Tag Archive: நவீன தொழிற்சங்கம்

உயர்தொழில்நுட்ப ஊழியர்களுக்கான சங்கம்

நவீன அடிமைமுறை பற்றி நான் எழுதிய குறிப்புக்கு தொடர் எதிர்வினைகள் வந்தன. எல்லா தரப்பையும் பிரசுரித்திருக்கிறேன் என் கருத்துக்களைச் சுருக்கமாக இப்படித் தொகுத்துச் சொல்கிறேன் கணிப்பொறி- உயர்தொழில்நுட்ப துறையினர் அடக்கிவாசிக்கவேண்டுமா? கணிப்பொறித்துறை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும், இருப்பதில் நிறைவடையக் கற்க வேண்டும் போன்ற கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. அது ஒருவகை மத்தியவர்க்க மனநிலை. இயலாமையின் தத்துவம் தன் வேலையில் நிறைவுக்காக, அல்லது தன் வாழ்க்கை இலட்சியத்துக்காக ஒருவர் எளிய வாழ்க்கையை மேற்கொள்வதில் பொருளுண்டு. இயலாமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69268