்பகுதிகள் அப்போது மக்கள் வாழாத அடர்காடுகளாக இருந்திருக்கவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71801/

பகவத் கீதை தேசியப்புனித நூலா?

பகவத்கீதையை இந்தியாவின் தேசியப்புனித நூலாக அறிவிக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதை நாளிதழ்ச்செய்திகளில் வாசிக்க நேர்ந்தது. இந்துத்துவ அரசியல் என்பது இந்துப் பண்பாட்டு மரபில் இருந்து உடனடி அரசியலுக்குண்டான சில கருவிகளை மட்டும் எடுத்துக்கொள்வது, அதன்பொருட்டு ஒட்டுமொத்தப்பண்பாட்டுவெளியையே குறுக்கிச் சிறுமைப்படுத்துவது என்றநிலையிலேயே உள்ளது. இதைச்செய்பவர்கள் எவரும் இந்துமரபில் போதியஅறிவுகொண்டவர்களோ ஒட்டுமொத்த இந்துப்பண்பாடு பற்றிய புரிதல் கொண்டவர்களோ அல்ல. வெறும் தெருச்சண்டை அரசியல்வாதிகள். அல்லது மேடையில் உளறும் அசடுகள். இந்த அறிவிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததே பகவத்கீதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66954/

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சர்தார் படேல் பற்றி பி ஏ கிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆணித்தரமான கட்டுரை இது. இன்றைய சூழலில் மிக முக்கியமான குரலாக ஒலிக்கிறது. எத்திசையிலும் வெறுப்புக்குரல்களே ஒலிக்கும் சூழல் இது. வெறுப்பு வெறுப்புக்குப் பதிலாகிறது. முற்போக்கு என்றும் ஜனநாயகம் என்றும் பாவனைகாட்டி ஒருசாரார் ஒட்டுமொத்த இந்தியமரபையே, சிந்தனையையே கீழ்த்தரமாக வசைபாடுகிறார்கள். காலை எழுந்ததுமே சாபம் போட்டுக்கொண்டு பேசத்தொடங்குகிறார்கள். எதிர்வினையாக அத்தனை மதச்சார்பற்ற- ஜனநாயக நம்பிக்கை கொண்ட ஆளுமைகளையும் அடித்து நொறுக்க இந்துத்துவர் முயல்கிறார்கள். நியாயம், சமநிலை பற்றி எவருக்குமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64530/

எம்.ஓ.மத்தாயின் நினைவுகள்-1

 1. நிழல் வரலாறு   ”நம்முடைய பழைய மன்னர்களின் பேரதிருஷ்டம் என்னவென்றால் அவர்களின் அடைப்பக்காரர்கள் வரலாறு ஏதும் எழுதவில்லை” ஒரு தனிப்பட்ட உரையாடலில் பி.கெ.பாலகிருஷ்ணன் சொன்னார். ஆனால் அது உண்மையில்லை என்றே நினைக்கிறேன். அக்கால வரலாறென்பதே வாய்மொழி வரலாறுதானே, அடைப்பக்காரர்கள் தங்களுக்கான வாய்மொழி வரலாற்றை உருவாக்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள் பிரபல மலையாள இதழியலாளரான நரேந்திரன் சொன்னதாக ஒரு கூற்று உண்டு. ‘இரண்டுவகை வரலாறுகள் உள்ளன. ஒன்று அதிகாரபுர்வ வரலாறு, இன்னொன்று கிசுகிசு. முதலில் சொன்னது உண்மை போன்ற பொய், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4703/

எம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2

2.மறுவரலாற்றில் நேரு மத்தாய் ஒரு நல்ல எழுத்தாளர் அல்ல. அவரது நூல் உதிரி உதிரி நிகழ்ச்சிகளால் ஆனதாகவும் சீரற்ற முறையில் விஷயங்களைச் சொல்வதாகவும்தான் உள்ளது.அவர் தன்னைப்பற்றிய தகவல்களை மிகக் குறைவாகவே சொல்கிறார். அதே சமயம் நேருவுடனான அவரது உறவைப்பற்றி துண்டுச்செய்திகளாக நிறையச் சொல்லிச் செல்கிறார். அவற்றின் வழியாக ஒரு நேரு வரைபடம் நம் மனதில் உருவாகிறது. அது மத்தாயின் சிருஷ்டி அல்ல, அந்நிகழ்ச்சிகள் இயல்பாக உருவாக்குவது அது நேரு சம்பிரதாயங்கள் இல்லாத நேரடியான மனிதர். தன்னை மேலே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4707/

Older posts «