Tag Archive: நெடுங்குருதி

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

[ 1 ] அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும் எவரேனும் தங்களை நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால் “எந்தப் பக்கமா?” என்று கேட்பார்கள். ஏனென்றால் நெல்லை இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச்செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொருநெல்லை. ஈரமான, பசுமையான நெல்லை நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116365

நெடுங்குருதி 4

 4. காலத்தின் கதை   நெடுங்குருதி கிட்டத்தட்ட நூறாண்டு காலத்தின் கதை. கிட்டத்தட்ட ஐநூறு பக்கங்கள் வழியாக நூறு வருடங்களும் வழிந்தோடுகின்றன. எந்த பெரிய நாவலையும் போல இதுவும் காலத்தின் கதைதான். காலம் இந்நாவலில் நேரடியாக வெளிப்படுவதில்லை. அது கதாபாத்திரங்கள் மூலமே நிகழ்கிறது. இன்னும் சொல்லப் போனால் காலம் இதில் நாகுவின் வழியாகவும் திருமாலின் வழியாகவும் வளர்ந்து செல்வதையே நாம் காண்கிறோம். காலத்தின் மெல்லிய அரவங்கள் கூடவே ஒலிப்பதைத்தான் நாம் நெடுங்குருதி நாவலின் பக்கங்களில் காண்கிறோம். காலத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4887

நெடுங்குருதி 3

3. மிதக்கும் புள்ளிகள் வாழ்க்கைச் சித்திரம் என்றவகையில் ‘நெடுங்குருதி’ அளிக்கும் அனுபவம் என்ன? முதலில் குறிப்பிட வேண்டிய விஷயம் இது கொஞ்சம்கூட நாடகீயத்தன்மை இல்லாத ஆக்கம் என்பதே. இயல்புவாத நாவல்களுக்குரிய விரிவான தகவல்சார் விவரணைகளுடன், அறிக்கையிடும் தன்மை கொண்ட, ஒட்டாத நடையுடன் செல்கிறது இந்நாவல். அதே சமயம் கதைக்கூற்றில் எப்போதும் ஒரு உணர்ச்சிகரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. நிகழ்ச்சிகளில் தீவிரமான உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. ஆயினும் நாவல் ஒருவித விலகல்தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. நெடுங்குருதி நாகுவின் கதையாகத் தொடங்குகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4883

நெடுங்குருதி -2

 2. குருதிமுத்திரைகள்  அன்றாட வாழ்க்கையின் நேரடியான யதார்த்தத்தில் இருந்து தன்னுடைய படிமங்களை உருவாக்கிக் கொண்டு புதியவகை எழுத்தின் சாத்தியக்கூறுகளுக்குள் செல்லும் இலக்கிய ஆக்கம் என்று எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி என்ற நாவலைக் குறிப்பிடலாம். இந்த அர்த்தபூர்வமான  இணைப்பின் வழியாகவே இது முக்கியமான நாவலாக ஆகிறது. இதன் யதார்த்தம் படிமங்களுக்கு உயிரை அளிக்கிறது. படிமத்தன்மை யதார்த்தத்தை பல அடுக்குகள் கொண்டதாக ஆக்குகிறது. இந்த ஊடுபாவு காரணமாக இந்நாவலின் பல இடங்களில்  உயர்கவித்துவம் சாத்தியமாகியிருக்கிறது.   வேம்பலை என்ற கிராமத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4845

நெடுங்குருதி-1

படிம நதி: எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி   ‘வாழ்க்கை படிமங்களை உற்பத்தி செய்வதைத் தவிர வேறெதையுமே செய்வதில்லை’ என்று ஓர் உரையாடலில் போர்ஹெஸ் குறிப்பிடுகிறார். அந்த வரியை வாசித்தபோது ஒரு கணம் விசித்திரமான ஒரு கற்பனை எழுந்தது. வரலாற்று நிகழ்வு என்பது ஒரு ஒளிப்பதிவுக் கருவி. அதற்குமுன் நின்று நடிக்கும் திரைப்பட நடிகர்கள்தான் அத்தனை மனிதர்களும். நடிப்பு, அரங்கு, கதை எல்லாமே அந்தக்  கருவி பதிவு செய்து கொள்ளும் பொருட்டு நிகழ்பவையே. அது பதிவு செய்து முடித்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4841