Tag Archive: நாகம்

நாகம்

அன்பின் ஜெ ஒரு சாமானியனின் முதல் கடிதத்திற்கு பதில் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்பதைப் போன்ற முறைமை சொற்களோடு எழுதி எனக்கு பழக்கமில்லை, போலவே முப்பது வருடத்திற்கும் மேலாக எழுத்துலகில் இருக்கும் உங்களுக்கும் இது போன்ற முறைமை சொற்கள் அயர்ச்சியைத் தான் கொடுக்கும் என்பது என் அபிப்ராயம் எழாம் உலகமும் ஏழாம் உலகத்தினைப் பற்றியும் எழுதும் உங்களிடம் நாகப்பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்பது குழந்தைத்தனம் என்பதால் கேள்வியை வேறுமாதிரியாக கேட்கிறேன் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/94825

நாகமும் டி எச் லாரன்ஸும்

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் சிறுகதை நாகம் வாசித்தேன். ஆச்சரியமாக அதற்கும் டி எச் லாரன்ஸின் கவிதைக்கும் இடையே அணுக்கமான பொது அம்சங்கள் உள்ளன 1923ல் எழுதப்பட்ட கவிதை அஸ்வத் அன்புள்ள அஸ்வத், ஆச்சரியம் ஏதுமில்லை. பாம்பு மேலைநாட்டிலும் இங்கும் ஆண்மை, காமம் போன்றவற்றின் குறியீடுதான். பல கதைகளை, கவிதைகளை இதே படிமத்துடன் காணமுடியும் என நினைக்கிறேன் அங்கே புள்ளோர்குடம் இருக்காது, அவ்வளவுதான் ஜெ Snake A snake came to my water-trough On a hot, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75843

நாகம் (புதிய சிறுகதை)

  வாசற்கதவு தட்டப்பட்டது. கூந்தலை வாரிச்சுருட்டிக் கொண்டாள். கொண்டையை முடிந்தபடி கதவை அணுகிக் கொண்டியை எடுத்தாள். இற்றுப்போன மாம்பலகைக் கதவு. அதன் இடுக்குகள் வழியாக குளிர்க் காற்று நாலைந்து இடங்களில் பீறிட்டது. குளிர்ந்த நீர்த் தாரைகளின் தொடுகை போலிருந்தன அவை. வெளியே மழை பெய்து ஓய்ந்திருக்கவேண்டும். கதவைத் திறந்து, வெளியிருளில் மினுங்கிய இரு கண்ணாடிக் கண்களைப் பார்த்தாள். நாகம் ஆளுயரத்திற்குத் தரையிலிருந்து பத்தி தூக்கி நின்றிருந்தது. வெளிக்காற்றில் நீர்த்திவலைகள் கலைந்திருந்தன. முற்றத்து மரங்களெல்லாம் கிழக்குப் பக்கமாகச் சாய்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75512

நாகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “நாகலோகம்” என்றால் என்ன? நமக்கும் நாகங்களுக்கும் ஏன் அதனை தொடர்பு? நாகலோகம் பற்றி இன்னும் பல இடங்களில் காணமுடிவதால் ஒருவேளை பாரதம் எழுதப்பட்ட காலங்களில் பாம்பு மிகப்பரவலான விலங்காக இருந்து அதனாலோவென்று தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை. அல்லது ஏன் அந்த சொல்லாடல் என்று சற்றே விளக்க முடியுமா? மிக்க நன்றி. அன்புடன், TKB காந்தி அன்புள்ள காந்தி இதைப்பற்றி பல ஆய்வுகள் உள்ளன. சமூகவியல் நோக்கிலும் அழகியல் நோக்கிலும் மெய்யியல் நோக்கிலும் சமூகவியல்நோக்கில் இப்படிச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60892

கடி

எங்கும் இருக்கும் என்ற அச்சமே அது வளைவல்ல நெளிவின் விரைவல்ல பறக்கும் நாக்கோ விழித்த கண்களோ விஷமோ அல்ல பாதாளத்தின் சாட்டை சொடுக்கல் என்றன புராணங்கள். பின்பு பரம்பொருளுக்குக் கீழே மடிந்த காலம் என்றன பரமன் கழுத்தின் படம் என்றன. நெளியும் தீ காமத்தில் புடைத்தெழுந்த வினாக்குறி புற்றுக்குள் சுருண்ட ஒற்றைச்சொல் தன் வாலைத் தான் விழுங்கும் முடிவிலி இடிபாடுகளின் மௌனத்தை ஏந்திய சிலைகளின் கண்களும் அவற்றைப்போல விழிக்கின்ன்றன. அனந்தகால நாகம் கடிக்குமோ பெருவெளியை?

Permanent link to this article: https://www.jeyamohan.in/29611