Tag Archive: நூலகம்

நூலகம்

எட்டாவது படிக்கும்போது நான் ஒருமுறை ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி நூலகத்தைப் பார்த்தேன். எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சி. வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைக்கூட்டிச்சென்ற துளசி அண்ணா புத்தகங்களை எடுத்துக்கொண்டு “வாடா”என்று கூப்பிட்டபோதுதான் விழித்தெழுந்தேன். வெளியே வந்தபோது ஏங்கி அழுதுகொண்டிருந்தேன். “என்னடா?”என்றார் அண்ணா. “இத்தன புக்கையும் நான் எப்ப படிக்கப்போறேன்?”என்றேன் விசும்பியபடி ஏனென்றால் என் வீட்டிலேயே என் அம்மா உருவாக்கிய நூலகமிருந்தது. அதில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் இரண்டாயிரம் புத்தகங்களுக்குமேலேயே இருந்தன. பாதிக்குமேல் அப்போதே நான் வாசித்திருந்தேன். விரைவிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72146

கிருஷ்ணமூர்த்தியின் நூலகம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு திருப்பூரில் உள்ள ராஜமாணிக்கம் (உங்கள் நெருங்கிய நண்பரும் கூட) அவருடன் பேசிக் கொண்டிருந்த போது நீங்கள் புதுக்கோட்டை காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகச் சொன்னார். நான் வலைத் தளத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறேன். தேவியர் இல்லம் திருப்பூர் என்ற பெயரில். ஒரு வேளை நீங்கள் பார்த்து இருக்கலாம். சேர்தளம் நண்பர்கள் கூட உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். உங்கள் எழுத்தில் நான் கடைசியாக விரும்பிப் படித்தது கூடங்குளம் பற்றி எழுதிய கருத்துக்கள். கீழே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31235

பாளையில் ஒரு நூலகம்

அன்புள்ள ஜெயமோகன், எனது நெடுநாள் கனவு வருகிற ஜனவரி 19 அன்று சாத்தியமாகிறது. நெல்லை பாளையில் புதிதாய் புத்தகம் & குறுந்தகடுகள் வாடகை நிலையம் துவங்க இருக்கிறேன். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் வரவேண்டும். உங்கள் வாழ்த்துக்களை அளிக்க வேண்டும், பாலா (கோவில்பட்டி) முகவரி: ஷக்தி புத்தகம் மற்றும் குறுந்தகடுகள் வாடகை நிலையம், 110/2A, ஷா காம்ப்ளெக்ஸ், ராஜேந்திரன் நகர், திருவனந்த புரம் சாலை, பாளை – 2 செல்பேசி: 9790906490 [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/11621