Tag Archive: நாகார்ஜுனன்

எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு நல்வரவு

முதலில் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதவந்திருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த எதிர்மறையான பதிலை எழுதுவதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவும் சரி, இதன் பின் நான் ஏதாவது விவாதிப்பேன் என்றாலும் சரி, அவையெல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான மதிப்புடனேயே முன்வைக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் நான் அந்த மதிப்பை விட்டுவிடுவதாக இல்லை. அதற்குக் காரணம், எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது நான் கூர்ந்து வாசித்து மானசீகமாக விவாதித்து வளர உதவிய சிலரில் அவரும் ஒருவர். தமிழிலக்கியச்சூழலில் மெல்லிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21926

நாகார்ஜுனன் கூட்டம்

நாகார்ஜுனன் எழுதி ஆழி வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பான நளிர் என்கிற நூலுக்கான விமர்சனக்கூட்டம் வரும் வெள்ளிக் கிழமை, அக்டோபர் 2, 2009, காலை 10.00 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மாவட்ட நூலகத்தின் சிற்றரங்கத்தில் நடைபெறவுள்ளது. பேராசிரியர்கள் வீ.அரசு, தமிழவன், எழுத்தாளர்கள் சண்முகம், வாசு, மற்றும் நூலாசிரியர் நாகார்ஜுனன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம். அன்புடன் செ.ச.செந்தில்நாதன் பதிப்பாளர் ஆழி 99401 47473

Permanent link to this article: https://www.jeyamohan.in/4284

நகைச்சுவையும் நாகார்ஜுனனும் : ஒரு பதில்

அன்புள்ள ஜெயமோகன் நலமா உங்கள் எல்லோருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மின் அஞ்சலை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். நம்மிடையே எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு என்றாலும் உங்கள் எழுத்துக்களை வாசிப்பவர்களில் நானும் ஒருவன் ‘திலகம்’ வாசித்தேன். குமரித்தமிழில் நன்றாகவே இருக்கிறது. என்னை இழுத்து எழுதியதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் ஆனால் என் கடந்த காலத்தை ஜாதிக்கண்ணோட்டத்தில் எழுதிய அந்த வார்த்தை பிரயோகத்தை ‘நீங்கள்’ பாவிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை எப்போதாவது சந்திக்கும்போது நிறைய பேசலாம். நாகார்சுனன் * அன்புள்ள நாகார்ஜுனன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/163