Tag Archive: நூல்

மாறுதலின் இக்காலகட்டத்தில்…

தமிழினி “இலக்கிய முன்னோடிகள் வரிசை” புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவாக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41/

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்

  மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம். என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க வாழ்த்துகிரேன். இருபதுவருடங்களுக்கும் மேலாக அவர் மீது ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவன் நான். ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் பலகோணங்களில் விவாதமும் புரிந்திருக்கிறார். ஆனால் நான் என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலை அவருக்குத்தான்  சமர்ப்பணம் செய்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/578/

சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

‘நவீனத்துவ இலக்கியம் அடைந்தது கூர்மையை தவறவிட்டது சுவாரசியத்தை’ என்று ஒருமுறை பேராசிரியர் ஜேசுதாசன் நேர்ப்பேச்சில் சொன்னார். பெரிதும் செவ்விலக்கியங்களில் மனம் தோய்ந்த அவருக்கு நவீன இலக்கியங்கள் மீது விலகல் இல்லாவிட்டாலும் பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவர் விரும்பிய தமிழ் எழுத்தாளர்கள் ஆரம்பகால சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன். அவர்களின் பொதுவான அம்சம் சுவாரசியமே. அவர் சுவாரசியம் என்று சொன்னது செயற்கையான வேடிக்கைகளை அல்ல. அத்தகைய வேடிக்கைகளை எழுதிய எவரையுமே அவர் விரும்பவில்லை. அவரது நோக்கில் சுவாரசியம் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/472/

பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வரலாறு] ஆசிரியர்: ஜெயந்தி சங்கர் உயிர்மை பதிப்பகம். விலை120 பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள காரணங்கள் சிலவற்றை முன்வைப்பார்கள். ஐரோப்பாவில் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்கியதில் கிறித்தவ தேவாலயத்தின் பங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. அரேபியாவில் இஸ்லாமின் பங்கு இன்றும் அழுத்தமாகவே தொடர்கிறது. இந்தியாவில் மனுநீதி போன்ற மதநீதிநூல்கள் சுட்டப்படுகின்றன. ஆனால் உலகவரலாற்றை எடுத்துப்பார்த்தால் எங்கும் பெண்மீதான அடக்குமுறை ஒரே மாதிரியாகத்தான் இருந்துவந்துள்ளது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/90/

புறப்பாடு நூலாக…

புறப்பாடு நற்றிணை வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ஒரு தற்செயல் வேகத்தினால் நான் எழுத ஆரம்பித்த என் வீடுதுறத்தல் அனுபவங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாவலுக்குரிய வடிவ ஒருமையுடன் வந்திருப்பதை நூலை பார்க்கையில் உணரமுடிகிறது. இணையத்தில் தொடராக வாசித்தவர்கள்கூட ஒரே நூலாக வாசிக்கையில் முழுமையான ஒரு அனுபவத்தைப்பெறமுடியும் ஜெ அன்புள்ள ஜெ புறப்பாடு முன்னுரை வாசித்தேன். அதில் அஜிதனைப்பற்றிச் சொல்லியிருந்த வரிகளை மனநெகிழ்ச்சியுடன் வாசித்தேன். பிள்ளைகளைப்பற்றிய மனக்குறைகள்தான் எல்லாருக்கும் கடைசியில் எஞ்சுகின்றன. பெரிய மனநிறைவுடன் நீங்கள் சொல்லியிருந்ததை வாசித்தபோது கண்களில் நீர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42827/

ஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு

ஜெயமோகனின் எட்டு நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் கடந்த 6. 10.03 அன்று நடைபெற்றது. பொதுவாக இந்நிகழ்ச்சி குறித்து இருந்த ஆர்வத்தை பிரதிபலிப்பதாக இருந்தது கூட்டம். சாதாரணமாக இலக்கியக் கூட்டங்களுக்கு ஐம்பது முதல் அதிகபட்சம் நூறுபேர் வரை வருவதே வழக்கம். இக்கூட்டத்துக்கு ஏறத்தாழ இருநூற்றைம்பதுபேர் வந்திருந்தார்கள் .அத்தனை கூட்டத்தை எதிர்பார்க்காததனால் அனைவருக்கும் அமரவசதி செய்யமுடியாமல் போனது. ‘உயிரியக்கம் ‘ , ‘அப்பாவின் அத்தை ‘ போன்ற சிறுகதைத் தொகுதிகளை எழுதிய கி அ. சச்சிதானந்தம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/759/

மொழி- 3,வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை

பி. கே. சிவக்குமார் எஸ் வையாபுரிப்பிள்ளையைப்பற்றி எழுதும் தொடர் கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உள்ளவை. வையாபுரிப்பிள்ளை எந்த அரசியல் அமைப்பின் பின்பலமும் இல்லாதவர். திராவிட இயக்கத்தில் கடும் எதிர்ப்புக்கு அவர் ஆளானார். அதேசயம் காங்கிரஸின் ஆதரவினைப்பெற அவர் முயலவுமில்லை. வேளாளச்சாதியினராக இருந்தும் அச்சாதியின் குரலை புறக்கணித்தமையால் ஒதுக்கப்பட்டார். அன்றைய தமிழ் அரசியல்சூழல் உருவாக்கிய மரபு சார்ந்தப் போலிப் பெருமிதங்களை ஆய்வடிப்படையில் ஏற்க மறுத்தமையால் நிராகரிக்கப்பட்டு வசைபாடப்பட்டவர் அவர். அவரை இன்று நினைவுகூர்கையில் சிலவிஷயங்களை வகுத்துச் சொல்லலாம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33/

யானை டாக்டர் இலவச நூல் வினியோகம்

ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் சிறுகதை இயற்கை குறித்தும் , வன உயிர்கள் குறித்துமான அக்கறையையும் கவனத்தையும் கோருகிறது , டாக்டர் கிருஷ்ணமூர்த்தி எனும் மகத்தான மனிதரை உலகிற்குச் சரியான பார்வையில் அறிமுகப்படுத்துகிறது . இந்த கதை சமூகத்திற்குப் பரவாலாகப் போய் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்,யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகிக்கிறோம் , முதல்கட்டமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19511/

காந்தியை எப்படி வகுத்துக்கொள்வது?

 இந்த விவாதம் இத்தனை தூரம் நீளுமென எதிர்பார்க்கவில்லை.  இது சாதாரணமான பேச்சாக ஆரம்பித்து மெல்லமெல்ல வளர்ந்த நூல். ஆகவே இந்நூலின் அமைப்பில் ஒரு சமமின்மை உள்ளது. ஆரம்பகாலக் கட்டுரைகள் எளிமையான பதில்களாக இருக்கையில் பின்னர் வந்த கட்டுரைகள் பெரிய விளக்கங்களாக இருக்கின்றன. வந்துசேர்ந்தவற்றில் இன்னமும் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன.  ஜெ.சி.குமரப்பா, தரம்பால், சுந்தர்லால் பகுகுணா, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, முகமதுயூனுஸ், வங்காரி மாதாய் போன்ற இருபது நவீன காந்தியர்களைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் சேர்க்கப்படவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5806/

தமிழினியில்…

இன்றைய காந்தி காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது அனல்காற்று அனல்காற்று சட்டென்று வாழ்க்கையில் அடிக்க ஆரம்பிக்கிறது. அனைத்தையும் வரளச்செய்து வெடிக்கச்செய்து தாகம் தாகம் என தவிக்கச்செய்துவிடுகிறது. ஆனால் அனல்காற்று அடித்தால் அதன் உச்சத்தில் மழை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6106/

Older posts «