Tag Archive: நான்கு வேடங்கள்

கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நான் வ.அதியமான் ஏழெட்டு ஆண்டுகளாய் உங்களெழுத்தைப் பின்தொடரும் வாசகன். ஈதென் முதல் மடல். சமீபமாய் வாசித்த “நான்கு வேடங்கள்“எனக்குள் பல திறப்புகளைக் கொணர்ந்தது. 31 வயது நிறைந்தும் நாளிதுவரையில் வெறும் பகற்கனவுகளும் தீவிர இலக்கிய வாசிப்பும் செவ்வியல் இசை கேட்பதும் மெய்த்தேடல் சிந்தனையுமாய்த் திரிவதைத் தவிர வேறெதற்கும் துணிவற்ற; உலகியல் வாழ்வில் முழுமையாய்த் தோல்வியடைந்தவன். என் நிலைக்குத் தாழ்வுமனப்பான்மையும் ஆளுமைக்குறைவும் துணிவின்மையும் காரணங்கள் என்பதை சமீபமாகவே தெளிந்தேன். என் வளரிளம்பருவம் முழுதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35462

நான்கு வேடங்கள்-கடிதங்கள்

அன்பு திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, நன்றிகள் பல! என்னுடைய மிகக் குழப்பமான ஒரு காலகட்டத்தில் உங்களுடைய ‘நான்கு வேடங்கள்’ பதிவைப் படிக்க நேர்ந்திருக்கிறது. எனக்குள் இருந்த ‘சமநிலைக் குலைவு’ பற்றி யாரிடமும் பேசுவதற்குக் கூட அச்சமாக இருந்தது. சேனல் மாற்றுவது போல மனநிலைகளை மாற்றிக் கொள்வதென்பது மிகக் கடினமானவொன்றாய் இருந்தது. உங்களது பதில் என்னைத் தீவிர ‘சுய பரிசோதனை’க்கு உட்படுத்தியிருக்கிறது.சொல்லப் போனால் ஒரு வித ‘அகங்காரம்’ தான் உண்மையிலிருந்து தள்ளி வைத்திருந்தது என நினைக்கிறேன். ஒரு நம்பிக்கையும், தெளிவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29668