விதுரர் நொண்டியபடி படிகளில் மீண்டும் ஏறி கதவை அடைந்து அதை ஓங்கி ஓங்கி அறைந்தார். கால்களாலும் கைகளாலும் அதை மாறி மாறி தாக்கினார். உரக்க ஓலமிட்டார். ஒவ்வொரு கணமும் எடைமிகுந்தபடியே செல்ல அழுகையும் ஆத்திரமுமாக கதவின்மேல் மோதினார். தாளமுடியாமல் தலையால் அதை அறைந்தார். “யாதவரே! யாதவரே” என தான் கூவுவதை தானே உணர்ந்தபோது திகைப்புடன் என்ன நிகழ்கிறதென்று உணர்ந்தார். “யாதவரே, போதும்… என்னை மீட்டெடுங்கள்” என்றார். “அத்தருணத்தை கைவிடுவது உங்கள் கைகளிலேயே” என்றார் இளைய யாதவர். விதுரர் …
Tag Archive: நிருத்யை
Permanent link to this article: https://www.jeyamohan.in/108339
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-20
இளைய யாதவர் சொல்லப்போகும் மறுமொழிக்காக விதுரர் முகம்கூர்ந்து காத்திருந்தார். அவர் “விதுரரே, தாங்கள் முன்பு மறைந்த அரசர் பாண்டுவிடமிருந்து பெற்ற அஸ்வதந்தம் என்னும் அருமணி எங்குள்ளது?” என்றார். விதுரர் சற்று திடுக்கிட்டு பின் “ஏன் கேட்கிறீர்கள்?” என்றார். “அது இப்போது தங்களிடம் உள்ளது அல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆம், அதில் மறைவென ஏதுமில்லை. என்னிடம் அது இருப்பது அனைவருக்கும் தெரியும்” என்றார் விதுரர் கடுமையான குரலில். இளைய யாதவர் புன்னகைத்து “நான் அதை நீங்கள் மறைத்து …
Permanent link to this article: https://www.jeyamohan.in/108301