Tag Archive: நிலம்

நிலம்- கடிதம்

நிலம் அன்புள்ள ஜெ வணக்கம். கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வடமேற்கே பிராஞ்சேரி என்ற கிராமம் உள்ளது.  அங்கு ஒரு ஜமின்தார்.  அந்த ஜமின்தாரை ஆள்வைத்து வெட்ட பக்கத்து ஊர் மிராசால் கணக்குபோடப்பட்டது. எளிய மனிதர்களுக்கே கர்வ எதிரியோ கௌரவ எதிரியோ இருக்கும்போது ஜமின்தாருக்கு கொலைகார எதிரி இருப்பது  எப்படி அதிசயமாகும். ஆறு கொலைகாரர்கள். நால்வர் வீட்டுக்கு வெளியில் காவல். இரண்டுபேர் வீட்டு ஓட்டைப்பிரித்து உள்ளே போய்விட்டார்கள். தூங்கும்போதே தலைவேறு உடம்புவேறு என்று ஆக்கிவிடவேண்டும் என்பதுதான் திட்டம். உள்ளே போனவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126713/

நிலம் ஒரு கடிதம்

வணக்கம். இலக்கியம் மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனை மிகச் சிறந்த விவேகியாக்குகிறது என்ற சு.ரா. சொல்லிப் படித்திருக்கிறேன். அதை என் வாழ்க்கையின் அனுபவத்தில் நான் கண்டு வருகிறேன். நான் ஏன் இத்தனை அமைதியானவனானேன் என்று என்னையே பலமுறை கேட்டுக் கொள்ளும் அளவுக்கு என் மனம் தனிமைப்பட்டு, அமைதியின் ஆழத்தில் அமிழ்ந்து போகிறது. இப்படியான இருப்பிலேயே இலக்கியம் இன்னும் பலவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டே வருகிறது. அப்படி ஒன்றைப் படித்து நான் மனமுருகிய நாள்தான் இன்று. ஏற்கனவே ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72036/

குருதி, நிலம் – கடிதங்கள்

திரு ஜெயமோகன், நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ‘குருதி’ கண்ணில் நீர் கோர்க்க படித்தேன். படித்து முடித்ததும் மனசெல்லாம் பாரமாக இருக்கிறது. இத்தனைக்கும் இந்த மாதிரியான எந்த கொடுமையையும் கண் எதிரே கண்டதில்லை. நான் சார்ந்த சமூகம் எனக்குத் தெரிந்து பெரிதாக மிதிபட்டதில்லை. குறைந்தபட்சம் எங்கள் குடும்பமாவது ஒரு நான்கு தலைமுறைகளாக ‘மிட்டா மிராசாக’ இருந்து வருகிறது. குந்தி தின்றதில் குன்று கொஞ்சம், இல்லை நிறைய அழிந்திருக்கிறது. ‘லே என்னலே சேத்துக்காட்டான்…சமுசாரி ஆயிட்டே போல… ‘ என்பார்கள். ‘ஏதோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34810/

நிலம் கடிதம்

அன்பின் ஜெ, நலந்தானே? மீண்டும் படைப்புகள் வரத்தொடங்கியுள்ளது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.குறிப்பாக நிலம் சிறுகதை.ராமலட்சுமியின் மன அவசமும் பண்டாரத்தின் விடுதலை உணர்வும் பெருமாளின் இறுகிய பிடிவாதமும் மனதை அறைந்தன. கன்னியாகுமரி வட்டம் தாண்டி கரிசல் நிலத்தில் கதை அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பு. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழகத்தின் தற்போதய ஒரு முக்கியமான போக்கினைக் கருவாகக் கொண்டிருப்பது நிறைய சிந்திக்கவைத்தது. ஆம் தமிழக நடுத்தர வர்க்கத்தைப் பிடித்து ஆட்டும் இந்த நில வெறிக்கொள்கை .சமீப காலமாகவே என் உறவினர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34643/

கதைகள்-கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், உங்கள் ‘நிலம்’ சிறுகதையைப் படித்தேன். சேவுகப்பெருமாளைப் படிக்கும்போது தல்ஸ்தாய் எழுதிய How Much Land Does A Man Need? என்ற சிறுகதை ஞாபகத்திற்க்கு வந்தது. முடிவில் சருகுகளுடன் படுத்துக்கொண்டிருக்கும் பண்டாரம் தல்ஸ்தாயின் பிம்பம் போலவே பட்டது. ஒரு நீதிக்கதையின் எளிமை இருந்தும், கதை யதார்த்தத்தில் புதைந்திருப்பது கலையின் உச்ச லட்சியங்களில் ஒன்று. அதைத் தொட்டதற்காக என் பாராட்டுகள். – விஜய் கௌசிக் நீங்கள் ஒரு ஆசாரி. சொற்களை எழுத்துக்களைப் பல விதமாக செதுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34661/

நிலம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, பெண்மையை-தாய்மையை இவ்வளவு நெருக்கமாக உணரச் செய்தது வேறொன்றில்லை ஜெ. காலையில் எழுந்து கோயிலுக்குச் சென்று திரும்பும் வரை நடக்கும் கதை. அதற்குள்தான் எத்தனை ஓவியங்கள்! எத்தனை உணர்ச்சிப் பெருக்குகள்! எத்தனை புரிதல்கள்! பால் குடிக்கும் கன்றை மறைந்திருந்து பார்க்கும் ராமலட்சுமிக்கு வடக்கூரான் கூட பிள்ளைதான். அய்யானாரைக் கூட அவள் தன் மகனாகத்தான் பார்த்தாளோ? பூச்செண்டின் ஈரம் கூட அவளுள் இருக்கும் தாய்மையை உணர்த்துகிறது என்றால் இருபத்திரண்டு வருடங்களாக அல்ல – பிறந்ததிலிருந்தே அந்தப் பெண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34589/

நிலம்- கடிதங்கள்

வறண்ட வயிறு -ஆனாலும் மனைவிமீது தீராத காதல், வறண்ட நிலம் -இருந்தும் அதன்மேல் குறையாத மோகம் சேவுகப் பெருமாளுக்கு. பொத்தை முடியின் பாறை உச்சியில் ஒன்றுமில்லாத ஆண்டியாய்த் தனித்து இருக்கும் பண்டாரத்திற்குக் கீழ் இருக்கும் விரிந்த நிலம் அனைத்தும் சொந்தம். அவரது அந்த மனநிலையே ராமலட்சுமிக்குக் கூறும் அறிவுரையாக வெளிவருகிறது, ‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’. பண்டாரம், ’எல்லாச் செடியும் மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு…விட்டாக் காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல?’ என்று சொல்லும்போதே கதையின் ஒரு நாடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34565/