Tag Archive: ’நீலம்’ மலர்ந்த நாட்கள்

நீலம் மலர்ந்த நாட்கள் -3

[தொடர்ச்சி. நீலம் மலர்ந்த நாட்கள் 2] அனைத்தையும் விடமுக்கியமானவை கனவுகள். ஒவ்வொருநாளிலும் நாலைந்துமுறை சிறு தூக்கங்கள் போடுவேன். படப்பிடிப்பு இடத்தில் நாற்காலியில் சாய்ந்தே தூங்கிவிடுவேன். ஓட்டலில் அமர்ந்துகொண்டே தூங்குவேன். காரில் ஏறி ஐந்து நிமிடம் கழித்து இறங்குவதற்குள் ஒரு தூக்கம். இசைகேட்கும்போது சிலநிமிடங்கள் தூங்கியிருப்பேன். இத்தூக்கங்கள் எல்லாமே கனவுகள் நிறைந்தவை. கனவுகளை குறித்துவைக்கலாகாது என முடிவுசெய்திருந்தேன். குறித்துவைக்கவும் முடியாது. ஒருநாளில் நூற்றுக்கணக்கான கனவுகள். நீளமானவை. உதிரிபிம்பங்கள்.பல கனவுகள் தொடர்ச்சியாக நாட்கணக்கில் வந்தன. கனவுகளில் வண்ணம் இருக்காது என்றார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62452

நீலம் மலர்ந்த நாட்கள் 2

[தொடர்ச்சி- நீலம் மலர்ந்த நாட்கள் 1 ] மதுரையில் இருந்து நான் மட்டும் சென்னை சென்றேன். விமானநிலையத்தில் அடுத்த அத்தியாயத்தை எழுதினேன். சென்னையில் கிரீன்பார்க் ஓட்டலில் என் பிரியத்துக்குரிய அறையே வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டேன். கிரீன்பார்க் ஒரு விசித்திரக்கலவை. கீழே அது மிகப்பரபரப்பான ஒரு நட்சத்திரவிடுதி. மதுக்கடைகள், சந்திப்பு மையங்கள். மூன்றாவது மாடிக்கு மேலே மிகமிக அமைதியான,அழகிய உலகம்.நான் ஒரு மாதம் வரை கீழே என்ன நிகழ்கிறது என்று அறியாமலேயே மேலே தங்கியிருக்கிறேன். காலை உணவுக்கு வருவேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62450

’நீலம்’ மலர்ந்த நாட்கள் -1

செப்டம்பர் 24 காலை பதினொரு மணிக்கு நீலம் எழுதிமுடித்தேன். நாவல் எப்போது முடியும் என நேற்று முன்தினமே தெரிந்திருந்தமையால் பெரிய தத்தளிப்பு ஏதும் இல்லை. நாவல்கள் முடியும்போது உருவாகும் தனிமையும் வெறுமையும் சற்றுநேரம் சூழ்ந்திருந்தன. சற்றுநேரம் இசை கேட்டேன். ஒரு நீண்ட நடை சென்றுவந்தேன். நண்பர் ஈரோடு கிருஷ்ணனிடமும் அஜிதனிடமும் நீண்டநேரம் பேசினேன். வண்ணக்கடல் திட்டமிட்டபோது அதற்குள் கிருஷ்ணனின் கதையும் வந்துவிடும் என எண்ணினேன். இரண்டாவது அத்தியாயதில் பிரம்மம் ஒரு கைக்குழந்தையாக தன் எச்சிலை தானே உணர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62438