Tag Archive: நேதாஜி

சூரியதிசைப் பயணம் – 12

திமாப்பூரில் இருந்து கிளம்பி கோஹிமாவுக்கு மாலை ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம். ஆனால் ஏழு மணி என்பது இப்பகுதியில் நள்ளிரவுபோல. குளிர். ஊரும் அடங்கத்தொடங்கிவிட்டிருந்தது. நாங்கள் கோஹிமாவிலிருந்து ஸுக்கு சமவெளிக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால் அதை பயணிகளுக்கு மூடிவிட்டார்கள் என்று அனுமதிகோருவதற்காகச் சொல்லி வைத்திருந்த நண்பர் சொல்லிவிட்டார். காரணம் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆகவே மறுநாள் கோஹிமாவையே பார்ப்பதற்கு முடிவெடுத்தோம். கோஹிமாவில் அரசினர் விடுதியை அரைமணிநேரம் தேடிக் கண்டடைந்தோம். கோஹிமா நாகாலாந்தின் தலைநகரம். மிக அதிகமாக பூகம்பங்கள் நிகழும் இடங்களில் ஒன்று இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71839

காந்தியும் நேதாஜியும்,கடிதங்கள்

என்னுடைய சில ஒரிய நண்பர்களுடன் உங்கள் கட்டுரையைப்பற்றி விவாதித்தேன். முன்னால் லோக்சபா ஸ்பீக்கர் ரபிராய் உங்கள் வாதத்தின் நிலைபாடை பாராட்டினார். டாக்டர் ராம் மனோகர் லோகியா ம்ட்டுமே நேதாஜி விவகாரத்தில் காந்தியை ஆதரித்த ஒரே சோஷலிஸ்டு தலைவர் என்று ரபிராய் சொன்னார். அதற்கு லோகியா சொன்ன காரணங்கள் இரண்டு 1. காந்தி இல்லாமல் காங்கிரஸ் இல்லை 2. காந்தியின் அகிம்சை மீது லோகியாவுக்கு இருந்த நம்பிக்கை ஓர் ஒரிய இதழாளர் உங்கள் கட்டுரையை மொழியாக்கம்செய்து ஒரிய இதழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3014