Tag Archive: நூல்

இந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்

  சென்னை புத்தகக் கண்காட்சி 8-1-2009 முதல் பத்துநாட்கள் நடக்கவிருக்கிறது. நான் சென்னையில் இருந்து நேற்று கிளம்பி இன்று வந்து சேர்ந்தேன். ஆகவே புத்தகக் கண்காட்சிக்கு நான் வரப்போவதில்லை. பொதுவாக நான் எல்லா அவ்ருடமும் சென்னை புத்தக்கக் கண்காட்சிக்கு வருவதுண்டு . இவ்வருடம் சாத்தியபப்டவில்லை. என்பதில் சற்றே வருத்தம்தான். என்னுடைய ஐந்து நூல்கள் இவ்வருடம் வெளிவருகின்றன. உயிர்ம்மை பதிப்பக வெளியீடாக மூன்று நூல்கள் 1. நிதழல்- அனுபவக்குறிப்புகள். வாழ்க்கையனுபவங்களை சிறிய அனுபவக்கதைகளாகச் சொல்லும் கட்டுரைகளின் தொகுதி 2. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1186/

குறளும் கிறித்தவமும்

சாலமோனின் நீதிமொழிகள்தான் குறளில் உள்ளன என்று  http://xavi.wordpress.com/2008/02/22/valluvar_solomon/ இணையதளம் சொல்கிறதே என்ன எண்ணுகிறீர்கள்? **  அன்புள்ள … உங்கள் கடிதம். நீங்கள் சொன்ன கட்டுரையை படித்தேன். பொதுவாக உலகமெங்கும் நீதிநூல்களுக்குள் பொதுமை காணப்படுகிறது. ஏனென்றால் குடிமைநீதி என்பது வேறு வேறல்ல. மானுடகுலம் முழுக்க கிட்டத்தட்ட அது ஒன்றே. தங்கள் நூல்களில் மட்டுமெ நீதி இருக்கமுடியும், நீதி என்பதே தங்களிடம் மட்டும்தான் உள்ளது என்று நம்பாதவர்கள் எல்லா நீதிநூல்களிலும் அடிபப்டை நீதியை கண்டுகொள்ளலாம்.மெசபடோமிய களிமண் கட்டளைகளுக்கும் குறளுக்கும் உள்ள ஒப்புமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/612/

கீதை எதற்காக?

கீதை கீதையை ஏன் பயில வேண்டும்? ஒரு மதநூலாக அதைப் பயின்றாக வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு சற்றும் இல்லை. இந்துமதம் அப்படி எந்தக் கட்டாயத்தையும் விதிக்கவில்லை. வழிபாட்டு நூலகவும் அது இன்றியமையாதது அல்ல. வேதங்கள், திருமுறைகள், திருவாய்மொழிகள் போன்றவையே அவ்வகையில் முக்கியமானவை. கீதை ஒரு தத்துவ நூல், ஞான நூல் என்ற இருவகையிலும்தான் அதை வாசிக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்திய தத்துவமரபை கற்க விரும்புகிறவர்களுக்கு அது தவிர்க்க இயலாத நூலாகும். இந்து மெய்ஞான மரபை அறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/567/

மலேசியா, மார்ச் 8, 2001

மலேசியாவில் கம்போங் மெடான் வட்டாரத்தில் 2001 மார்ச் மாதம் எட்டம் தேதி முதல் தொடங்கி மார்ச் 24 வரை தொடர்ந்து அங்கு வாழும் இந்திய வம்சாவளி மலேசியர்கள் மேல் கடுமையான தாக்குதல் நடைபெற்றது. ஐந்து இந்தியர் வம்சாவளியினரும் ஒரு இந்தோனேசியரும் இதில் கொல்லப்பட்டார்கள். தொண்ணூறுக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இதில் கடுமையாக காயம் அடைந்தார்கள்.இந்தக் கலவரம் தொடர்பான ஆவணங்களையும் கள ஆய்வுத்தகவல்களையும் திரட்டி முனைவர் சு.நாகராஜன் எழுதிய ஆய்வேட்டுப் பக்கங்களையும் பிற ஆதாரங்களையும் கொண்டு கா.ஆறுமுகம் தொகுத்திருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/505/

மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் நீங்கள் எழுதிய கீதைகட்டுரைகள் குறித்து நிகழும் இந்த விவாதத்தைக் கவனித்தீர்களா? [ கீதை இந்துமதநூலா, தத்துவநூலா?: எதிர்வினை ] உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளனவே? ரமேஷ் அன்புள்ள ரமேஷ், உங்கள் ஆதங்கம் புரிகிறது. இணைப்பை வாசித்தேன். அதில் உள்ள மறுமொழிகள் உட்பட அது ஒரு தரப்பின் குரல். அதில் சொல்லப்பட்டுள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள். மதத்துக்கும் ஆன்மீகத்துக்குமான உறவை இப்போது இந்த கீதை விவாதத்தில் இணைத்துக்கொள்ள போவதில்லை. அதன் ஒருமை கெட்டுவிடும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/476/

ஜெயமோகன் நூல்கள் – அறிவிப்பு

ஜெயமோகன் நூல்கள் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. http://jeyamohan.in/?page_id=359

Permanent link to this article: https://www.jeyamohan.in/361/

ஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி

இசை விமரிசகர் ஷாஜி வாசகர்களுக்கு தெரிந்தவரே. அவரது ‘இசை பட வாழ்தல்’ என்ற கட்டுரைத் தொடர் உயிர்மை வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட ஒரு நட்சத்திர பதவியையே அவருக்கு அளித்தது அது. ஷாஜி எனக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்குமெல்லாம் நெருக்கமான தோழர் ஷாஜி விளம்பரத்துறையில் விளம்பர எழுத்தாளராக பணியாற்றுகிறார். அசலான நகைச்சுவை உணர்வு கொன்ட அவரது விளம்பர எழுத்துக்கள் பெரும் புகழ்பெற்றவை. சமீபத்தில் அவருக்கு விளம்பர எழுத்துக்களுக்கு அளிக்கப்படும் பெருமைக்குரிய ‘பெப்பர்’ விருது அளிக்கப்பட்டுள்ளது. நண்பர் ஷாஜி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/358/

ஆதிமூலம் நினைவிதழ்

தமிழ் சிற்றிதழுலகில் சுந்தர ராமசாமிக்கு உரிய இடம் ஆதிமூலத்துக்கும் ஒருவகையில் உண்டு. எழுபதுகளில் சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவந்து அவை மட்டுமே அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு உரிய ஒரே தளம் என்ற நிலை இருந்தபோது அவற்றின் முன்னுதாரணர்களாக இருவரும் இருந்தார்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவரை இன்னொருவர் எப்போதும் நினைவுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.சிற்றிதழ்சார்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் ஒர் இளம் வாசகன் எழுபதுகளில் சந்திக்க விரும்பும் இரு ஆளுமைகளாக அவர்கள் இருந்தார்கள். நிமிர்வான தோற்றமும், கவனமான பேச்சுமுறையும், நிதானமான அணுகுமுறையும், எவரையுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/261/

மகாபாரதம் -ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களை மிகவும் கவர்ந்த நூலாக மகாபாரதத்தைக் கூறி உள்ளீர்கள்.என் போன்றவர்களுக்கு மஹாபாரதம் ஒரு ஆன்மீக நூல் , சுவாராசியமான கதை மற்றும் அதிகம் எளிதில் புரியாத தத்துவங்களை கொண்ட நூல் என்பதாக ஒரு மதிப்பீடு மட்டுமே உண்டு. ஒரு ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு மற்றும் படைப்பூக்கம் கொண்டவர் என்ற முறையில் மகாபாரதத்தை எப்படி வாசிக்கிறீர்கள் மற்றும் அது பற்றிய உங்கள் பார்வை என்ன என்பதனை பகிர்ந்து கொள்ள முடியுமா ? நன்றி. அன்புடன், மதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/260/

இலக்கியக் கலைச்சொற்கள்

அக ஒளி Enlightenment படைப்பில் உருவாகும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட முழுமைநோக்கு அகவயம் : Subjective ஒருவரின் அகம் சார்ந்தது, தனிப்பட்ட முறையிலானது. அந்தரங்கமானது அகமொழி Langue பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானம். புறமொழிக்கு கொடுக்கச் சாத்தியமான அர்த்தங்களினால் ஆனது அது. அதுவே கேட்கும்மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது. அங்கதம் :Satire கேலிப்படைப்பு அடித்தளம்: Base மார்க்ஸிய நோக்கில் சமூகத்தின் பொருளியல் அமைப்பு. உற்பத்தி வினியோகம் இரண்டும் அடங்கியது அடுக்கதிகாரம்: Hierarchy அதிகாரம் ஒன்றுக்குமேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு அணியியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/182/

Older posts «

» Newer posts