Tag Archive: நிழல்காகம்[சிறுகதை]

நிழல்காகம்,ஆகாயம்- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை] அன்புள்ள ஜெ நிழற்காகம் கதையை வாசித்தேன். அந்தக்கதையை நான் மிகமிக தனிப்பட்ட முறையிலேதான் வாசித்தேன். என் வாசிப்பு சரியாக இருக்கும என்று தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்தேன். குடும்பச்சூழ்நிலை மிகமோசம். உடம்புசரியில்லாத அம்மா, தம்பிகள். என் வேலைதான் ஆதாரம். அதை தெரிந்துகொண்டு ஒருவன் என்னை வற்புறுத்தினான். பலசிக்கல்களில் மாட்டவிட்டான். கடைசியில் நான் வளைந்துகொடுக்கவேண்டியிருந்தது. இல்லாவிட்டால் பட்டினி கிடந்திருப்பேன். ஆனால் அதைவிட உலகம் தெரியவில்லை. தைரியம் இல்லை. நான் அவனுடைய சூழ்ச்சியால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131966/

நிழல்காகம், இணைவு – கடிதங்கள்

கூடு [சிறுகதை] அன்புள்ள ஜெ நலம்தானே? நானும் நலமே. கூடுகதைபற்றி நிறையவே எழுதிவிட்டர்கள். உண்மையில் இவ்வளவு எழுதப்பட்டபின் கதை நீர்த்துவிடுமா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. இந்தச் சந்தேகம் முன்பு அறம் வரிசை கதைகளை வாசித்தபோது எழுந்தது உண்டு. அந்தக்கதைகளைப்போல அத்தனை பேசப்பட்ட கதைகளே இல்லை. வெவ்வேறு வடிவில் அந்தக்கதைகள் தமிழில் உள்ளன. இந்த தலைமுறையில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட கதைகள் அறம் கதைகள்தான். ’ ஆனால் ஏழெட்டு மாசம் முன்பு அந்தக்கதைகளை திரும்ப வாசித்த்போது மிகமிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131972/

ஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்

ஆகாயம் [சிறுகதை] அன்புள்ள ஜெ ஆகாயம் கதையை வாசிக்கையில் எங்கே செல்கிறது கதை என்ற ஓர் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதுவரை பேசப்பட்ட பாணி கதையே அல்ல. ஆனால் இந்த தொடரில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கிரியேட்டிவிட்டி பற்றிய கதை. காதும் நாவும் இல்லாதவன் செய்த சிலை என்பதே குறியீடுதான். அவனால் அந்தக் கலையை விளக்க முடியாது- அந்தவகையில் பெரும்பாலான கலைஞர்கள் விளக்கத்தெரியாதவர்கள்தான். கலை நிகழ்ந்துவிடுகிறது. இனி அதை என்ன செய்வது? எப்படி பயன்படுத்துவது? சமூகத்திற்கு இதனால் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131964/

தேனீ,நிழல்காகம் – கடிதங்கள்

தேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ தேனீ கதை நம்முடைய போன தலைமுறையில் பலருடைய வாழ்க்கையின் பதிவு. அன்றைக்கு உண்மையிலேயே வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்கள். வருமானம் ஆண்கள் மட்டுமே கொண்டுவருவது. அதற்கு கடுமையான போராட்டம். பதினேழு பதினெட்டு வயதிலேயே குடும்பப்பொறுப்பு. அதன்பி  பல திருமணங்களை நடத்தி வைத்து ஓயும்போது வயதாகிவிட்டிருக்கும். சொந்தமான வாழ்க்கை என்பதே கிடையாது. எந்த தனிரசனைக்கும் இடம் கிடையாது. அவர் சொல்வதுபோல பின்னால் சாட்டை ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும் செக்குமாட்டு வாழ்க்கை. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131789/

கூடு, சிவம், நிழல்காகம்- கடிதங்கள்

சிவம் [சிறுகதை] கூடு [சிறுகதை] அன்பு நிறை ஜெ, சமீப காலத்தில் வாசிப்பை ஒரு வகை செயல்முறையாக மாற்றி கொள்ள முடிகிறது, காணுவதை எல்லாம் படித்தது, எதையும் முழுமையாய் படித்து முடிக்காமல் அடுத்த ஒன்றுக்கு தாவிக்கொண்டே இருந்தது, ஆர்வம் மிகுந்த எந்த ஒரு விஷயத்தையும் ஒரே மூச்சில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் எதை ஒன்றையுமே தொடங்கும் முன்னமே அடுத்த தேர்வை செய்து அதற்குள் நுழைவது, போன்ற பழக்கங்களால் மனமும் உடலும் சோர்ந்திருந்தது, அன்றாட செயல்பாடுகள் மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131590/

நிழல்காகம், ஓநாயின் மூக்கு- கடிதங்கள்

நிழல்காகம்[சிறுகதை] அன்புள்ள ஜெ நிழல்காகம் ஒரு ஆன்மிகமான கதையை அறிவார்ந்த விவாதம் வழியாக நவீனக்கதையுலகுடன் இணைக்கும் உங்கள் உத்தியை கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எழுப்பப்படும் அடிப்படையான கேள்விகள்தான் அந்தக்கதையின் பலமே. கலை என்பது என்ன? அது வாழ்க்கையை நடிக்கிறது. நிழல்நாய் கடிக்காது, ஆனால் அதனுடன் விளையாடலாம். கலையில் உள்ள காமம் பகை எதையும் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. அது ஒருவகை நடிப்புதான். ஆனால் பொய் அல்ல. அன்பால் நீதியால் அப்படி மாற்றி நடிக்கப்படுகிறது அது. அதைத்தான் கதை சொல்கிறது. தத்துவ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131550/

நிழல்காகம்,தேவி- கடிதங்கள்

தேவி [சிறுகதை] அன்புள்ள ஜெ தேவி ஒரு கொண்டாட்டமான கதை. சரளமான நகைச்சுவையுடன் ஆரம்பித்து முதிர்ந்தபடியே சென்று ஒர் உணர்ச்சிநிலையில் முடிகிறது. மொத்த நாடகத்தையுமே ஸ்ரீதேவி மாற்றியமைக்கிறார். அவரே அதை நடித்து வெற்றிகரமாக ஆக்குகிறார். ஆனால் புகழ் முழுக்க அனந்தனுக்கு. அவனை பாராட்டித்தள்ளுகிறார்கள். அவனுக்கே அது அவனுடைய வெற்றி அல்ல என்று தெரியவில்லை. ஸ்ரீதேவி மூன்றுவேடங்களில் நடித்ததனால் அவருடைய உண்மையான திறமையைக்கூட ஊர்க்காரர்கள் உணரவில்லை. சொல்லப்போனால் அனந்தன், லாரன்ஸ் தவிர எவருக்குமே அது ஸ்ரீதேவியின் வெற்றி என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131551/

கரு,நிழல்காகம்- கடிதங்கள்

கரு [குறுநாவல்]- பகுதி 1 கரு [குறுநாவல்]- பகுதி 2 அன்புள்ள ஜெயமோகன், கரு மீண்டும் ஒரு அற்புதமான தாவல். எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் கொண்ட ஓர் உலகம் என்பதனால் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். இன்னொரு முறை வாசித்தபிறகுதான் முழுமையாகச் சொல்லமுடியும் என நினைக்கிறேன். முதலில் ஒரு குறிப்பிட்ட அறிவுலகை அறிமுகம் செய்கிறீர்கள். அதிலுள்ள மயக்கங்கள், குழப்பங்கள், கற்பனைகள் ஆகியவற்றுடன்.லாப்சங் ராம்பா போன்ற பாப்புலர் எழுத்தாளரை உருவாக்கியது அந்த கனவுலகம்தான்.அந்த கனவுலகுக்கும் இன்றைய திபெத்துக்குமான உறவையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131581/

நிழல்காகம்[சிறுகதை]

நித்யா சொன்னார். பல்லாயிரக்கணக்கான குழந்தைக்கதைகளிலும் சிலநூறு நீதிக்கதைகளிலும் அவ்வப்போது நவீன இலக்கியத்திலும் இடம்பெறுவதும், கன்னங்கரியதாகையால் காலவடிவென்று கருதப்படுவதும், காலமேயென்றாகிவிட்ட மூதாதையராக தோற்றம் அளிப்பதும், காலம் கடுமைகொண்ட தெய்வ வடிவமான சனீஸ்வரரின் ஊர்தியென்று வணங்கப்படுவதும், இவையனைத்துக்கும் அப்பால் பிறிதொரு சொல்லற்ற வான்வெளியில் தன்னியல்பாக பறப்பதும், இரைதேடவும் குலம்பெருக்கவும் மட்டும் மண்ணில் வந்தமர்வதும், கரைந்தும் தலைசரித்து நோக்கியும் சலிப்புற்று எழுந்து சென்றும் சிற்றடி எடுத்துவைத்து எல்லைமீறியும் நம்முடன் உறவாடுவதும், சற்றே செவிகூர்ந்தால் ஓயாத குரலோசையாக நம்மைச் சூழ்ந்திருப்பதாகத் தெரிவதுமான காகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131339/