Tag Archive: நாஞ்சில்நாடன்

முன்னுரையியல்

நாஞ்சில்நாடன் சமீபமாக படைப்பூக்கம் மிக்க முன்னுரைகளைத்தான் எழுதுகிறார் என்று அவரது தீவிர வாசகர்கள் சொன்னார்கள். சமீபத்தில் அவரது இந்த முன்னுரையை- பின்னட்டையில் – வாசித்தேன் ‘இலக்கியம் ,மொழி ,நடை, கருத்து என எதைப்பற்றியும் அக்கறைப்படாமல் தோன்றியபடி எழுதப்பட்டது. அப்புறம் படித்துவிட்டு என்னைக் கேட்கக்கூடாது’ என்று அவர் சொல்வதாக அர்த்தம் இல்லை. ‘எதைப்பற்றியும் கவலைப்படாத எழுத்து’ என்னும் புதுவகை அழகியலை மட்டுமே நாஞ்சில் முன்வைக்கிறார் என நான் புரிந்துகொள்கிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/81100

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79847

புலவர் பாடாது ஒழிக!

நாஞ்சில்நாடன் எழுதிய கட்டுரை. காலம் இதழில் வெளிவந்தது புலவர் பாடாது ஒழிக http://nanjilnadan.com/2015/07/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/

Permanent link to this article: https://www.jeyamohan.in/77275

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69818

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68633

மீண்டும் கும்பமுனி

கோமணம் என்ற சொல்லில் இருந்து கௌபீனசுத்தன் என்ற சொல்லுக்குத் தாவியது கும்பமுனியின் சிந்தை. முதலில் கௌபீன சுத்தன் என்றால் கோமனத்தை நன்றாக அலக்கி உடுப்பவன் என்றுதான் நினைத்திருந்தார்.பிறகுதான் தெரிந்தது பரஸ்த்ரீ சகவாசம் இல்லாதவன் என்று. எந்தப்பெண்ணுடனும் கலவிசெய்யாதவனுக்கு என்ன பெயர்? கௌபீன அதிசுத்தனா? நாஞ்சில்நாடனின் புதிய கும்பமுனிச் சிறுகதை. டென்னிஸ் எல்போவும் டிரிக்கர் ஃபிங்கரும் அவரது இணையதளத்தில் வழக்கம்போல மையமில்லாமல் தாவிச்செல்லும் விளையாட்டு. கதையைப்பற்றியே கதை. உள்பாய்ச்சல்கள்.நக்கல்கள். நேராக பழைமையை செவ்வியலை முற்போக்கை எல்லாம் குத்திச்செல்லும் சொல்விளையாட்டுக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68282

நாஞ்சில்நாடன் பட்டியல்

ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் சென்றடைய வாழ்த்துக்கள். இதில் அடிமுதல் முடிவரை அசட்டுத்தனம் என்று சொல்லத்தக்க வினாக்கள் இரண்டு. எந்த இலக்கிய விவாதத்திலும் நாலைந்து கோயிந்துக்கள் கிளம்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56339

தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில்

‘பேரிலக்கியமென்பதன் இலக்கணங்களில் முக்கியமானது அதை மரபின் அடையாளமாக மரபுவாதிகளும் மாற்றத்தின் அறைகூவலாக புதுமைவாதிகளும் ஒரேசமயம் முன்வைத்துக்கொண்டிருப்பார்கள்’ நித்ய சைதன்ய யதியின் ஒரு வரி. அது தாந்தேவுக்கு மிகவும்பொருந்தும் என்பார். கம்பனுக்கு இன்னும்கூட. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் யாரெல்லாம் கம்பனை விரும்பிக்கற்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் வியப்பேற்படும். மரபார்ந்த கவிராயர்களுக்கு அது தமிழின் உச்சம். ஆனால் புதுமரபு சமைத்த பாரதிக்கும் அது முன்னுதாரணமான நூல்தான்.முடிவின்மை என்பதை எட்டமுடிந்த தமிழ் பேரிலக்கியம் அது. மரபான முறையில் கம்பனை வாசித்து நயம்பாராட்டல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37421

நாஞ்சில்நாடன் அமெரிக்கப் பயணம்

அன்புள்ள ஜெயமோகன் வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமெரிக்காவிலும் கனடாவிலும் பயணித்து வாசகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளிலும், அவரை கவுரவிக்கும் சில பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ள இருக்கிறார். அவரது அமெரிக்க/கனடா பயணம் குறித்தான கீழ்க்கண்ட நிரலை உங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 30 அன்று நாஞ்சில் நாடன் கலந்து கொண்டு உரையாற்றும் பொது நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் அனேகமாக ஜூன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27355

நுண்தகவல்களும் நாஞ்சிலும்

நாமறியும்தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன். ஒரு கடையில் சைதன்யாவுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுக்க கடைப்பெண்ணிடம் கேட்டேன். சாக்லேட் எடுத்தபோது நாலைந்து பொருட்கள் நழுவி விழுந்தன. நான் அடாடா என்றேன். கடை உரிமையாளரான பெண்மணி சிரித்துக்கொண்டு வந்து ‘பரவால்லை…என்ன சார் வேணும்?’ என்றாள். அவளே சாக்லேட் எடுத்துத் தந்தாள். திரும்பிச் செல்லும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21485

Older posts «