Tag Archive: நிர்மித்ரன்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73

எட்டு : குருதிவிதை – 4 அர்ஜுனனையும் வரிசைக்குழுவையும் வரவேற்க மதுராவின் படித்துறைக்கு பலராமரே நேரில் வந்திருந்தார். படகின் முகப்பில் கரைநோக்கி நின்றிருந்த சதானீகன் ஓரிரு கணங்களுக்குப் பின்னரே காத்து நின்றிருப்பது பலராமர் என்பதை உணர்ந்தான். திகைப்புடன் அவன் விழிகூர்வதற்குள் அருகே நின்றிருந்த நிர்மித்ரன் “மூத்த யாதவர்! மதுராவின் அரசர்!” என்றான். அவன் திரும்பிப் பார்க்காமல் “ஆம்” என்றான். “அரசமுறைமை கடந்து வந்திருக்கிறார்” என்றான் நிர்மித்ரன். சதானீகன் மறுமொழி கூறவில்லை. நிர்மித்ரன் மீண்டும் “முறைப்படி முடிசூடிய பேரரசர்களுக்கு மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104086

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 72

எட்டு : குருதிவிதை – 3 உபப்பிலாவ்யத்தின் முகமுற்றத்தில் ஒருங்கி நின்றிருந்த பயணநிரையின் முன்னால் முகப்புத்தேரின் அருகே நின்றிருந்த சதானீகனை அணுகிய நிர்மித்ரன் குரல்தாழ்த்தி “கிளம்புவதற்கான நற்பொழுது முடியப்போகிறது, மூத்தவரே. சிற்றமைச்சர் தருணர் இதை தங்களிடம் கூறும்படி சொன்னார்” என்றான். சதானீகன் வெறுமனே தலையை மட்டும் அசைத்தான். “இத்தனை பொழுது அங்கு என்ன செய்கிறார்கள்?” என்று  நிர்மித்ரன் சொல்ல சதானீகன் அது தன்னுள் ஓடிய சொல்தான் என உணர்ந்து எரிச்சல் கொண்டு, அதை வென்றான். “இது முற்றுறுதியுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104038

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71

எட்டு : குருதிவிதை – 2 ஓசையின்றி கதவைத் திறந்து உள்ளே வந்த ஏவலன் பீமன் வந்திருப்பதை தாழ்ந்த குரலில் அறிவிக்க வரச்சொல்லி யுதிஷ்டிரர் கையசைத்தார். அவன் வருவதற்காக அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். சதானீகன் பீமன் என்னும் சொல்லாலேயே முகம் மலர்ந்து வாசலை நோக்கினான். உபப்பிலாவ்யத்தின் உயரம் குறைந்த வாயிலினூடாக மிகவும் குனிந்து உடலைச் சரித்து உள்ளே வந்து நிமிர்ந்த பீமன் அவையை ஒருகணம் விழியோட்டி “என்ன, ஒவ்வாச்செய்தி ஏதோ வந்துள்ளது போலிருக்கிறதே?” என்றபின் யுதிஷ்டிரரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104030

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 7 உபப்பிலாவ்யத்தின் முதல் காவலரணை தொலைவில் பார்த்ததுமே பிரதிவிந்தியன் தன் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இரு முன்கால்களை தூக்கி அறைந்து தலைதிருப்பிக் கனைத்து அது அரைவட்டமாகச் சுழன்று நிற்க அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த சதானீகனின் புரவி மேலும் நாலைந்தடி வைத்து சுழன்று நின்றது. அவர்களுக்குப் பின்னால் எடை மிகுந்த குளம்புகள் மண்ணில் அறைந்தொலிக்க வந்துகொண்டிருந்த சுதசோமன் விரைவழிந்து நின்று பெருமூச்சு விட்டு உடல் தளர்ந்து “நகர் எல்லை தொடங்கிவிட்டது” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102926

» Newer posts