Tag Archive: நாடகம்

பாவ மௌனம்

1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவ ஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/791

எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்

வணக்கம், ஐயா! பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் [ குறிஞ்சி குழு ] உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு நடுவர் தேர்வில் முதலாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இந்த பெருமையெல்லாம் தங்கள் எழுத்துக்களின் பெருமையையே பிரதிபலிக்கும்.நன்றி. கோமதி காசிநாதன் more photos

Permanent link to this article: https://www.jeyamohan.in/48767

தமிழ்த்திரையும் இசையும்

ஜெ, உங்கள் இளையராஜா கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையில் மட்டுமே உயர்தரமான திறமை வெளிப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். அதை விளக்க முடியுமா? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? ஜெயராமன் ஜெயராமன், சினிமா நமக்கு ஒரு புதிய கலை. மானுடத்துக்கும் அது ஒரு புதிய கலைதான். அது ஒரு கூட்டுக்கலை. ஓவியம் புகைப்படம் நாடகம் இசை என பலகலைகளின் கலவை அது. உலகில் வெவ்வேறு பண்பாடுகளில் சினிமா உருவானபோது அப்பண்பாடுகளில் ஏற்கனவே இருந்த கலைகளை எடுத்துக் கலந்துகொண்டு தன் கலைவடிவத்தை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31282

ஞாநியின் இரு நாடகங்கள்

பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு ஞாநி மொழி மாற்றம் செய்திருக்கும் இரு நாடகங்கள் மே 2 ஞாயிறு அன்று நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சே அரங்கில் நிகழ உள்ளன.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7220

மரபும் வாசிப்பும்

ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கும்போது வாசகன் நிரப்பிக்கொள்ள வேண்டிய இடைவெளிகள் உண்டு. அந்த இடைவெளிகளால் ஆன ஒரு சொந்த பிரதியை அந்த படைப்பில் இருந்து அவன் உருவாக்கிக் கொள்ளுவான்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6993

பதுமை (நாடகம்)

விதி என்றால் பல்லாயிரம் மாந்தரின் ஆசைகளும், கனவுகளும், கோபங்களும் கலந்து ஒன்றாகி ஓடும் பெரும் நீரோட்டம். நம் வாழ்வு அதில் ஒரு சிறு சருகு. நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. நமது ஆசைகளும் கோபங்களும் தர்மத்தின் விதிகளுக்கு இசைகின்றனவா என்று பார்த்துக் கொள்வது தவிர, ஏனென்றால் விதி தர்மத்துக்குக் கட்டுப்பட்டது

Permanent link to this article: https://www.jeyamohan.in/6999

வடக்குமுகம் [நாடகம்] – 6

(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்) நிழல்: மீண்டும் நீ தவறவிட்டு விட்டாய். பீஷ்மர்: (மெதுவாக திரும்பி நிழல்கள் அளித்த தன் முதிய வேடத்தை எடுத்து அணிந்தபடி) ஆம். ஆனால் அது மட்டுமே சாத்தியம். நிழல்: ஏன் ? பீஷ்மர்: ஏனெனில் இது காலத்தின் இக்கரை. இங்கு இருந்து நாம் கூவும் எதுவும் மறுகரையில் ஒலிக்காது. (அம்புப்படுக்கையில் கால்களை நீட்டிக் கொள்கிறார்) ஆனால் இந்த அம்புகளின் எரியும் வலியை நான் என் உடல் முழுக்க உணர்ந்து கொண்டிருந்தேன் அப்போது. நிழல்: …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6159

வடக்குமுகம் [நாடகம்] – 5

[கர்ணன் அரங்கில் நுழைகிறான்) கர்ணன்: பிதாமகரை வணங்குகிறேன். பீஷ்மர்: உனக்கு புகழ் உண்டாவதாக. கர்ணன்: (அருகே வந்து) தாங்கள் என்னை ஒருபோதும் ஆயுளுடையவனாக இருக்கும்படி வாழ்த்தியதில்லை. பீஷ்மர்: அது ஏன் என உனக்கே தெரியும். கர்ணன்: இங்கு வந்து தங்களை சந்திக்கலாமா கூடாதா என்று என் மனம் ஊசலாடியது. பீஷ்மர்: உனக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். இந்த அம்புகள் அர்சுனனுக்குரியவை. கர்ணன்: பிதாமகரே. பீஷ்மர்: இனி நீ ஆயுதமேந்தலாம் அர்ஜுனனை வென்று அஸ்தினபுரியை கைப்பற்றலாம் . . . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6158

வடக்குமுகம் [நாடகம்] – 4

[பீஷ்மரது  நிழல் அவர் தோளைத் தொடுகிறது.) நிழல்: உன் உடைகள். உன்னுடைய முகம் இதோ. பீஷ்மர்: உம் (பெருமூச்சுடன் கை நீட்டுகிறார்) நிழல்: எந்த வேடங்களும் சீக்கிரமே நம் இயல்புகளாக மாறி விடுகின்றன. (பீஷ்மர் பதில் கூறாமல் மெல்ல தன்னுடைய உத்தரீயம் கச்சை ஆகியவற்றை களைந்து நிழலுக்கு தருகிறார். இன்னொரு நிழல் அவரது நரை முடியையும் தாடியையும் அளிக்கிறது. வயோதிக நடையுடன் மீண்டும் வந்து தன் அம்புப்படுக்கைமீது படுத்துக் கொள்கிறார். நிழல்கள் கலைந்தாடுகின்றன. போர்க்களத்து ஒலிகள் தொலைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6157

வடக்குமுகம் [நாடகம்] – 3

அம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6156

Older posts «