Tag Archive: நூறு நாற்காலிகள்

வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன். ‘படிச்சாச்சு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77875

நூறுநாற்காலிகள்-கடிதம்

அன்பள்ள ஜெ அங்கதக்கட்டுரைகளின் வழிதான் தாங்கள் அறிமுகம். நானும் திருநெல்வேலி மாவட்டம் தான், தென்காசி, அதனால் வட்டார வழக்கு கொண்ட கதைகள் மேல் ஓர் இனம்புரியாத ஈர்ப்பு. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் உங்கள் எழுத்துக்களை நோக்கி தூண்டியிருக்கலாம். சமீபத்தில் அப்படி நான் படித்த கதைகளில் என்னை மிகவும் பாதித்தது “நூறு நாற்காலிகள்” . தங்களின் எழுத்துக்கள் மட்டுமே இவ்வளவு நுணுக்கமாக விளிம்பு நிலை மனிதர்களை பற்றி காண்கிறேன். கதை நெடுகவே மௌனமாக இந்த சமுதாயம் கட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72049

இரு புதிய வாசகர்கள்

மதிப்பிற்க்குஉரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த இரண்டு மாதங்களாக நான் தங்களது வலை தளத்தை வாசித்து வருகிறேன். தங்களது படைப்புகள் மிகவும் அருமயாகவும் கருத்து செறிவுடனும் உள்ளது, நான் தற்கால படைப்புகளில் மிகவும் விரும்பி படிப்பது திரு எஸ்ரா அவர்களின் படைப்புகள். கடந்த ஏழு வருட அயல் நாட்டு வாசத்தில், எனக்குள் இருந்த சிறிய இலக்கிய தொடர்பும் அறுந்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நான் தங்களின் வலைதள அறிமுகம் கிடைத்தது. முதலில் என்னை ஈர்த்தது தங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70490

அறம் தீண்டும் கரங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். கடந்த கும்பமேளாவிற்கு கிளம்பும் முன் என்னிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் மூன்று டிராவல் பேக்குகளில் அடைத்து எனது நெருங்கிய நண்பனுக்கு அவன் வீட்டில் சென்று அளித்துவிட்டு கிளம்பினேன். தனியாக கிளம்பினேன் எந்த முன் பயண திட்டமும் இல்லாமல். இரண்டு மாத திட்டம் திரும்பிவர மூன்று மாதங்களானது. நண்பன் அதிகம் வாசிப்பு பழக்கம் இல்லாதவன். தங்கள் தளத்தைப் பற்றியும் எழுத்துக்களைப் பற்றியும் அதிகம் பேசுவேன். நான் அளித்த புத்தகங்களில் உங்களின் புத்தகங்கள் நாவல்கள் அனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66519

நூறுநாற்காலிகளின் யதார்த்தம்

அன்புள்ள ஜெயமோகன் , வணக்கம், சென்ற வாரம் தான் நூறு நாற்காலிகள் கதையை உங்கள் தளத்தில் படித்தேன். மனதில் கொப்பளிக்கும் உணர்வுகளை சொல்லவே முடியவில்லை, மிகவும் கனமாக உணர்கிறேன். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சூழலுக்கு நடுவேயும் அந்த கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது, அதன்பிறகு எதனையும் வாசிக்க முடியவில்லை. நான் பிறந்து வளர்ந்த தலித்துகள் அதிகம் வாழும் சூழலில் ஆதிக்க சாதி அடக்குமுறைகளையெல்லாம் நான் பார்த்ததே இல்லை, (கூட்டமாக இருப்பவர்களே ஆதிக்க சாதி இந்த காலத்தில்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62088

வணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும். கேசவமணி கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/60830

கடிதங்கள்

பெருமதிப்புக்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று தங்கள் ‘வலைத்தளத்தில்’ பதிவான ”நூறு நாற்காலிகளும் நானும்” மறுபடியும் என்னை ‘அற உலகத்திற்கு’ அழைத்துச் சென்றுவிட்டது. மீளமுடியாமல் தவிக்கிறேன். முதன் முதலில் இத்தொகுப்பைப் படித்த போது என்ன இருந்தாலும் இது ஒரு கதைதானே என்ற ஒரு துளி எண்ணம் மன ஓரத்தில் இருந்தது. பிறகு இத்தொகுப்பிற்கு வந்த பின்னூட்டத்தைப் பார்த்து, நிகழ்கால மனிதர்களுக்கும் இதற்கும் கண்டிப்பாகத் தொடர்பு உள்ளது என்று அறிய நேர்ந்தபோது மனதில் சற்று நம்பிக்கை துளிர்த்தது. இன்று இப்பதிவைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23890