Tag Archive: நூறுநாற்காலிகள்

அட்டைகள்

மலையாளத்தில் பாஷாபோஷினி ஆண்டுமலரில் வெளிவந்த யானைடாக்டர் குறுநாவலை பத்து பதிப்பகங்கள் வெளியிடவிருக்கின்றன. மாத்ருபூமி பதிப்பு வெளிவந்துவிட்டது. மதிப்புரைகளும் பாராட்டுரைகளும் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஒரு சேவை நிறுவனமான சைக்கிள் புக்ஸ் வெளியிட்டுள்ள எளிமையான முகப்பு ஓவியம் என்னை மிகவும் கவர்ந்தது. நூறுநாற்காலிகள் இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் அட்டைகளை பார்க்கையில் அதிலிருக்கும் வேறுபட்ட வாசிப்புகள் ஆச்சரியமூட்டுகின்றன. தொடக்கத்தில் அந்நாவல் நாற்காலிகளின் கதையாக வாசிக்கப்பட்டு மெல்ல அன்னையின் கதையாக ஆகிவிட்டதைக் காணமுடிகிறது. யானை டாக்டர் எடுத்த எடுப்பிலேயே யானைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99831/

விஷ்ணுப்பிரியாவும் நூறுநாற்காலிகளும்

ஜெ ஒருவருடம் முன்பு நூறுநாற்காலிகளை வாசித்துவிட்டு நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் ஒருவிஷயம் சொல்லியிருந்தேன். இன்றைக்கு ஐ ஏ எஸ் ஐ பி எஸ் போன்ற உயர்பதவிகளில் இருக்கும் தலித்துக்களுக்கு இதேபோன்ற சிக்கல்கள் ஏதும் இல்லை என்று சொன்னேன். அவர்கள்தான் மற்றவர்களை ஆட்டிவைக்கிறார்கள் என்று சொன்னேன். நீங்கள் எழுதியதெல்லாம் போனதலைமுறைப் பிரச்சினை என்று சொன்னேன். இன்றைக்கு விஷ்ணுப்பிரியாவின் தற்கொலையையும் அதற்கான காரணங்களையும் வாசிக்கும்போதுதான் நூறுநாற்காலிகள் அப்பட்டமான உண்மை என்று தெரிகிறது. நூறுநாற்காலிகளில் நீங்கள் எழுதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79134/

அறம் – சிக்கந்தர்

அன்புள்ள ஜெ. வணக்கம். சமீபத்தில் தங்களின் அறம் தொகுப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட எல்லா கதைகளையும் கண்களில் தேங்கிய நீருடன்தான் வாசிக்க முடிந்தது. ஒரு கதை முடிந்து அடுத்த கதையை உடனடியாக வாசிக்க முடியாது வாசித்த கதை தந்த துயரத்தில்/அதிர்வில்/இன்னும் சொல்ல தெரியாத காரணங்களால் புத்தகத்தை மூடி வைத்து வெறுமனே பார்த்துகொண்டிருப்பேன். இந்த கதையில் மனவெழுச்சி எழுப்பும் எல்லா மனிதர்களிடமும் ஆதாராமான நீதி இருந்தது. இப்படியான மனிதர்கள் அருகி வருகிறார்கள் என்பதே நிதர்சனம் என்று நினைக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55360/

நூறுநாற்காலிகளும் நானும்

[தலித் ஆய்வுநூல் வெளியீட்டகமான எழுத்து பிரசுரம் நூறுநாற்காலிகள் கதையை மட்டும் சிறிய மலிவுப்பதிப்பாக அதிகமான பிரதிகள் வெளியிட்டு மக்களிடையே கொண்டுசெல்லவிருக்கிறது. அதற்கு எழுதிய முன்னுரை] இந்தவருடம் ஜனவரியில் திடீரென்று எழுந்த ஒரு மன எழுச்சியைத் தொடர்ந்து பன்னிரண்டு கதைகள் எழுதினேன். முதல் கதை ‘அறம்’. அதுவே அத்தனை கதைகளுக்கும் சாராம்சமான கரு. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இலக்கியத்தின் சாராம்சம் என்றால் என்ன என்று நான் கேரளப் பெரும்படைப்பாளியான வைக்கம் முகமது பஷீரிடம் கேட்டேன்.  ‘நீதியுணர்ச்சி’ என்று அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21421/

நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நூறு நாற்காலிகள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் விலகமுடியாத வலியோடு எழுதுகிறேன். ஒரு எழுத்தின் மூலமாக இத்தனை வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இன்றுதான் உணர்கிறேன். கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாக படித்து சமூகத்தில் ஒரு சக்தி மிகுந்த ஆளாக நகரத்தில் வாழ்ந்து வரும் ஆதிக்க சாதி மனிதர்களும், கிராமத்தில் வாழும் பெற்றோர்களால் நீங்கள் குறிப்பிட்ட சில சங்கடங்களை சந்தித்தே வருகின்றனர். ஆனால் “நூறு நாற்காலிகள்” வரும் “காப்பன்” நிலை மனிதனாக பிறந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12963/

சாதி ,நூறுநாற்காலிகள்

அன்புள்ள ஜெ, இது தங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். தங்களின் கன்னியாகுமாரி, காடு, பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களிலும் பல சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும், விமர்சனங்களிலும் உங்களைச் சில காலமாகவே தொடர்ந்து வந்துள்ளேன். நூறு நாற்காலிகளில் வாழ்ந்தவர்கள் மனதுக்குள் ஏதோ ஒரு தாக்கத்தையும், சொல்ல முடியாத சமூகச் சுரண்டல்களையும் காதோரம் கிசுகிசுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு தாயின் பாசமும், ஒரு மகனின் பாசமும் இரு வேறு கோணங்களில் இயல்பாகவும், யதார்த்தமாகவும் பின்னப்பட்டு, சமூகப் பாய்ச்சலிலிருந்து மீள முடியாதத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13236/

நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

அன்பின் ஜெமோ, நலம்தானே ? அறம், சோற்றுக் கணக்கு ஆகிய கதைகளில் ஆரம்பித்து இப்போது நூறு நாற்காலிகளில் வந்து நிற்கிறேன். இன்னும் சில நாட்களில் இந்த கதை மாந்தர்கள் மறந்து போகலாம். ஆனால், இனிமேல் சாலைகளில், நாற்றம் வீசும் சாக்கடை ஓரங்களில் தங்கி இருக்கும் மக்களை பார்க்க நேர்ந்தால் இந்த கதைக் களன் கண்டிப்பாக வந்து போகும். இவர்களைப் போன்றவர்களின் நிலைமை எப்போது மாறும், ஒருவேளை நீங்கள் இறுதியில் முடித்தது போல நூறு நாற்காலிகளில் இவர்கள் உட்கார்ந்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13016/

நூறுநாற்காலிகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நூறு நாற்காலிகள் ஒரு மனவெழுச்சியின் உச்சநிலை!!!! புறவயமான சாதீய அடயாளங்களை, வாழ்வு நியதிகளை நீக்கி விட்டுப்பார்த்தால், ஆதி மனிதனின் தூய உணர்வுகள் வெளிப்படுவதை உணரலாம். “அம்மா”வில் ஒரு பறவை தன் குட்டியை அடைக்காக்கும் உணர்வு என்னை அதிரச்செய்தது! சமூக கோட்பாடுகளால் மூடப்படாத, களங்கமடையாத,புரிந்துகொள்ள முடியாத நிலை. உணர்ச்சிப்ரவாகமாய் பெருக்கெடுத்து ஒடும் நடையும், வாழ்வின் பெருங்கூச்சலோடும் முட்டி மோதும் பாத்திரங்களும்……….. என்ன எழுதினாலும்…. அது சம்பிரதாயமாகவே இருக்கும்….. ஆன்மாவை அடித்த ஒரு வலி……… சதீஷ் (மும்பை) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12936/

நூறுநாற்காலிகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கேட்கக்கூடாது, இருந்தாலும் கேட்காமலும் இருக்கமுடியவில்லை. நூறுநாற்காலிகள் உண்மைக்கதையா? உண்மைக்கதை இல்லைதானே? ஆனால் உண்மைக்கதைபோல ஒரு பாவனை, சுந்தரராமசாமி பெயர் எல்லாம் வருகிறது. உண்மைக்கதையாக இருக்கக் கூடாது என்று மனம் பதறுகிறது. குமார் செல்வராஜ் அன்புள்ள குமார் இந்தவரிசையில் எல்லா கதைகளுமே சாராம்சத்தில் உண்மைக்கதைகள். கதைகளில் வரலாற்றுமனிதர்கள் வந்தால் அவர்களின் பெயரையே பயன்படுத்துகிறேன். கொஞ்சம் தனிப்பட்ட முறையில் செல்லுமென்றால், அல்லது அவர்களின் குணச்சித்திரம் உண்மையை கொஞ்சம் மீறி விரியும் என்றால் ஊகிக்கக்கூடிய முறையில் மாற்றியமைக்கிறேன். ஏனென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12899/

நூறுநாற்காலிகள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், இந்த சிறுகதை வரிசையில் நீங்கள் எழுதும் சிறுகதைகளில் பெரும்பாலானவை உண்மை மனிதர்களின் கதைகள் மாதிரி தோன்றுகின்றன. அந்த வரிசையிலே வரக்கூடிய கதையாக இந்த நூறுநாற்காலிகள் அமைந்துள்ளது. நடுங்க வைக்கும் கதை. கதையை போகிறபோக்கில் வாசித்துச்ச்செல்லும்போது ஒரு பதற்றமும் துக்கமும் ஏற்படுகிறது. பதற்றம் குற்றவுணர்ச்சியால் வரக்கூடியது. துக்கம் மனுஷனின் கையறுநிலையை உணர்ந்ததனால் வரக்கூடியது. இந்த வரிசையிலே வந்த கதைகளில் இதுதான் உச்சம் என்று ஒவ்வொரு கதையிலும் தோன்றுகிறது. ஆனால் உண்மையிலேயே இதுதான் உச்சம். இந்தவரிசையிலே வரக்கூடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12894/

Older posts «