Tag Archive: நூறுநிலங்களின் மலை

நூறுநிலங்களின் மலை-கடிதம்

நூறு நிலங்களின் மலை பதிவுகளை இப்போது தான் படித்து முடித்தேன். அற்புதம்! தமிழில் இமயப் பயணம் பற்றி எழுதப் பட்ட மிகச் சிறந்த படைப்பு அனேகமாக இது தான் என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் கூட மிக மிக அபூர்வமாகவே இவ்வளவு செறிவான, ஆழமான, உயிரோட்டமான இமாலயப் பயணக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். வானுயர்ந்த இமயச் சிகரங்களில் கூடும் ஆன்மீகத் தருணங்களையும், அங்கு பொங்கும் அழகின் பிரவாகத்தையும் மட்டுமல்ல; மலைக் கிராமங்களின் சலிப்பூட்டும் தினசரி வாழ்க்கை, பௌத்த மடாலயங்களின் வரலாறு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40022/

நூறுநிலங்களின் மலை, கடிதங்கள்

வணக்கம் ஜெமோ. இமயமலைப்பயணம் முழுவதையும் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்! படங்கள் ஒவ்வொன்றும். அருமை. நேரில் போகமுடியவில்லை என்ற ஏக்கத்தை ஓரளவு தணித்தது என்றாலும் தொடர் எட்டில் இருக்கும் ஒட்டகத்தின் போஸ் & மனநிலை அட்டகாசம். அணுஅணுவாக ரசித்து மகிழவைத்தது. சண்டிகரில் ஒன்னரை வருசம் வசித்தும் இவ்வளவு நல்ல இடங்களைத் தவற விட்டேனே என்ற அங்கலாய்ப்பு எனக்கு:( மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன், என் தாகம் அடங்க. அஜிதன் நன்றாக வளர்ந்துவிட்டா(ன்)ர். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை! அருண்மொழிக்கும் சைதன்யாவுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39912/

1979

அன்புள்ள ஜெயமோகன், சமணர் குகைகள் பயணத்தொடருக்குப்பின் இந்த இமயப் பயணத் தொடரை அள்ளிப்பருகி வருகிறேன். இப்படித்தான் பயணக்கட்டுரை எழுத வேண்டும் பார்த்துக்கொள் என்று பாடம் நடத்துவது போல் உள்ளது. உண்மையில் இதைத் தமிழில் பயணத்தொடர் டாக்குமெண்டரி படமாகவே எடுத்திருக்கலாம்- இப்போதும்கூட நீங்கள் எடுத்துள்ள படத்துண்டுகளையும் புகைப்படங்களையும் உங்கள் அனுபவத்தைப் பேட்டியாகவும் சரியாக வெட்டி ஒட்டி விட்டால் ஒரு அமெச்சூர் டாக்குமெண்டரி தயார் செய்து விடலாம் என்று தோன்றுகிறது. நீங்கள் எழுதிய பகுதிகளிலேயே சமகால உலக அரசியல் அடிப்படையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39814/

லடாக்கின் தமிழ் முகங்கள்

மதிப்பிற்குரிய ஜெ, இணைய கட்டுரைகளின் வாயிலாக நீங்கள் நலமாக இருப்பதை உணர்கிறேன். இமயப் பயணமும் முழுமையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். கண் முன் இமயம் விரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி. பின்னிரவின் கனத்த மௌனத்தில், மெல்லிய குளிர் நடுக்கத்தில், என் இமயப்  பயண நினைவுகளை மீட்டெடுக்கிறது உங்கள் வரிகள். ‘லே’ அரண்மனைச் சுவர் மீது அமர்ந்து கொண்டு சிறுவன் ஒருவன் மிக சரளமாக ஆங்கிலத்தில் என்னிடம் ‘லே’ பற்றி வகுப்பெடுத்தான், சுற்றியிருக்கும் மணல் இறுகிய மலைகளைக் காண்பித்து, இவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39820/

நூறுநிலங்களின் மலை – 12

மணாலி சண்டிகர் வழியில் உண்மையில் இரவு மிகுந்த சிக்கலுக்குள்ளானோம். மணாலியில் நாங்கள் தங்கவில்லை. மணாலிச் சாலையோரம் ஓர் திபெத்திய அம்மா கூடாரம் கட்டி உணவகம் அமைத்திருந்தார்கள். அங்கே காலைச்சாப்பாடு சாப்பிட்டோம். அங்கிருந்து இரவுணவு உண்பது வரை கிட்டத்தட்ட பதினாறு மணிநேரம் தொடர்ச்சியான பயணம். மலையிறங்கியபின் அந்த அம்மணியை நினைத்துக்கொண்டோம். அபாரமான சுறுசுறுப்பு. சமையல் பரிமாறுதல் கணக்குச் சொல்லுதல் எல்லாமே அவர்கள்தான். பாடிக்கொண்டே இருந்தார்கள். எங்கள் ஊர் கன்யாகுமரி என்று கேட்டறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். டெல்லிக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39732/

நூறுநிலங்களின் மலை – 11

லே-மணாலி சாலை உலகிலேயே இரண்டாவது உயரமான சாலை என்று சொல்லப்படுகிறது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இருந்து இமாச்சலப்பிரதேசத்துக்குச் செல்லும் சாலை இது. தேசியநெடுஞ்சாலை 21 என இதை குறிப்பிடுகிறார்கள். சராசரியாக 13000 அடி உயரமுள்ளது இந்தச்சாலை. உச்ச உயரம் 17480 அடி. இந்த இடத்தை டாங்லாங் மலைக்கணவாய் என அழைக்கிறார்கள். மிகச்சிக்கலான , அபாயகரமான சாலை. கோடைகாலப்புழுதியைவிட குளிர்காலப்பனி உறுதியானது என்கிறார்கள். ஆனால் அதற்குள் இத்தகைய சாலைகளுக்கு பழகிவிட்டிருந்தோம். ஸன்ஸ்கர் சாலையில் சென்றபின் எதைப்பார்த்தாலும் இது பரவாயில்லை என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39725/

நூறுநிலங்களின் மலை – 10

லே நகரிலிருந்து மணாலி வரை காரிலேயே வந்து அங்கிருந்து பேருந்து வழியாக டெல்லி வந்து டெல்லியில் இருந்து ஊர்திரும்புவது திட்டம். ஆனால் செலவினங்களை கணக்குப்போட்டுப் பார்த்தபோது அதைவிட காரிலேயே டெல்லிவரை செல்வதுதான் லாபம் என்று தெரிந்தது. லேயில் இருந்து மேலும் சில இடங்களுக்குச் செல்லும் திட்டமும் இருந்தது. பொதுவாக இந்தப்பயணத்தில் ஊரில் இருந்துகொண்டு கிலோமீட்டர் கணக்குகளைக்கொண்டு போடப்பட்ட திட்டங்கள் எல்லாமே தவறின. சராசரியாக ஒருமணிநேரத்திற்கு இருபது கிலோமீட்டர்தான் இப்பகுதியில் பயணம் செய்யமுடியும். ஸன்ஸ்கர் சமவெளியில் பத்து கிமீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39710/

நூறுநிலங்களின் மலை – 9

லே நகருக்கு நள்ளிரவில் வந்துசேர்ந்தபோது மின்சாரம் இல்லை. லே நகரம் சமீபகாலம்வரை முழுக்கமுழுக்க டீசலை எரித்துத்தான் மின்சாரத்தைப்பெற்றுக்கொண்டிருந்தது. அதுவும் ராணுவ டிரக்குகள் கொண்டுவரும் டீசலை அவர்கள் மின்சாரமாக ஆக்கி நகருக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.சமீபகாலமாகத்தான் அங்கே இரு சிறு நீர்மின் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அறையை அடைந்தபோது வன ஊழியர் இருளுக்குள் வந்து டீ கொடுத்தார். [சங் லா கணவாயில் கவிஞர்] இரவு சத்பால் வந்து நெடுநேரம் பேசிவிட்டுச்சென்றார். ஹண்டரில் நடந்த குளறுபடிகளுக்கு மன்னிப்பு கோரினார். அது எங்கும் நிகழ்வதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39696/

நூறுநிலங்களின் மலை – 8

ஹண்டரின் விடுதியில் தேவதேவன் காலையிலேயே எழுந்து சென்று சுற்றிலுமுள்ள செடிகொடிகளைப்பார்வையிட ஆரம்பித்துவிட்டிருந்தார். பின்பக்கம் நின்ற ஆப்பிள் மரங்களிலிருந்து நாலைந்து ஆப்பிள்களை பறித்துவந்தார். அவரும் அஜிதனுமாகத் தின்றனர். அஜிதன் ‘பாக்க சிவப்பாத்தான் இருக்கு. ஆனா காய்’ என்றான். தேவதேவன் ‘நல்லாத்தான் இருக்கு’ என்று அபிப்பிராயப்பட்டார். விடுதிக்கு முன்னால் தக்காளி வெங்காயம் பயிரிட்டிருந்தனர். தேவதேவன் ஊருக்குச்சென்றதும் அதேபோல வெங்காயம் பயிரிடப்போவதாகச் சொன்னார். வெங்காயத்தாள் பொரியல் செய்வதை அவருக்கு நான் விளக்கினேன். விடுதியின் முகப்பில் பெரிய சூரியமின்சக்தி வெந்நீர் உருளை இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39669/

நூறுநிலங்களின் மலை – 7

லே நகரிலிருந்து நுப்ரா சமவெளிக்குச் செல்லவேண்டும். லே நகரின் விதிகளில் ஒன்று வேறு ஓட்டுநர்களை அவர்கள் உள்மலைப்பயணத்துக்கு அனுமதிப்பதில்லை என்பது. ஒருநாளுக்கு இருபதாயிரம் ரூபாய் கட்டணம் கேட்டார்கள். சத்பாலிடம் சொன்னோம். அந்த ஓட்டுநர்களே ஓட்டுவதுதான் பாதுகாப்பு என்றார். வேறு வழியில்லாமல் ஓர் ஓட்டுநரை அமைத்துக்கொண்டோம். மங்கோலிய இனத்தைச்சேர்ந்த ஓட்டுநர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர். ஓட்டுநர் வேலை அங்கே மிக கௌரவமான வேலை. வண்டியும் சொந்தமாக வைத்திருந்தார். கையில் ஒரு உறை போட்டிருந்தார். புலியின் கை போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39662/

Older posts «