Tag Archive: நூல்

வம்சி பதிப்பகம் புதிய நூல்கள்

வம்சி வெளியீடுகள் – 2010   1. தென்னிந்திய நவீன சிறுகதைகள். தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும்                               நவீன சிறுகதைகளின் தொகுப்பு – தொகுப்பு : கே.வி. ஷைலஜா.     அனுபவங்களின் நிழல் பாதை – ரெங்கைய்யா முருகன், இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்.. 3.         19, டி. எம். சாரோனிலிருந்து – பவாசெல்லதுரை     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5775/

தமிழினி வெளியிடும் ஜெயமோகன் நூல்கள்

தமிழினி இவ்வருடம் வெளியிடும் ஜெயமோகனின் நான்கு நூல்கள் 1. அனல்காற்று நாவல் 2.  இன்றைய காந்தி [ காந்திய உரையாடல்கள்] 3.  எழுதும்கலை [இலக்கிய படைப்பாக்கம் குறித்து அறிமுகம்] 4.  இந்திய சிந்தனை,சில விவாதங்கள் [இந்திய சிந்தனை மரபைச் சார்ந்த விவாதங்கள்]

Permanent link to this article: https://www.jeyamohan.in/5817/

கடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு

1.சுனையும் நீரோடையும்   வற்றுவதும் வழியவிடுவதும், இறுகுவதும் நெகிழ்வதும் என கவிதைக்கு இருவகையான ஆதாரப் போக்குகள் இருக்கின்றன என்றுபடுகிறது. ஒரு காலகட்டத்துக்கு பொதுவாகவே இவற்றில் ஒரு பண்பு மேலோங்கிக் காணப்படுகிறது. அதேசமயம் இவ்விரு பண்புகளும் எப்போதும் கவிதைப் பரப்புக்குள் செயல்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. முன்னதை செவ்வியல் (Classicim) என்கிறோம். பின்னதை கற்பனாவாதம் அல்லது புத்தெழுச்சி வாதம் (Romanticism) என்கிறோம். இச்சொற்கள் ஏற்கனவே புழக்கத்தில் இருப்பவையாதலால் அவற்றைப் பயன்படுத்துவது என் வழக்கம். ஆனால் பொருள் சார்ந்த பொருத்தம் ஏற்பட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5761/

புத்தக விழா

சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் [LLA Auditorium Anna Salai Chennai] அடுத்த சனிக்கிழமை, 19 -12-09 மாலை ஆறுமணிக்கு ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் முகப்புப் பக்கங்களும் குறிப்புகளும் கீழே இன்று பெற்றவை :எழுத்தாளனின் நாட்குறிப்புகள் எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஓரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல. கடந்த சிலவருடங்களில் ஜெயமோகன் பண்பாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5585/

சீரோ டிகிரி:எதிர்மரபும் மரபு எதிர்ப்பும்

சீரோ டிகிரியை மதிப்பிட மிகுந்த தடையைத் தருவது சாருநிவேதிதா மிகுந்த பிரக்ஞையுடன் பல்வேறு உத்திகள் மூலமாக உருவாக்கிக் கொள்ளும் சுய பிம்பம்தான். இப்பிம்பத்தைக்கூட சாருநிவேதிதாவால் இன்றுவரை திறம்பட உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பது என் கருத்து. இதைமுதலில் நான் அவதானித்தது பத்து வருடம் முன்பு, சென்னையில் ஒரு கூட்டத்தில் நான் பேசிய பிறகு கேள்வி கேட்க எழுந்த சாருநிவேதிதா ‘கேள்வியுரை’ நிகழ்த்தியபோதுதான்! நான் படித்திராத-அதன் மூலம் இலக்கியம் பேசும் தகுதியை இழந்துவிட நேர்ந்த-லத்தீன் அமெரிக்க நூல்களின் பட்டியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5634/

வாசிப்பில் நுழைதல்

ஜெயமோகன், நலமா?  என்னை பற்றி கூறுவதன் மூலம் இந்த கடிதத்தை ஆரம்பிப்பது சரியாய்  இருக்குமென்று நினைக்கின்றேன் . வாசிப்பு உலகத்தின் முதல் நிலை படிக்கட்டுகளில்  ஏற விரும்புகின்ற ‘வாசிப்பு பழகுனர்’  நான். என் தந்தையின் துண்டுதளால் தான்,  நான் முதலில் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.  அவர் என்னை வாசிக்க சொன்ன முதல் புத்தகம் கல்கி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’ அதன் பின்னர்தான் வாசிப்பதை என் வாழ்கையின் மிக முக்கிய பகுதியாக செய்து  கொண்டேன். தமிழ் இலக்கியம், வரலாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2467/

விதிமுள்

   அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிறது. கன்னத்தில் ஒரு பெரிய கட்டி. அதைப்பார்க்க வந்த உள்ளூர் மருத்துவரிடம் அழகான சின்ன மகளை காட்டி ”பிள்ளைக்கும் கன்னத்தில் கால் ரூபாய் அளவுக்கு தழும்பு இருக்கிறது. என்ன பிரச்சினை என்று பாருங்கள்” என்று சொல்கிறாள் அம்மா. மருத்துவர் பார்த்துவிட்டு அது தொழுநோய் என்று சொல்கிறார். ”ஆரம்பநிலைதான். ஆனால் குணப்படுத்திவிடலாம்”என்று சொல்கிறார். அம்மா அழுகிறாள். ‘பொம்பிளைப்பிள்ளைக்கு இபப்டி வந்துட்டுதே‘ என்கிறாள். ஆனால் சிகிழ்ச்சை அவ்வளவுதான்   அப்பாவுக்கே சிகிழ்ச்சை மந்திரவாதம், நாட்டுவைத்தியம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2211/

மார்கழியில் தேவதேவன்

நவீனத் தமிழிலக்கியப்பரப்பில் தேவதேவனின் கவிதைகளுக்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு உண்டு. ஒருவேளை உலக நவீனக் கவிதையிலேயே அது ஒரு அபூர்வமான விஷயமாக இருக்கலாம்.  அவர் துயரங்களைப் பற்றி எழுதியதே இல்லை. அவரது கவிதைகள் அனைத்துமே பரவசங்களைப் பற்றியவை. மன எழுச்சிகளைப் பற்றியவை. உன்னதங்களை நோக்கி முகம் திருப்பி ஒளி பெற்றுக்கொண்டவை. துயரங்கள் என்றால்கூட அவை மகத்தான துயரங்கள். ஒருபோதும் லௌகீகதுக்கத்தின் சிறுமைக்குள் சிக்கிவிடாதவை.   நவீனக்கவிதைகள் என்றாலே அடர்ந்த துக்கத்தின் சித்திரங்கள் என்ற நிலை இன்றுள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2315/

மரபிலக்கியம் ஒரு கடிதம்

ஜெயமோகனாருக்கு வணக்கங்கள் நான் நமது மெட்ரிகுலேசன் பள்ளிகளின் பல்லாயிரக்கணக்கான ( லட்சங்கள் தான் சரியென்று படுகிறது ) வார்ப்புகளில் ஒருவன். எங்கள் அனைவருக்கும் கீழ்கண்ட குணமிருக்கும் 1. உடனடியாக பயன் தராத எதுவும் கற்கக் கூடாது 2. நாலு பேர் செய்வது தான் சரி – தனியாய் எதாவது செய்தால் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்ற எண்ணம் 3. பொறியியல் கல்லூரியில் சேர்வதைக்காட்டிலும் பிழைப்பதற்கு வேறு வழியே இல்லை 4. கல்லூரியில் சேர்ந்த பின்னர், பன்னாட்டு நிறுவனங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1366/

தன்னுரைத்தல்

  பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். என் குரல் சற்று கம்மியது. உரத்த குரலில் ஓங்கிய பாவனைகளுடன் உரையாடவும் எனக்குப் பழக்கம் இல்லை. அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல.   எல்லா மேடைகளிலும் ஒரு சிறு மன்னிப்புக் குறிப்புடன்தான் நான் பேச ஆரம்பிப்பேன். சில சமயம் என்னுடைய பேச்சு நன்றாக இருந்தது என்று கூறுவார்கள். சில சமயம் சொதப்பிவிட்டது என்று எனக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1161/

Older posts «

» Newer posts