Tag Archive: நாத்திகம்

இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்

நீங்கள் நாத்திகவாதத்தை ஆத்திகம் என்ற போர்வையில் உள்ளே நுழைப்பதாகச் சொன்னார். நீங்கள் சொல்பவை ஆன்மீகத்துக்கு எதிரானவை என்றும் வாதம்செய்தார். நான் அத்துமீறி எதையும் கேட்கவில்லை என்றால் இதைப்பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/7018

நாத்திகமும் தத்துவமும்

அன்புள்ளஜெ தினமலர் கட்டுரையில் நாத்திக வாதம் என்பது நம் தத்துவமரபை அழித்து சடங்குகளை மட்டும் விட்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள் . தமிழக சூழலில் நாத்திகவாதம் அந்தஅளவு காத்திரமாக இருந்ததாக தெரியவில்லையே . பாற்கடல் எப்ப மோர்ஆகும் . நாவில்வாழும் சரஸ்வதி எங்குடாய்லட் போவாள், என்பது போன்ற எளிய வாதங்கள் எப்படி தத்துவதேடலை அழித்திருக்கமுடியும் உண்மையான நாத்திகவாதம்இங்குஇருந்திருந்தால்அதுகுறித்து சொல்லுமாறுகேட்டுக்கொள்கிறேன் பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சைக்காரன், நம் தத்துவக்கல்வி நம்முடைய மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. அதன் அழிவு எப்படி எப்போது நடந்தது என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64499

நாத்திகவாதம்- ஒருகடிதம்

ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். நாத்திகவாதம் எதிர்மறை மனநிலை உடையது என்று சொல்லி இருந்தீர்கள். ஏன் ஆசிரியர் அவ்வாறு சொல்கிறார் என யோசித்தேன். அப்புறம் சிவேந்திரன் கேள்வியை மீண்டும் படித்தேன். அதில் “ஆன்மிகரீதியான தத்துவச்சிந்தனையின் வளர்ச்சியில் கிடைக்கும் மனநிலைக்கும் நாத்திகவாதத்தால் ஏற்படும் மனநிலைக்கும்” என்று அவர் ஒப்பீடு செய்திருந்தது பார்த்தேன். அவர் கேட்டிருந்த கேள்வி எதிர்மறை மனநிலைத் தன்மை உடையதாய் இருந்தது. ஆன்மீக ரீதீயான தத்துவத்தின் மறுபக்கம் என நாத்திகம் வரையறை செய்கின்றார். அந்த நாத்திக வரையறைக்குள் இருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28873

நாத்திகம், இலக்கணம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம். தங்களின் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி. இந்துமதம் தொடர்பான ஆழ்ந்த அறிவு, அதை சரியான முறையில் வெளிப்படுத்தக்கூடிய மொழி ஆளுமை ஆகிய இரண்டும் உடையவராக கண்ணுக்கு எட்டியவரை நீங்கள் ஒருவரே தெரிகிறீர்கள். இpதை பயன்படுத்திக்கொள்வது கடமையாகும். எனவே உங்களின் நேரத்தில் சிறிது எடுத்துக்கொள்வதற்கு மன்னிக்கவும். உங்களின் பதில் சிறப்பான வரலாற்றுரீதியான ஒரு பின்புலத்தை அளித்தது. அத்துடன் நம் எழுத்தாளர்களின் காலத்தால் முன்னோடியான சிந்தனை வீச்சையும் அறிந்து கொண்டேன். அவர்கள் மீதான மரியாதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28160

கல்வாழை, கடிதங்கள்

கல் வாழை – கட்டுரைக்கு மிக்க நன்றி. தமிழ் நாத்திகத்தின் மிக முக்கியக் கொடை, ஜனநாயகத்தை எல்லோரிடமும் கொண்டு சென்றதுதான். உதாரணம் – எங்கள் குல நாவிதர் – சின்னக் காளி எங்கள் அப்பிச்சி (தாத்தா) வீட்டுக்கு வந்து சவரம் செய்வார். ஒரு சின்ன அப்பிச்சிக்கு, சர்வாங்க சவரம் வைக்கோல் புதர் மறைவில் நடந்ததை ஏதேச்சையாகக் கண்டு சிறு வயதில் அதிர்ந்தது இன்றும் நினைவில். ஆனால் அவர் மகன் எங்கள் வீடு வர மறுத்து விட்டார். “என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9448

தஞ்சை கடிதங்கள்

அனபின் ஜெயமோகன், தங்களுடைய தஞ்சை தரிசனம் 5 கட்டுரையை வாசித்தேன். ஆதித்த கரிகாலன் தொடர்பாக நீங்கள் சற்று விரிவாக எழுதினால் தெளிவு பெறுவேன். கல்கியின் பொன்னியின் செல்வன், பேரா.தி.வை.சதாசிவ பண்டாரத்தாரின் பிற்கால சோழர் சரித்திரம் நூலையே பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் கல்கியே பெருமைக்காக உத்தம சோழன் , ஆதித்த கரிகாலனைக் கொலை செய்யவில்லை என எழுதியிருப்பது தவறு. சதாசிவ பண்டாரத்தார் அவ்வாறு எழுதியிருக்கிறார். அதற்கு சில காரணங்களும் கூறியுள்ளார். முதல் காரணம், உத்தம சோழரின் தாயும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9019

கேள்வி பதில் – 70

மனதளவில் எதற்கானதாவதான தேடல், எந்த சக்தியையாவது மனதளவில் தன்னைவிட உயர்ந்ததாக நினைத்து நடுங்குவது, எதற்குமுன்னாலாவது தம்மை ஒன்றுமேயில்லாததுபோல் உணருவது, போன்றவைதான் இறைமையை உணருவது என்றால் உலகில் நாத்திகன் என்ற பிரிவே இல்லை; அவர்கள் சில குறியீடுகளை மட்டுமே கடவுள்களாகக் கொள்ள மறுக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மனதளவில் உள்ள தேடல், தன்னைச் சிறிதாக்கும் இயற்கையை, வெளியை, காலத்தைக் கண்டு மனம் விரிவது அல்லது அஞ்சுவது ஆகியவை அனைத்து மனிதர்களுக்கும் உரியவைதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124