Tag Archive: நீலம்

நீலச்சிலை

  ஜெ, வெண்முரசு நாவல்கள் அனைத்தையும் வாங்கியவன் நான். ஒரு நாவலுக்கு படங்கள் அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலும் உங்கள் நாவல்கள் என்பவை மொழிவழியாக உருவாக்கும் படங்கள். அவைகளை வண்ணங்களின் படங்கள் இல்லாமலாக்கிவிடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் நீலம் நாவலை மட்டும் கடைக்குச் சென்று செம்பதிப்பாக வாங்கினேன். அதன்பின் வெவ்வேறு நண்பர்களுக்காக இரு நூல்கள் வாங்கினேன். என்னைப்பொறுத்தவரை உங்கள் நாவல்களில் மட்டும் அல்ல தமிழிலேயே கூட நீலம்தான் முதன்மையான நாவல். நாவல் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83851

நீலம்

அன்புள்ள ஜெயமோகன் நீலம் (சாதாரண பதிப்பு) வந்துவிட்டது. அதை http://www.nhm.in/shop/9789384149246.html இந்த சுட்டியில் வாங்கலாம். நீலம் செம்பதிப்பு இன்னும் சில நாள்களில் வந்துவிடும். வந்ததும் சொல்கிறேன். அன்புடன் பிரசன்னா

Permanent link to this article: https://www.jeyamohan.in/80223

கடிதங்கள்

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, காலஞ்சென்ற இசை அமைப்பாளர் திரு, ஏஏ ராஜ் அவர்களைப்பற்றிய தங்களது கட்டுரை எனது மனதை மிகவும் வருடிய ஒன்று. சற்றுமுன்தான் இந்தக்கட்டுரையை நான் படித்தேன். தங்களைப்போலவே நான் எனது பள்ளிநாட்களில், சரியாக நான் பத்தாவது படிக்கும்போது ஒருதலைராகமும், பன்னிரண்டாவது படிக்கும்போது தணியாததாகமும் வெளியானது. அந்த நாட்களில் சிலோன் ரேடியோவில் பலமுறை பூவே நீ யார்சொல்லி பாடலையும் அவளொரு மோகன ராகம் பாடலையும் கேட்டு அர்த்தம் புரியாத வயதில் அதன் இசைக்காகவே நான் மயங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72099

கிருஷ்ணன் வருகை

அன்புள்ள ஜெ நீலம் நாவலில் கண்ணன் இருந்தான். ஆனால் அது பாகவதக் கண்ணன். அவன் குணாதிசயம் வேறு. அவனை நீங்கள் காட்டிய நிறமும் வேறு. அந்தக்கண்ணன் இங்கே வெண்முரசில் தொடர்ந்து வரப்போவதில்லை என்றும் தெரிந்தது காவியக்கண்ணன் எப்படி எப்போது அறிமுகமாகப்போகிறான் என்பதை எண்ணிக்கொண்டே இருந்தேன். அந்தக்கண்ணனை ராதையின் பார்வையில் காட்டிய நீங்கள் இங்கே அர்ஜுனனின் பார்வையில் காட்டிவிட்டிருக்கிறீர்கள். அதற்கு முன் துரியோதனனின் பார்வையில் குறிப்பு வந்துவிடுகிறது. உதடுகள் புன்னகைப்பதை பார்த்திருப்பீர்கள், உடலே புன்னகைப்பதை அவனில் பார்க்கலாம் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66331

நீலம் -கிருஷ்ணா கிருஷ்ணா ஒரு பார்வை- வே.சுரேஷ்

ஒரு மேற்கோளுடன் தொடங்கலாம்.”உலகம் எங்கும் தியாகம், காதல் என இலக்கியம் மீண்டும் மீண்டும் பேசுகிறது. காரணம் அது அடிப்படை உணர்ச்சிகளை உன்னதமாக்கும் போக்கு என்பதனாலேயே. அதிலிருந்தே பண்பாடு உருவாகிறது என்பதனாலேயே உலகில் எந்த இலக்கியமும் அடிப்படை உணர்ச்சிகளை நோக்கித் திரும்பி போகும்படி பேச முடியாது. நவீனத்துவம் (Modernism) அதற்கு முன் இருந்த புத்தெழுச்சிவாதத்தை (Romanticism) எதிர்த்துப் பேசியது. புத்தெழுச்சிவாதம் உன்னதமாக்கலை மட்டுமே முன்வைத்தது. ஆகவே நவீனத்துவம் அடிப்படை உணர்ச்சிகளை நோக்கி கவனத்தை ஈர்த்தது. அடுத்த கட்டத்தில் பின்நவீனத்துவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64054

குருதியின் ஞானம்

ஜெ, கிருஷ்ணாவதாரம் அழகு மட்டுமே உள்ள ஒன்று என்ற எண்ணம்தான் என் மனசுக்குள் இருந்தது. அதற்குக்காரணம் நம் கதாகாலக்ஷேபம்தான். நான் சின்னவயதில் இருந்த இடத்தில் ராதாகல்யாணம் நடக்கும். பாட்டுகள் பாடுவார்கள். ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ ‘பால்வடியும் முகம் நினைந்து’ இரண்டுபாட்டுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஆனால் நீலம் ஆரம்பம் முதலே கிருஷ்ணனை க்ரூரத்துடனும் ஸம்பந்தப்படுத்திக்காட்டிக்கொண்டே இருந்தது. அது எனக்கு ஒவ்வாமல் இருந்தது. உண்மையில் நீங்கள் பாகவதத்தில் இருந்துதான் அதை எடுத்திருப்பீர்கள் என்று தெரியும். ஆனாலும் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62870

வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014

  வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும். தேதி : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை. இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம் நேரம் : மாலை 5 மணி தொடர்புக்கு:  பாலா: +91 9842608169 வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63987

மரபிலிருந்து நவீன எழுத்து

அன்புள்ள ஜெ, நீலம் பரவலாக அனைவருக்கும் பிடித்திருப்பது ஆச்சரியம் அளித்தது. அதன் நடையையும் அமைப்பையும் வாசித்தபோது தீவிர இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்றுதான் நினைத்தேன். அத்தனை செறிவானதும் பூடகமானதுமான எழுத்து. ஆனால் கடிதங்களை வாசித்தபிறகு ஆச்சரியம்தான் நான் நீலம் நாவலை என் அம்மாவிடம் கொடுத்தேன். அம்மாவுக்கு பக்த விஜயம், பாகவதம் ரேஞ்சுதான். ஆனால் குந்தி இருந்து மூன்றுநாளில் கம்ப்யூட்டரிலேயே வாசித்துவிட்டார்கள். நல்லா இருக்குடா…அற்புதமா இருக்கு’ என்றார்கள் பேசிப்பார்த்தால் பெரும்பாலும் அவர்களுக்குப்புரிந்திருக்கிறது. என்னைவிட சில நுட்பங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63035

நீலமும் இணையதளமும்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நீலப்பித்தில் இருந்து தெளிந்து விட்டீர்களா? உங்கள் இணைய தளமே அந்தப்பித்தினால் பல நாட்களாக ஆட்கொண்டிருந்தது. சில நேரம், என்ன இது அதீதமான உருக்கமாக இருக்கின்றதே என்று தோன்றியது. பிறகு நினைத்து கொண்டேன், அனைவரும் நீலக்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அதை படிக்காமல் அந்த நிலையை புரிந்து கொள்ள முடியாது, அதை விமர்சிக்கலாகாது என்று. இந்த தருணத்தில் அந்த உணர்வு கொந்தளிப்பில் பங்கு கொள்ளாமல் போனது எனக்கு தான் இழப்பு. இனி நான் தனியாக அந்த அனுபவத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63199

கஜசம்ஹாரம்

ஜெ, கிருஷ்ணன் குவலயாபீடம் என்னும் யானையை அழித்தது பாகவதத்திலே வருகிறதா? அந்தப்பெயர் பாகவதத்தில் உள்ளதுதான் என நினைக்கிறேன் இல்லையா? அதற்கு என்ன அர்த்தம்? கிருஷ்ணன் அந்த யானையைக்கொல்வது கஜசம்ஹாரமூர்த்தி என்ற புராணத்துக்குச் சமானமாக உள்ளதே. இங்கிருந்துதான் அங்கே போயிருக்குமா? சிவராஜ் அன்புள்ள சிவராஜ் எனக்கு நீலம் பற்றி வரும் கடிதங்களில் சைவர்கள் மிகமிகக்குறைவு என்பதை கவனிக்கிறேன் . பலசைவர்களுக்கு பாகவதக்கதைகள் எளிமையாகக்கூட அறிமுகமாகவில்லை என்றும். வைணவர்களும் இதேயளவில்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் அந்தக்கதை பாகவதத்தில் உள்ளதுதான். குவயலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63033

Older posts «