Tag Archive: நாஞ்சில் நாடன்

திருமூலம்

“ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப்பார்க்க விழிகளை சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல்நிக்கப்பட்ட எடத்திலே பீயை போட்டு வைக்கது நீருதானா?” என்றார் ஆட்டோ ஓட்டுநர். புன்னகையுடன் பார்வையை திருப்பிக்கொண்டேன். ஆ, கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் அல்லவா? மீண்டும் திரும்பிப்பார்த்தேன். கும்பமுனி மப்ளரால் டீ டம்ளரை சுற்றிப் பிடித்து ஊதி ஊதி குடித்துக்கொண்டிருந்தார். கன்யாகுமரி மாவட்டத்தின் இயல்புகளில் ஒன்று இது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/119459

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

  ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக உள்ள அல்லது மாற்றாக உள்ள கதாபாத்திரம் ஒன்றிலும் அதே ஆசிரியனைக் கண்டடையலாம். தல்ஸ்தோயின் பியரியல் (போரும் அமைதியும்) தஸ்தயேவ்ஸ்கியின் திமித்ரியில் (கரமஸோவ் சகோதரர்கள்) தாராசங்கர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/391

தாடகைமலைமனிதர்- கடிதங்கள்

  அன்பு ஜெ, வணக்கம்.நலமா? சிங்கப்பூருக்கு வந்துவிட்டுச்சென்றபின் உங்களைத் தனிமடல் வழி தொடர்பு கொள்ளவில்லை எனினும் வெய்யோன் வழி தினமும் உங்களைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். மனம் நெகிழ்ந்து, கதறுதலுக்குத்தயாராகி ,வெளிப்படுத்தத் தயங்கி, இறுகிக்கிடந்த தருணங்கள் வெய்யோனின் மகனுக்குரியவை. மிகவும் நன்றி. மண்ணுக்கு அடியில் வாழும் உரகர்களின் கதை பலவேறு விரிவுகளைக் கொண்டு வருகின்றது. சிங்கப்பூரிலும், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரைக்கடியில்தான் வாழ்வுவிழைவோடு ஓடிக்கொண்டிருக்கிறோம் ரயில்களில். வருகிற மார்ச் 5ஆம் தேதி மாலையில், சிங்கப்பூரில் வாசகர் வட்ட ஆண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85092

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)

[முந்தைய பதிவின் தொடர்ச்சி…]   மகிடபதியை நாஞ்சில் நாடன் வெறுப்பது இயல்பே. அவரை ஒருவகை கோமாளியாகவே அவர் கருதிவந்திருக்கிறார். அவருக்கு எப்படி எங்கே வருவதென ஒரு வரைமுறை கிடையாது. சிவஞான போதமும் கைவல்யநவநீதமும் கற்ற முதுபெரும் சைவர் மனகாவலப்பெருமாள் பிள்ளை விஜிடபிள் பிரியாணியை விழுங்கும்போதுதான் மகிடத்தின் கனத்த குளம்படியோசை கேட்கிறது. என்ன சாஸ்திரம் படித்து என்ன புண்ணியம்? “…இல்லாட்டியும் வயசானா வீடடங்கி கெடக்கணும். கிட்டுதேண்ணுட்டு அள்ளி இப்டியா விழுங்குகது?” என்று இளைய தலைமுறைக்கு ஏகடியப்பொருளாகி புளியமரத்தில் தாழ்ந்தசாதிப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/139

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)

[முந்தைய பதிவின் தொடர்ச்சி… ]   வேலையும் மனைவியும் அமைந்தவன் பாக்கியசாலி என்பார்கள். நாஞ்சில் நாடனுக்கு ஆச்சி அமைந்தது நல்லூழ் – இரண்டுபக்கமும்தான். ஆனால் அவருக்கு வேலை அமையவில்லை. ரசனையும் நகைச்சுவையும் உடையவரான நாஞ்சில் நாடன் உள்ளே செலுத்தப்பட்ட சட்டையும் பாண்ட்டும் பூட்சும் ப்ரீ·ப்கேஸ¤மாக ஊர் ஊராக அலைந்து, மில் கம்பெனிக்காரர்களைச் சந்தித்து, பச்சைப்புன்னகை பெய்து, ரெடிமேட் ஆங்கிலத்தில் பேசி ,அவர்களுடைய கடுமையான முகங்களில் மெல்லமெல்ல புன்னகையைத் தருவித்து, சரக்குக்கு ஆர்டர் எடுத்து வந்து, மேலும் எடுத்திருக்கலாமே என்று மேலதிகாரியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/138

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)

[முந்தைய பதிவின் தொடர்ச்சி… ]   நாஞ்சில் நாடன் எம்.எஸ்.ஸி படிப்பை முடித்த பிறகு வேலைதேடி பம்பாய்க்குச் சென்றார். அதற்கு முன் அவரது நகர அனுபவம் என்பது மாதுரை நகரின் ‘கிழ தாசி போன்ற’ வைகையும் தூசியும் கருமை படிந்த கோபுரங்களும் சுந்தரேஸ்பரரின் விபூதியும்தான். அவசரமாக நாகர்கோயில் ஒழுகிணசேரி தையல்காரரிடம் தைத்த, எல்லா விதமான சுப்ரமணியன்களுக்கும் பொருந்தகூடிய பாண்ட்டும் சட்டையும் அணிந்து ஒல்லியான உடல் மீது பதைக்கும் கண்கள் கொண்ட பெரிய தலையும் பவ்யமான சிரிப்புமாக பம்பாய்க்குச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/137

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)

[முந்தைய பதிவின் தொடர்ச்சி…]   நாஞ்சில் நாடன் ஒரு நிரந்தரப் பயணி. ந.முத்துசாமியின் ஒரு கதாபாத்திரம் தாசியை பார்க்க செம்பொனார்கோயில் போகவேண்டும். ஆனால் ஊஞ்சலில் இருந்து எழுந்திருக்க சோம்பல். ஊஞ்சலில் ஆடியபடியே ‘இந்த ஊஞ்சல் மட்டும் பின்னால் வராமல் முன்னாலேயே போயிருந்தால் இந்நேரம் செம்பொனார் கோயில் போயிருக்கும்’ என சிந்திக்கும். [செம்பொனார் கோயில் போவது எப்படி?] கிட்டத்தட்ட அதுதான் நாஞ்சில் நாடனின் பயணங்கள். பெண்டுலப்பயணம். பம்பாய்க்கும் திருப்பி வீரண மங்கலத்துக்கும். நாஞ்சில் நாடனின் பயணப்பையை நான் பீதியுடன் பார்ப்பதுண்டு. பொதுவாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/136

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)

  1991ல் நான் பாலகோட்டு [தருமபுரி மாவட்டம்] சுந்தர ராமசாமியைப் பார்க்க நாகர்கோயில் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போது சுந்தர ராமசாமி கோடு போட்ட உயர்தர முழுக்கைச் சட்டையை பாண்ட்டுக்குள் விட்டு நல்ல இடைப்பட்டை கட்டி காலுறை அணிந்து பவ்யமாக அமர்ந்திருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இனிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். நேர்த்தியான உடை,  பவ்யம் ,இனிய புன்னகை…. யாரவர்? மனிதர்களைப் பற்றிய என் நுண்ணுணர்வால் உடனே அவரை ஒரு எல்.ஐ.ஸி முகவர் எனப் புரிந்துகொண்டேன். இந்த வயது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/135

மோஹித்தேவும் மருந்தும் மிதவையும்

அன்புள்ள ஜெ, ஊட்டி முகாம் அளித்த ஆனந்தத்தை இன்னும் நினைத்துக்கொண்டேயிருக்கிறேன். வீட்டு ஞாபகமே இல்லாமல் நண்பர்களோடு பேசுவதும் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்ததுமான நாட்கள். மனைவியையும் குழந்தையையும் மச்சினன் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். ஊட்டியிலிருந்த மூன்று நாட்களும் அவளுடன் பேசவில்லை. 4 மாத கர்ப்பமாக இருப்பவளிடமும் 4 வயது பெண்ணிடமும் பேசத்தோன்றாமலிருந்தது என்னவொரு மனநிலை என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு கால் நடக்க முடியாமல் போயிருந்தது. தினமும் ஆட்டோவில் போய் டாக்டரை பார்த்து வந்திருந்தார்கள். இவர்கள் யாருக்குமே என்மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75476

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

Older posts «