Tag Archive: நீரும் நெருப்பும்

காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை

அன்புள்ள ஜெ இன்று தற்செயலாக உங்களுடைய நீரும்நெருப்பும் என்ற கதையை வாசித்தேன். வெண்கடல் வரும்போதே அந்தக் கதையை வாசித்திருந்தேன். அது அறம் தொகுப்புக்குப் பின்னால் வந்தது. ஆகவே அறம்போலவே அது இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆகவே அதைப்பற்றிய ஓர் ஏமாற்றம் இருந்தது. அதோடு அன்று இணையத்தில் எழுதும் ஒரு சிலர் எதிர்மறையாக எழுதியிருந்தனர். அந்த எண்ணமும் எனக்குள் ஊடுருவியிருக்கலாம். அவர்களெல்லாம் சும்மா வெற்றுவேட்டுக்கள் என்று தெரிய எனக்கு மேலும் சில ஆண்டுகள் ஆகியது இப்போதுதான் வெண்கடலை வாசித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129466

வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்

அன்புள்ள சார், நலமா? நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். எனது பணியில் சிறு மாற்றம். வேறு ஒரு ‘டெஸ்க்’ கில் வேலை செய்கிறேன். புதிய இடத்தில் இணையத்  தொடர்பு கிடைப்பது அபூர்வம். கிடைத்த கொஞ்சநஞ்ச நேரத்தில் உங்கள் கட்டுரைகளை மட்டும் படிக்கிறேன். உங்களுடன்.. தொடர்பு இந்த அளவில் அறுபட்டதற்கே வருத்தமாக, ஏக்கமாக இருக்கிறது. கட்டுரைகளை மட்டும்தான் படிக்கிறேன் என்று சொன்னேன் இல்லையா! ஆனால், ‘நீரும் நெருப்பும்’ அப்படிப் படிக்காமல் போகமுடியவில்லை. கதையின் முதல் வாக்கியத்திலேய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35186

குருதி,தீபம்,நீரும் நெருப்பும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, குருதி கதை வரை உங்கள் சமீபத்திய கதைகளைப் படித்து விட்டேன். இந்த கதைகளை நான் இன்னொருவரிடம் சொல்வதென்றால் இருவரிகளில் சொல்லி விடலாம். இந்தக் கதைகள் நுண்நோக்கி வழியாகக் காண்பது போன்று இருந்தது. மிக மெதுவாக அதே சமயம் மிக இயல்பாக. உங்கள் பழைய கதைகளைத் திரும்ப திரும்ப வாசித்திருக்கிறேன், இன்னும் பல கதைகள் எனக்கு அந்தரத்தில்தான் நிற்கின்றன, ஆனால் இந்தக் கதைகள் அப்படி அல்ல. நிலம் கதையும் குருதியும் மண்ணில் தன்னை நிறுத்திக் கொள்ளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34805

நீரும் நெருப்பும் [புதிய கதை]

இரவு பன்னிரண்டரை மணிவாக்கில் பூல்சந்திரர் பாபுவின் மலச்சட்டியுடன் வெளியே வந்து ஆசிரமத்தின் தெற்குமூலையில் வெட்டப்பட்டிருந்த குழியை நோக்கிச் சென்றபோதுதான் அவரைப் பார்த்தார். ஆசிரமத்தின் நுழைவாயிலில் நடப்பட்டிருந்த மூங்கில் கழியில் தொங்கிய அரிக்கேன் விளக்கின் ஒளி அவருக்குப் பின்னால் இருந்ததனால் நிழலுருவமாகவே அவரைப் பார்க்க முடிந்தது. தோளில் புரண்ட தலைமுடியிலும் தாடியிலும் விளக்கின் செவ்வொளி பரவி மின்னிக் கொண்டிருந்தது. ‘யார்?’ என்றார் பூல்சந்திரர் . அவர் ‘சிவோஹம்!’ என்றார். யாரோ பைராகி. அபூர்வமாக அப்படி சிலர் வந்துவிடுவதுண்டு. சபர்மதியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34775