Tag Archive: நாடக விழா

திரிச்சூர் நாடகவிழா- 3

திரிச்சூர் நாடகவிழாவில் டிசம்பர் இருபத்தெட்டாம் தேதி சிங்கள நாடகம். சிங்களநாடகமும் திரைப்படமும் பொதுவாகச் சிறப்பாகவே இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்க்க நேரிட்டதில்லை. சரத்சந்திரா ரிசர்ச் அண்ட் ஆக்டிவேஷன் ·பௌண்டேஷனின்ச் ஆர்பில் லலிதா சரத்சந்திரா இயக்கிய சிம்ஹபாஹ¤” என்ற நாடகம் எதிர்பார்த்தது போலவே மிக முக்கியமான ஓர் அரங்க அனுபவமாக அமைந்தது. சிங்கள வம்சவரலாற்றைச் சொல்லும் புராணநூலான மகாவம்சத்தி’ல் இருந்து எடுக்கப்பட ஒரு கதை இந்நாடகத்தின் கருப்பொருள். அதை புகழ்பெற்ற சிங்கள நாடக ஆசிரியரான எதிரிவீர சரத்சந்திரா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1128

திரிச்சூர் நாடகவிழா 2

என் வாழ்க்கையின் மறக்கமுடியாத மாபெரும் நாடக அனுபவங்களில் ஒன்று டிசம்பர் 26 அன்று நான் கண்ட பாகிஸ்தானி நாடகமான ”புல்லாஹ்” புகழ்பெற்ற பாகிஸ்தானி நாடக ஆசிரியரான சாஹித் நதீம் எழுதி பாகிஸ்தானின் முதல்தர நாடக இயக்குநரான  மதீஹா கௌர் இயக்கிய இசைநாடகம் இது. அரங்க அனுபவம் என்றால் இதுதான். நாடகமென்பது எத்தனை மகத்தான கலை என்று காட்டுவது இந்நாடகம். பதினேழாம் நூற்றாண்டில் பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த புல்லாஹ் ஷா பாகிஸ்தானிலும் இந்திய பஞ்சாபிலும் பெரும்புகழ்பெற்ற சூபி ஞானி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1123

திரிச்சூர் நாடக விழா

  டிசம்பர் இருபத்திரண்டாம் தேதி ஊட்டியில் இருந்து நண்பர்களுடன் காரில் வந்து கோவையில் இறங்கி பேருந்தில் நள்ளிரவு பன்னிரண்டுமணிக்கு திரிச்சூருக்கு வந்தேன். மலையாள திரைக்கதையாசிரியரூம் இயக்குநருமான லோகித் தாஸ் காரில் வந்து கூட்டிக்கொண்டு சென்றார். அவரது வீட்டுக்கு சென்றேன். லோகி இயக்க மோகன்லால் நடிக்கவிருக்கும் பீஷ்மர் என்ற படத்துக்கு திரைக்கதை எழுதுவதற்காக லோகி அங்கே தங்கியிருந்தார். ஊட்டியில் இருந்து வந்ததனால் எனக்கு திரிச்சூரில்  அவ்வளவாக குளிர் தெரியவில்லை. சென்றதுமே சமகால மலையாள இலக்கியத்தைப்பற்றி பேச ஆரம்பித்து விடியற்காலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1117