Tag Archive: நூல் வெளியீட்டு விழா

“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”

மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள் அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, “ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”… தீம்புனல் நாவல் வெளியீட்டு நிகழ்வில் நீங்கள் சொல்கிற இந்த ஒற்றைவரி இன்றைய நாள்முழுதையும் மீளமீள ஒரு கலையாழத்துக்குள் கொண்டுசெல்கிறது. ஜி.காரல் மார்க்ஸ் அவர்களின் ‘தீம்புனல்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு முடிந்த இருதினங்களாகவே அதன் காணொளிகளைக் காண காத்திருந்தேன். முழுக்க கலைசார்ந்த ஒரு பார்வையை முன்வைக்குமிடத்தில் தான் விமர்சனமும் ஒரு தனிக்கலையாகப் பரிணமிக்கிறது. இக்குரல் ஒருவகையில், சுந்தர ராமசாமி உள்ளிட்ட முன்னாளுமைகளை எனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129420

இன்று விஷ்ணுபுரம் விழா

சென்னையில் இன்று விஷ்ணுபுரம் பத்தாண்டுவிழா, நூல்வெளியீடு. மூன்று எழுத்தாளர்கள் தென்னிந்திய இலக்கியச்சூழல் பற்றி மூன்று சிற்றுரைகளை நிகழ்த்துகிறார்கள். பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. விஷ்ணுபுரம் அமைப்பின் பத்தாண்டு நிறைவு கோவையில் சென்ற டிசம்பரில் நிகழ்ந்து முடிந்தது. சென்னையில் ஒரு சிறு நினைவுகொள்ளல் இது. பங்களிப்போர் – எச்.எஸ்.சிவப்பிரகாஷ் [கன்னடம்] கே.சி.நாராயணன் [மலையாளம்] சு.வேணுகோபால் [தமிழ்] பத்து நூல்கள் வெளியீடு: ராஜகோபாலன், கிரிதரன் ராஜகோபாலன், சா. ராம்குமார், காளிப்பிரசாத், சுசித்ரா, நாகப்பிரகாஷ், விஜயராகவன், பாலசுப்ரமணியம் முத்துசாமி, நரேந்திரன், ஸ்ரீனிவாசன் உரையாற்றுவோர்: …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129269

அறம் விழா

  அறம் சிறுகதைத்தொகுப்பு வெளியீட்டு விழா ஈரோடில் வரும் நவம்பர் 26 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது , நண்பர்கள் அனைவருக்கும் நல்வரவு . அறம் – சிறுகதைத் தொகுப்பு கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/22504

திருவனந்தபுரத்தில் ஓர் உரை

நாளை 3-10-2010 அன்று மாலை அரங்கில் நான் பேசவிருக்கிறேன். நூல் வெளியீட்டு விழா. மலையாள எழுத்தாளர் மதுபால் நெடுங்காலமாக திரைப்படங்களில் பணியாற்றியவர். சிறுவேடங்களில் நடித்துமிருக்கிறார். அவர் இயக்கிய தலப்பாவு என்ற படம் விருதுகள் பெற்றது. நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை மேலதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க செயற்கை மோதலில் கொலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டு அதைச்செய்ய நேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் பிற்கால வாழ்க்கையின் தீராத துயரங்களையும் வாழ்வின் இறுதியில் அவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு குற்றவுணர்ச்சியில் இருந்து மீள்வதையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8478

ஈரோட்டில்…

கோவை முருகன் விடுதி அறையில் அதிகாலையில் ஐந்துமணிக்கு  எங்கள் குழுவின் கமாண்டராக தன்னை தானே நியமனம் கொண்டிருந்த கிருஷ்ணன் எழுந்து படாரென்று கழிப்பறை கதவைத் திறந்து, பெரியபடாராக அதை மூடி, அனைவரையும் பதறி எழச்செய்தார். அவர் துண்டை உதறிய ஒலியில் அந்த விடுதி அலறி எழுந்திருக்கும். வேறுவழியில்லை, ஈரோடு அழைக்கிறது. இருந்தாலும் நான் அரைமணிநேரம் கண்மூடி படுத்திருந்தேன். எல்லாரும் குளித்து முடித்ததும் கிளம்ப ஆரம்பித்தோம். ஆறரைக்கு கிளம்ப கமாண்டர் போட்டிருந்த திட்டம் ஏழாகியும்  ஆரம்பிக்கவில்லை. ஆகவே நாஞ்சில்நாடனையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6367