Tag Archive: நீல பத்மநாபன்

நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை

[ஒன்று] தமிழிலக்கியத்தில் நுழையும் ஒரு வாசகன் நீல பத்மநாபனைப் பற்றி குழப்பமான ஒரு சித்திரத்தையே அடைவான் . அவரது பெயர் அதிகமாக எங்குமே மேற்கோள் காட்டப் படுவது இல்லை. அவரது படைப்புகள் பேசப்படுவதுமில்லை. அவரைப் பற்றி பொதுவான கருத்தைக் கேட்டால் கணிசமான சம கால வாசகர்கள் அவர் தமிழிலக்கியத்தின் கடந்த காலத்து நினைவுகளில் ஒன்று மட்டுமே என்று சொல்லவும் கூடும். இன்று அவருடைய படைப்புகள், அவரது பாணி ஏதும் அவ்வளவு முக்கியமில்லை என்ற எண்ணம் பரவலாக உள்ளதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/363

அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்

நாகர்கோயிலில் 1-3-08 அன்று மாலை ஐந்தரை மணிக்கு நீலபத்மநாபனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தமைக்காக பாராட்டுவிழா நடைபெற்றது. அறிமுக உரை நிகழ்த்திய பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பெர்னாட் சந்திரா நீலபத்மநாபனின் இலக்கிய வாழ்க்கையை சுருக்கமாக விவரித்தார். பொறியியலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நீலபத்மநாபனுக்கு இப்போது எழுபதுவயது. ஐம்பதுவருடங்களாக அவர் எழுதிவருகிறார். அவரது தலைமுறைகள் தமிழில் வட்டாரவழக்கை ஓர் இலக்கிய உத்தியாக முன்வைத்த முன்னோடியான ஆக்கம். அதை அடையாளம்கண்டுகொண்டு பிரசுரிக்க பேராசிரியர் ஜேசுதாசன் காரணமாக அமைந்தாரென்றால் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/299

நீல பத்மநாபன் பாராட்டு விழா

சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் நீலபத்மநாபனுக்கு பாராட்டுவிழா இடம்   அரங்கம் ஆட்சியர் அலுவலகம் அருகே நாகர்கோயில் நேரம் மாலை 5.30 நாள் 1-3-08 சனிக்கிழமை தலைமை –  நாவலாசிரியர் பொன்னீலன் அறிமுக உரை – பெர்னாட் சந்திரா [ டீன், புனித சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை] வாழ்த்துரை: நாஞ்சில்நாடன் [ எழுத்தாளர்] வாழ்த்துரை: வேதசகாயகுமார் [விமரிசகர்] ராஜமார்த்தாண்டன்  [விமரிசகர்] ஏற்புரை –  நீல பத்மநாபன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/295