Tag Archive: நித்ய சைதன்ய யதி

ஆன்மீகம் தேவையா?

  அன்பின் ஜெ, தங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி. இருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன: எனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை. இருப்பினும் இக்கேள்விகள் ஒரளவு என் மனநிலையை உணர்த்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்களை ஒரு குரு என்று நினைத்து இவைகளைக் கேட்கவில்லை. ஒரு நல்ல நண்பராக மட்டுமே நினைத்து எழுதுகிறேன். 1. ஆன்மீகமே தேவைதானா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21829

நித்ய சைதன்ய யதி

  ‘ஒரு துறவி அதுவும் குரு என்றால் ஒருவகையான அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு பலரும் உள்ளூர ஆசைப்படுகிறார்கள். அதில் தப்பில்லை. ஆனால் குருக்களின் கஷ்டம் குருக்களுக்குத்தான் தெரியும்” என்றார் நித்ய சைதன்ய யதி ”என்ன கஷ்டம்? என் காலில் இத்தனைபேர் விழுந்தால் நான் உயிரைப்பணயம் வைத்து தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு பகவத் கீதை படிப்பதற்கும் தயார்” என்றேன் ”அது சாதாரணக் கொடுமை. வேறு எவ்வளவு இருக்கிறது!” நித்யா சொன்னார். ”பிரச்சினை ஒன்று, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/258

இறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி

திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான். ஆனால் என் மனதுக்குள் ஏதோ மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சீருடை அணிந்த போலீஸ்காரன் அந்த உடுப்புக்குத் தகுதியானவனாகத் தன்னைத் தானாகவே வளர்த்துக் கொள்வது போன்றது அந்த அனுபவம் என்று நடராஜகுரு ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அத்தகைய அனுபவம்தான். எந்தத் துறவியையும் நான் முன்மாதிரியாக வைத்துக்கொள்ளவில்லை. உலக வாழ்வை எல்லாரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28705

பிம்பக் கட்டுடைப்பும் ஆசிரியர்களும்

அன்புள்ள ஜெ “இன்னமும் ஊட்டி மனநிலையிலேயே இருக்கிறேன். ஊட்டி குருவின் இடம். மனதில் நினைவுகளாக வளர்ந்துகொண்டே இருப்பவர். என் இயல்பில் காலம்செல்லச்செல்ல அவரது பிம்பத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறேனே ஒழிய இன்னமும்கூட ஒரு கறாரான மதிப்பீட்டை அவரைப்பற்றி உருவாக்கிக்கொள்ளவில்லை. மதிப்பீட்டைவிட இந்தப் பற்றே என்னை மேலே கொண்டுசெல்கிறது என உணர்கிறேன்” பிம்பங்களை உடைத்து, கறாரான மதிப்பீட்டை வைக்க வேண்டும் என்ற தர்க்கத்துக்கும், இந்த உணர்ச்சிக்கும் தலைகீழ் வேறுபாடு இருக்கிறதல்லவா? ஓசோவும், சங்கராச்சாரியாரும் இப்படிதானே பலருக்கு குருவாக இருந்திருப்பார்கள்?? நித்யாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85616

இந்துத்துவ முத்திரை

  ஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா? இல்லை என்று சொல்லமுடியுமா? இந்தக்கட்டுரைகளே இந்துத்துவ அஜண்டாதானே? சாம் மனோகர் அன்புள்ள சாம், ஜெயமோகன்.இன்னுக்கு நல்வரவு. என் அரசியல் என்ன என்று முன்பும் விரிவாகவே எழுதிவிட்டேன். நான் என் ஆரம்பகாலத்து இந்துத்துவ இயக்கத்  தொடர்புகள் பற்றி எப்போதுமே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆம், நான் இளமையில் இந்துத்துவ இயக்கங்களில் உறுப்பினராக இருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28420

மின்தமிழ் பேட்டி -1

[சி சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மின்தமிழ் இதழில் வெளியான பேட்டி] 1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா? பதில். எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தேதான். என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69816

ஒலியும் மௌனமும்

அன்புள்ள ஜெ, இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. எந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2304

விடுதலையின் மெய்யியல்- கடிதம்

அன்பு ஜெயமோகன், நித்ய சைதன்ய யதியின் கட்டுரை ஒன்றை நிங்கள் “விடுதலையின் மெய்யியல்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்திருந்தீர்கள். தனிமனிதன் ஒருவனின் தவிப்பைக் கண்டு குமைந்துபோய் சைதன்ய யதி அக்கட்டுரையை எழுதி இருக்க வேண்டும். அதில் எவ்விடத்தும் பூடகங்களாய் நகரும் வாக்கியங்கள் இல்லை, ஒன்றைச் சுட்ட மற்றொன்றைச் சொல்லி மயக்கும் சொல்விளையாட்டுகளும் இல்லை, புனிதத்துவத்தைத் தக்கவைக்கும் வியாக்கியானங்களும் இல்லை. நேரடியான மொழியில் அமைந்திருந்த அக்கட்டுரையின் அடிப்படை எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடியது. தத்துவத்துறையில் குறைந்தபட்ச அறிவில்லாத ஒருவரால் கூட அக்கட்டுரையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66884

அரதி

அன்புள்ள அண்ணணுக்கு, நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே ஒரே விஷயத்தை பன்னிப் பன்னி எழுதுவது போல இருக்கிறது. உங்களுடைய எழுத்துக்கள் அதிலும் இந்தியா மற்றும் நகைச்சுவை பற்றி மட்டுமே படிக்க பிடிக்கிறது.தினமும் உங்களை படிக்கிறேன்.இப்போது நான் என்ன செய்வது? அன்புடன் நடராஜன்   அன்புள்ள நடராஜன் எதிராஜ், நீங்கள் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1245

ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

அன்புக்கும் வணக்கத்திற்கும் உரிய ஆசிரியர்களே, தோழர்களே, அஜிதனை சின்னக்குழந்தையாக கையில் தூக்கிக்கொண்டு அலைந்த நாட்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. அப்போது எனக்கு இரண்டு தலைகள். இரண்டு முகங்கள். ஒன்றுக்கு முப்பத்திரண்டுவயது. ஒன்றுக்கு ஒருவயது. ஒன்றில் இருந்து முப்பத்திரண்டுவரை நீண்டுபரந்த ஒரு மனம். ஆச்சரியமான ஓர் இணைவு. தெருவில் நான் செல்லும்போது என்னை ஒருவர் பின் தொடர்ந்து வந்தால் எனக்கு ஒருவயதா இல்லை முப்பத்திரண்டு வயதா என்ற சந்தேகம் எழும். அந்த உற்சாகத்தை அடைந்தபின் இன்றுவரை நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/758

Older posts «

» Newer posts