Tag Archive: நான் கடவுள்

டம்மி

இரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு குறைவான ஆயுள்தான். அபூர்வமாகவே சில படங்கள் காலம் கடந்து நினைக்கப்படுகின்றன. நான் கடவுளில் உள்ள பாடல்கள் என்றும் நீடிக்கும். கூடவே அப்பாடல்கள் நினைவூட்டும் அந்த நாட்கள் எங்கள் மனங்களில். காசி என்பது ஒரு நகரமல்ல, ஒரு படித்துறை. வரணாசி என்று மகாபாரதம் குறிப்பிடும் அந்த புராதன கங்கைக்கரை பிறைவளைவு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4805

குரு என்னும் உறவு

திரு ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். நன்றி மற்றும்  வாழ்த்துக்கள் நல்ல ஒரு படத்தை  தந்தமைக்கு . இது நான் கடவுள் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் அகோரிகளை பற்றி தெளிந்திட ஒரு வினா. ருத்ரன் என்ற அகோரி   குரு என்ற உறவுக்கு ஆட்பட்டவனாய் இருப்பது எல்லா உறவும்  துறக்க வேண்டி வாழ்பவன் என்பதற்கு முரணாக இருக்கின்றது. சற்று தெளிவு படுத்த வேண்டுகிறேன். நன்றி, நரேந்திர பிரபு. அன்புள்ள நரேந்திரன், உங்கள் கேள்வி இயல்பானது. ஆனால் நாம் நம்முடைய அடிபப்டையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1892

கடிதங்கள்

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ! இப்போதெல்லாம் தினமும் உங்கள் இணைய தளத்துள் சென்று இடுகைகளை வாசித்து வருவதே என் முக்கிய பொழுது போக்காகி விட்டது. இரவு நேரங்களில் (கனடா ) உங்கள் புதிய இடுகைகளையும் மறு நாட்காலை கோப்பிலிருக்கும் பதிவுகளையும் வாசிக்கின்றேன். எல்லாமே பொக்கிஷங்கள் தான். வீண் அரட்டைகள், அவற்றுக்கு பின்னூட்டங்கள், கண்டனங்கள், வசைகள் என்று சப்புஞ் சவறும் நிறைந்து காணும் இணைய தளங்கள் மத்தியில் சிறப்பான, பயன்மிக்கதோர் வலைதளமாக jeyamohan .in மகுடம் சூடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9442

பாலாவுக்கு விருது

சேது மூலம் பாலா உருவாக்கிய ஒரு திறப்பு இன்று வரை தமிழில் யதார்த்தவாத சினிமாக்களுக்கான வாசலாக நீடிக்கிறது. நான்கடவுள் வரை தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டிருக்கும் கவனம் இன்றும் படைப்பாளிகளுக்கு ஒரு முன்னுதாரணம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6873

நான் கடவுள்

நான் வசனம் எழுதி பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு  தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநராக தேசிய விருது பாலாவுக்கு அளிக்கப்படுகிறது. பாலாவுக்கு நண்பராகவும் இணைந்து பணியாற்றியவர் என்ற முறையிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6350

நான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்

போத்திவேலுப்பண்டாரம் மேல் முதல் சில அத்தியாயங்களுக்குக் கோபம்தான் வந்தது. ஆனால் அவன் தொழிலையும் மீறி அவனையும் புரிந்துகொள்ள முடிந்தது தொடர்ந்த அத்தியாயங்களில். போத்திவேலுப்பண்டாரத்துக்கு இருந்த உருப்படி வியாபார அறிவு தாண்டவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மலையாளத்தானின் மாட்டுக்கறி உணவையும் மீறித்தான் அந்த அறிவே வருகிறது. பண்டாரம் உருப்படிகளை பெற்கவைத்துதான் உருவாக்கினான் – வளர்ந்தவர்களை உருமாற்றுவதை கவலையோடுதான் பார்த்தான். தாண்டவனுக்கு அதுதான் தொழிலே. தாண்டவன், கடவுளால் தண்டிக்கப்படவே படைக்கப்பட்டவன். அவன்மேல் கோபம் தவிர வேறெந்த உணர்ச்சியும் ஏற்பட்டுவிடலாகாது என்பது எழுதிவைக்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3814

இரண்டு சில்லறைக் கருத்துக்கள்

அன்புள்ள ஜெ,   காலச்சுவடு ஏப்ரல் இதழில் அகோரிகளுக்கும் நான் கடவுள் என்ற கொள்கைக்கும் சம்பந்தமில்லை என்றும் அதுகூடத் தெரியாமல் நீங்கள் எழுதியிருப்பதாகவும் ஒருவர் சொல்லியிருக்கிறாரே. அதே இதழில் நீங்கள் எழுதிய ‘தேர்வு‘ கட்டுரையில் அரசுப்பள்ளிகளை பாராட்டவில்லை என்று ஒருவர் உங்களை பல பத்திகளுக்கு வசைபாடியிருக்கிறார், கவனித்தீர்களா?   சண்முகம்     அன்புள்ள சண்முகம்,   காலச்சுவடு இதழ் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகவே என் மீது அவதூறுகளையும் வசைகளையும் கொட்டிவருகிறது. அனேகமாக எல்லா இதழிலும்.    …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2302

நான் கடவுள் : சில கேள்விகள் 2

 நான் கடவுள் பற்றிய சில விமரிசனங்களைக் கண்டேன். அது ‘மூன்றாம்பிறை‘ போல ‘உதிரிப்பூக்கள்‘ போல இல்லை, அவையே நல்ல படங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ‘சேது‘ போல இல்லை என்று இன்னொரு கருத்து. பிதாமகன் போல இல்லை என்று இன்னொரு கருத்து. அவற்றில் உள்ளவை அன்றாட மானுட உணர்ச்சிகள் நான்கடவுளில் அவை இல்லை   படங்களுக்கு அவற்றுக்கே உரிய அழகியல் உள்ளது. நான் கடவுளின் அழகியல் இருண்ட அழகியல். மென்மை, நெகிழ்வு, உன்னதம், கவித்துவம், காவியசோகம் எதுவுமே இங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1873

நான் கடவுள் சில கேள்விகள்.1

    நான்கடவுள் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அதைப்பற்றிய விவாதங்களை தவிர்க்கலாமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆகவே பெரும்பாலான கடிதங்களைத் தவிர்த்துவிட்டேன். பாலா ஒரு விஷயம் சொல்வதுண்டு– சினிமா கோடிக்கணக்கான பேரைச் சென்றடையும் ஓர் ஊடகம். அதைப்பார்ப்பவர்கள் பலவேறு மனநிலைகளில் அறிவுநிலைகளில் பண்பாட்டுச்சூழலில் வாழ்பவர்கள். அவர்கள் பல்லாயிரம் தரப்பை உருவாக்கிக் கொள்வார்கள். அவற்றை எல்லாம் எதிர்கொண்டு விவாதிக்க எழுத்தாளன் முயன்றான் என்றால் அவனால் வேறு எதையுமே செய்யமுடியாது. என. அதை இப்போதுதான் உணர்கிறேன்.   மேலும் சினிமாவில் பல்வேறுபட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1869

நான் கடவுள்

அன்புள்ள ஜெ, நான் கடவுள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? குமரன்’ சென்னை அன்புள்ள குமரன், நான் கடவுளின் வசூல் வரைபடத்தை ஒரு வினியோகஸ்த நண்பர் சொன்னார். முதல் மூன்றுநாள் முழுமையான வசூல். பெரிய ‘ஓப்பனிங்’ . ஆனால் படம் பார்த்தவர்களில் பாதிப்பேருக்கு படம் நிறைவை அளிக்கவில்லை. எதுவோ குறைகிறது, எதிர்பார்த்த்துபோல் இல்லை  , அருவருப்பாக இருக்கிறது என்பன போன்ற விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அடுத்த வெள்ளியன்று இதழ்களின் விமர்சனங்களால் மீண்டும் கூட்டம் ஏறியது. அடுத்த திங்களில் மீண்டும் சற்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1800

Older posts «