Tag Archive: நாராயண குரு

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

அன்புள்ள ஜெ, அண்மையில் ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ வாசித்து முடித்தேன். மனதிற்கு நெருக்கமான நூல். அதில் “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறந்து போகும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119191

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மானுடரில் உயர்ந்தவர் குருவே. குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகாதேவன் என்ற பிரபலமான மந்திரம் குருவை ‘ஆக்கிக்காத்தழிக்கும்’ முத்தெய்வங்களும் ஒன்றானவன் என்கிறது. இதற்கு இணையான முக்கியத்துவம் ஜென் மரபிலும் குருவுக்கு இருப்பதைக் காணலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/204

இந்துத்துவ முத்திரை

  ஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா? இல்லை என்று சொல்லமுடியுமா? இந்தக்கட்டுரைகளே இந்துத்துவ அஜண்டாதானே? சாம் மனோகர் அன்புள்ள சாம், ஜெயமோகன்.இன்னுக்கு நல்வரவு. என் அரசியல் என்ன என்று முன்பும் விரிவாகவே எழுதிவிட்டேன். நான் என் ஆரம்பகாலத்து இந்துத்துவ இயக்கத்  தொடர்புகள் பற்றி எப்போதுமே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆம், நான் இளமையில் இந்துத்துவ இயக்கங்களில் உறுப்பினராக இருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28420

கலாச்சார இந்து

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். எனது குடும்பத்தில் அனைவருமே கடவுள் பக்தி உடையவர்கள். நான் மட்டும் எனது பதின்பருவத்தில் இருந்து ஒரு பின்பற்றும் இந்துவாக (Practicing Hindu) இல்லாமல் இருந்துவருகிறேன். சிறுவயதிலேயே படிக்கக்கிடைத்த ஈவேரா பெரியாரின் கருத்துக்கள் இதில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்ற போதிலும் இதற்கு முக்கியகாரணம் எனது  தர்க்க புத்திதான். ஆயினும் மூர்க்கத்தனமாக இறைவழிபாட்டை ஒதுக்கியவனும் கிடையாது. எவராவது திருநீற்றை தந்தால் பூசிக்கொள்வதும் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் கோயிலுக்கு அழைத்தால் சென்று கும்பிடுவதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27843

காந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். மேற்கண்ட தலைப்பில் ‘கீற்று’ தளத்தில் எழுத்தாளர்: அருந்ததி ராய் அவர்கள் “பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் India’s shame(இந்தியாவின் இழிவு) என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழ் வடிவை படித்தேன்.இந்தியாவின் வர்ணாசிரம அமைப்பையும்,சாதிகளையும் குழப்பி எழுதி இருக்கிறார்.இதோடு போதாது என்று காந்திஜி அவர்களை பற்றியும் இந்த விசயத்தில் குறை கூறியிருக்கிறார். சாதி அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66760

குரு நித்யா வரைந்த ஓவியம்

அன்புள்ள ஆசிரியருக்கு, நலம்தானே . நான் போர்ட்லாந்து வந்ததில் இருந்து டெபோராவும் அவர் கணவர் ஸ்காட் டீட்ச்வோர்த்தும் நடத்தும் “தட் அலோன் ” வகுப்புகளில் கலந்துகொள்கிறேன். இவர்கள் இருவரும் குரு நித்யாவின் மாணவர்கள்.குரு போர்ட்லாந்து பல்கலையில் தத்துவ வகுப்புகள் அளித்து வந்த பொழுது இந்திய தத்துவங்களை ஏளன நோக்குடன் காணும் அமெரிக்கர்கள் மத்தியில் இந்திய ஞானத்தை பயில முன்வந்த முதற் மாணவர்கள் இவர்கள் என்றும். சோர்வு தரக்கூடிய அமெரிக்க சூழலில் இருவரின் ஆர்வமும் தனது வகுப்புகளை தொடர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65218

பக்தியும் சங்கரரும்

அன்புள்ள ஜெ, சங்கரரை வரலாற்றுச் சூழலில் பொருத்தி, அவர் செய்த மாபெரும் புரட்சியை விளக்கியிருக்கிறீர்கள். அருமையான கட்டுரை. அதில் உள்ள ஒரு கருத்தாக்கம் குறித்து மட்டும் மாற்றுப் பார்வையை முன்வைக்க விரும்புகிறேன். // தூய அறிவை கறாரான தர்க்கத்துடன் முன்வைக்கும் அவர் அழகின் உன்மத்தம் ததும்பும் ‘சௌந்தரிய லகரி’யை எழுதினார் என்று வரலாறு எழுதப்பட்டது. // முன்பு இதுவே எனது கருத்துமாக இருந்தது. ஆனால், நடராஜ குரு இதை முழுதுமாக மறுக்கிறார். அவர் சௌந்தரியலரிக்கு ஒரு பேருரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54821

நாராயணகுருகுலமும் ’வசவு’ இணையதளமும்

சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில் முக்கியமான இடத்தில் ஒரு வசதியான குருகுலத்தை கட்டியிருக்கிறார். அவர் ஏன் நாங்குநேரி பாலைவனத்தில் கட்டவில்லை, காஸ்ட்லியான சுற்றுலா மண்ணில் ஏன் கட்டினார், காசு ஏது, மடத்தின் புரவலர்கள் யார், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அங்கே இருப்பது துறவறமா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27419

அயோத்திதாசர் என்னும் முதல்சிந்தனையாளர்-2

அயோத்திதாசரும் நானும் [தொடர்ச்சி] நாராயண குருவைப்ப்பற்றிய தொகைநூலை எழுதிய பி.கெ.பாலகிருஷ்ணன் அதில் ஒரு கட்டுரையில் ஆவேசமாகக் கேட்கிறார். வருடம் தோறும் வர்க்கலை நகரில் நாராயண குருவின் நினைவுநாளின்போது அங்கேவந்து பேருரை ஆற்றாத பிரபலங்களே இல்லை.  அந்த உரைகளில் அவர்கள் நாராயணகுருவை யுகநிர்மாண சிந்தனையாளர் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களின் பிற உரைகளில் சுயசரிதைகளில் எங்காவது நாராயணகுருவை மேற்கோள் காட்டியிருக்கிறார்களா, அவர் தங்களை பாதித்ததைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் உருவாகும். அப்படியானால் அவர்கள் சொன்ன சொற்களுக்கு என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18154

கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2

இருவகை பகுத்தறிவு இயக்கங்கள் நாராயணகுரு மரபில் வந்த சுவாமி சிதம்பர தீர்த்தா அவர்கள் அவரது குருவான நடராஜகுருவைப்பற்றி நினைவுகளை எழுதியிருக்கிறார். நடராஜகுருவின் வகுப்புகள், வேடிக்கைக்கதைகள் என மிகச்சுவாரசியமான ஒரு நூல் அது. அதில் சில இடங்கள் எனக்கு விசேஷமான ஆர்வத்தை உருவாக்கின. நாராயணகுருவுக்கும் நடராஜகுருவின் அப்பாவான டாக்டர் பல்புவுக்குமான கருத்துமோதல்கள்தான் அவை. டாக்டர் பல்புவுக்கு நாராயண குருவின் அத்வைதத்தில் ஈடுபாடில்லை. சில தருணங்களில் அவர் அதை ‘அய்யர்களின் சிந்தனை’ என்று இகழ்ந்தும் சொல்கிறார். அதைப்பற்றி நாராயணகுரு சிறிது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8632

Older posts «